News Update :
Home » » நித்யானந்தாவால் என் உயிருக்கு ஆபத்து: பெண் சீடர் ஆர்த்திராவ் பரபரப்பு புகார்

நித்யானந்தாவால் என் உயிருக்கு ஆபத்து: பெண் சீடர் ஆர்த்திராவ் பரபரப்பு புகார்

Penulis : karthik on Friday, 28 September 2012 | 01:33


நித்யானந்தாவால் என் உயிருக்கு ஆபத்து: பெண் சீடர் ஆர்த்திராவ் பரபரப்பு புகார் நித்யானந்தாவால் என் உயிருக்கு ஆபத்து: பெண் சீடர் ஆர்த்திராவ் பரபரப்பு புகார்

சென்னை, செப். 28-

சென்னை தேனாம்பேட்டை போபஸ் ரோடு, 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஆர்த்திராவ். இவர் அமெரிக்காவில் கணவருடன் வசித்தபோது அடிக்கடி அங்குள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்றார். அப்போது நித்யானந்தாவின் சீடர் ஆனார்.

பெங்களூர் வந்து பிடரி ஆசிரமத்தில் நித்யானந்தாவுடன் தங்கி இருந்தார். அப்போது நித்யானந்தா தன்னை கற்பழித்து விட்டதாக ஆர்த்தி ராவ் பரபரப்பு புகார் கூறினார். இந்த வழக்கிலும், நித்யானந்தா மீதான ஆபாச வீடியோ வழக்கிலும் ஆர்த்திராவ் முக்கிய சாட்சியாக உள்ளார்.

நித்யானந்தா பற்றி ஆபாச வீடியோ வெளியிட்ட அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பனுக்கு ஆர்த்திராவ் உதவி செய்ததாகவும் கூறப்பட்டது. தற்போது ஆர்த்திராவ் சென்னையில் இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று மதியம் ஆர்த்திராவ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 26-ந்தேதி மாலை 4 மணி அளவில் நாங்கள் வசிக்கும் வீட்டு காம்பவுண்டில் தந்தையின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது ஒரு மனிதன் காரின் அருகில் வந்து சந்தேகப்படும் வகையில் ஏதோ செய்து கொண்டு இருந்தார். இதை கவனித்த எனது தாய் அவரிடம் வந்து என்ன செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் வேறு ஒருவரை பார்க்க வந்தேன் என்று கூறியவாறு செல்போனில் பேசிக்கொண்டே சென்று விட்டார். அதன் பிறகு அன்று இரவு 7 1/2 மணிக்கு ஒருவர் வந்து விட்டு காலிங்பெல்லை அழுத்தினார்.

அம்மா கதவை திறந்து விசாரித்தபோது, செந்தில் இருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார். அப்படி யாரும் இல்லையே என்று அம்மா சொன்னதால் தெரியாமல் வந்து விட்டேன் என்று அந்த நபர் சென்று விட்டார். பின்னர் 1/2 மணி நேரம் கழித்து இரவு 8 மணிக்கு மீண்டும் ஒருவர் வந்து காலிங்பெல்லை அழுத்தி சுஜாதா இருக்கிறாரா? என்று கேட்டார். அப்படி யாரும் இல்லை என்று சொன்னதும் தெரியாமல் வந்து விட்டேன் என்று கூறி போய் விட்டார்.

இவர்கள் நடமாட்டம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது குடும்பத்துக்கு இவர்களால் ஆபத்து நேருமோ என அஞ்சுகிறோம். நித்யானந்தா வழக்கில் நான் முக்கிய சாட்சியாக இருக்கிறேன். நித்யானந்தா தவிர வேறு யாரும் எனக்கு எதிரிகள் கிடையாது. அவர்தான் ஆட்களை அனுப்பி இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆர்த்திராவ் கூறினார்.

ஆர்த்திராவ் மீது நித்யானந்தாவும் ஒரு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அதில் லெனின் கருப்பனுடன் சேர்ந்து என்னை ஆபாச படம் எடுத்து கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் லெனின் கருப்பன் சரண் அடைந்தார். ஆர்த்திராவ் முன்ஜாமீன் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger