News Update :
Powered by Blogger.

குளியலறையில் +1 மாணவியை கற்பழித்தவர் கைது

Penulis : karthik on Saturday, 25 February 2012 | 05:02

Saturday, 25 February 2012

 

சேலம் அன்னதானப்பட்டி லைன்மேடு வேலுதெருவை சேர்ந்தவர் தர்மன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு செல்வி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற மகள் உள்ளார். இவர் குகை பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

இதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பாண்டியன் (28). இவர் செல்வியை காதலித்து வந்தார். கடந்த 12 ந்தேதி இரவு செல்வியை, பாண்டியன் பேசுவதற்கு தனது வீட்டின் குளியலறைக்கு அழைத்தார்.

இதையடுத்து அங்கு வந்த செல்வியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த பாண்டியன், நான் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவரை கற்பழித்து உள்ளார்.

இதையடுத்து செல்வி நடந்த சம்பவங்களை தனது தாய் லட்சுமியிடம் கூறினாள். அவர் பாண்டியன் வீட்டிற்கு சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டார். அதற்கு பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இதையடுத்து லட்சுமி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியன் அவரது தந்தை ராஜேந்திரன், தாய் கோகிலா, தாத்தா சுப்பையா ஆகியோரை கைது செய்தனர்.

comments | | Read More...

சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கல

 
 
 
சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று பத்மப்ரியா கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என் அப்பா ராணுவ அதிகாரி. அடிக்கடி இடம் மாற வேண்டி இருக்கும். இதனால் எனக்கு நண்பர்கள் குறைவு. புத்தகங்கள்தான் எனக்கு நண்பர்கள். சினிமாவுக்கு வரும் முன்பு மல்ட்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்த்தேன். கை நிறைய சம்பளம். அங்கேயே வேலை பார்த்திருந்தால், இத்தனை நேரம் நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்து திருமணமாகி செட்டில் ஆகியிருப்பேன். சினிமாவுக்கு வந்த பிறகு, வெளியுலக தொடர்பு குறைந்துவிட்டது. பெரும்பாலான நேரம் ஷூட்டிங் லொக்கேஷன்களிலும் மற்ற நேரம் ஓட்டல் அறைகளிலுமே கழிகிறது. சினிமாவை பொருத்தவரை மம்மூட்டி, மோகன்லால், திலிப், பிருத்விராஜ், ஜெயராம் போன்றவர்களுடன் நடிக்கிறேன். எல்லோருமே திருமணம் ஆனவர்கள். சினிமாவில் எனக்கு பொருத்தமான மாப்பிள்ளை யாரும் இல்லை. பொருளாதார சுதந்திரம் மட்டுமே எல்லா சுதந்திரத்தையும், முழு மகிழ்ச்சியையும் கொடுத்துவிடாது. வேலைக்கு போகும் பெண்கள் வீட்டுக்கு வந்ததும் தினசரி வேலைகளை கவனிக்க வேண்டி உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த பெண்ணுக்கு இரவில்தான் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும். எந்த ஆணும் குண்டான மனைவியை பார்ட்டிகளுக்கு அழைத்து செல்ல விரும்பவதில்லை. அதேநேரம் வீட்டு வேலையை பகிர்ந்துகொள்ளவும் பல ஆண்கள் முன்வருவதில்லை.



comments | | Read More...

சூர்யா,கார்த்திகாக காத்திருக்கும் சாந்தகுமார்

 


இயக்குன‌ரின் படம் என்று மௌனகுருவை சொல்லலாம். ஸ்கி‌ரிப்டின் நேர்த்திக்காக ஓடிய படம்.

மௌனகுருவை இயக்கிய சாந்தகுமார் ஸ்டுடியோ கி‌ரீன் ஞானவேல்ராஜாவுக்கு சொன்ன ஒன் லைன் அவருக்கு‌ப் பிடித்திருக்கிறது. உடனே நம்ம பேன‌ரில் படம் பண்ணலாம் என இழுத்துப் போட்டிருக்கிறார். ஸ்டுடியோ கி‌‌ரீனுக்கு சூர்யா, கார்த்தி தவிர்த்து மற்றவர்கள் அலர்‌ஜி. இவர்களில் ஒருவர்தான் நடித்தாக வேண்டும்.

சாந்தகுமாருக்கு கிடைக்கயிருப்பது சூர்யாவின் கால்ஷீட்டா இல்லை கார்த்தியின் கால்ஷீட்டா? சாந்தகுமாரைப் போல காத்திருக்க வேண்டியதுதான்.
comments | | Read More...

ரசிகர்களை பொரிந்துதள்ளும் ஹன்சிகா

 



கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார் நடிகை ஹன்சிகா. அவரை தொட்டுப்பார்க்க ரசிகர்கள் பலர் முண்டியடித்ததால் கைகளிலும், இடுப்பிலும் லேசான சிராய்ப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளானார். கோவை நகருக்கு வந்திருந்த ஹன்சிகாவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அவரை மிக அருகில் பார்க்கவும், தொட்டுப் பார்க்கவும் முண்டியடித்தனர். இதனால் திணறிப் போனார் ஹன்ஸிகா. பலர் அவரைக் கிள்ளினர். வேகமாக அவரைப் பிடித்து இழுத்ததால் அவர் உடலில் பல இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. இதனால் அலறித் துடித்த ஹன்ஸிகாவை பக்கத்திலிருந்த போலீசார் வந்து மீட்டனர். இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர். நல்ல வேளை போலீசார் வந்து மீட்டனர். நிச்சயம் இனி செக்யூரிட்டியை பலப்படுத்தினால்தான் வெளியில் செல்ல முடியும் என்றார். ஏற்கெனவே சென்னையில் இதே போன்ற அனுபவத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது
comments | | Read More...

புது இயக்குனருக்கு ஓகே சொன்ன கார்த்தி

 


நடிகர் கார்த்தி ஷங்கர் தயால் இயக்கத்தில் நடித்துவரும் படமான சகுனி படப்பிடிப்பின் கடைசி கட்டத்தை நெருங்கிவிட்டதால் சுராஜ் இயக்கத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.

இந்த படங்கள் முடிந்ததும் மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சாந்தகுமார் இயக்கத்தில் நடிக்கிறார். சாந்தகுமாரின் மௌனகுரு செம ஹிட். சாந்தகுமார் ஒரு நல்ல கதையை கார்த்தியிடம் கூறியதாகவும், கார்த்தி உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த படத்தையும் கார்த்தியின் உறவினரான பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் தயாரிக்கிறாராம். கார்த்தி நடிக்கும் படங்களின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருகிக் கொண்டே போகிறது.
comments | | Read More...

கார்த்தியின் படத்தில் இருந்து நாயகி விலகல்

 


கொலிவுட் நாயகன் கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படத்திலிருந்து நாயகி மேக்னா விலகியுள்ளார்.
கொலிவுட் நாயகன் கார்த்தி சகுனி திரைப்படத்திற்கு பின்பு சுராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் நாயகன் கார்த்தியுடன் நடிப்பதற்கு நான்கு நாயகிகளை இயக்குனர் சுராஜ் ஒப்பந்தம் செய்திருந்தார்.

கார்த்திக்கு ஜோடியாக முன்னணி நாயகி அனுஷ்கா நடிக்கிறார். இவரைத் தொடர்ந்து நிகிதா, மேக்னா, சனுஷா ஆகியோரை சுராஜ் ஒப்பந்தம் செய்திருந்தார்.

இந்நிலையில் மேக்னா இந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி மேக்னா கூறியதாவது, எனக்கு படத்தில் தரப்பட்ட வேடம் திருப்தியாக இல்லை. சுராஜ் என்னுடைய நண்பர்.

என்னுடைய கருத்தை சொல்ல வாய்ப்பு தந்தார். நான் படத்திலிருந்து விலக விரும்புவதாக தெரிவித்தபோது அதை ஏற்றுக்கொண்டார்.

மேலும் மற்றொரு படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றலாம் என்று சுராஜ் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

தற்போது மலையாள படங்களில் நடித்து வருவதாகவும் மேக்னா தெரிவித்துள்ளார்.
comments | | Read More...

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பாளராக புது அவதாரம்

 


தமிழில் பொல்லாதவன், ஆடுகளம் என இயக்கியது இரண்டு படங்கள் தான் என்றாலும், அதில் ஒரு படத்திற்கு தேசிய விருது வாங்கி சாதித்திருப்பவர் வெற்றிமாறன். பெயரிலேயே வெற்றியை கொண்டு, டைரக்ஷ்னில் வெற்றி கண்ட வெற்றிமாறன், அடுத்தபடியாக தயாரிப்பிலும் கால்பதித்து உள்ளார். புதிதாக கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி ஒன்றை தொடங்கி இருக்கிறார். இதில் சித்தார்த்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். தன்னிடம் உதவியாளராக இருந்த மணிகண்டன் என்பவரை இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரிக்க வைக்கிறார். படத்தை தயாரிப்பதுடன் கதையும், திரைக்கதையும் அமைத்து இருக்கிறார் வெற்றி. அப்படியே தன்னுடைய ஆஸ்தான நடிகரான கிஷோரையும் இந்தபடத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க வைக்கிறார். படத்திற்கு என்.ஹெச்-4 என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது கதாநாயகிக்கான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. படம் பற்றிய முழு அறிவிப்பு மார்ச் முதல்வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதனிடையே நடிகர் சித்தார்த்தும் இதனை உறுதிபடுத்தி இருக்கிறார். தன்னுடைய ட்விட்டர் வலைதளத்தில், தான் வெற்றிமாறன் தயாரிப்பில் நடிக்கப்போவதாகவும், அதற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
comments | | Read More...

இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம்



நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகிறார். விசில், சார்லி சாப்ளின் உள்ளிட்ட ஒருசில படங்களில் கதாநாயகியாக நடித்த காயத்ரி ரகுராம், பட வாய்ப்புகள் குறைந்ததால் நடன இயக்குனராக திரையுலகை வலம் வந்து கொண்டிருக்கிறார். விரைவில் அவர் நடனம் சம்பந்தப்பட்ட புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.

இதுபற்றி காயத்ரி அளித்துள்ள பேட்டியில், இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் எனது நீண்டநாள் கனவு. அதற்கான கதையும் முன்பே தயாராக வைத்திருந்தேன். வெளிநாட்டில் இருந்தபோது இயக்குனருக்கான படிப்பும் படித்தேன். என்னிடம் உள்ள கதையை, திரைக்கதையாக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறேன். நடனத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை என்பதால் அதற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்த பிறகு மற்ற விவரங்களை பற்றி அறிவிப்பேன். தற்போது 5 படங்களுக்கு நடனம் அமைத்து வருகிறேன். படம் இயக்கினாலும் தொடர்ந்து நடன இயக்குனராகவும் பணியாற்றுவேன், என்று கூறியுள்ளார்.
comments | | Read More...

பெப்சி பிரச்சனைக்கு மத்தியில் விஜயின் துப்பாக்கி படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது



விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரா என எங்கும் பெப்சி பிரச்சினை தலைவிரித்தாடுவதால், மும்பையிலேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்த முடிவு செய்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.

பெப்சி பிரச்சினை காரணமாக துப்பாக்கி படத்தை இடையில் நிறுத்திவிட்ட முருகதாஸ், ஒரு குறும்படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.

இது விஜய்க்கு கவலையளித்தது. படப்பிடிப்பு இல்லாததால் அவரும் கூப்பிட்ட விழாக்கள், சலூன் திறப்பு என அனைத்துக்கும் போய் வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் முருகதாஸ். கதைப்படி விஜய் மும்பையில் போலீஸ் அதிகாரி. எனவே மொத்தப் படத்தையும் மும்பையிலேயே முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.

பெப்சி தொழிலாளர் பிரச்சினையும் அங்கு வராது என்பதால் இந்த முடிவு என்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன் அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு மும்பையில் நடந்தபோது பெப்சிக்காரர்கள் பிரச்சினை செய்தது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம், பெப்சி – தயாரிப்பாளர் தகராறு இன்னும் முடிவுக்கு வராததால் அனைத்து படப்பிடிப்புகளும் நின்றுபோய், கோடம்பாக்கமே ஸ்தம்பித்துள்ள நிலையில், விஜய் படத்தின் ஷூட்டிங்கை நடத்துவது முணுமுணுப்பைக் கிளப்பியுள்ளது.
comments | | Read More...

நான் த்ரிஷாவுடன் எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொள்ளுவேன் - ஸ்ரேயா

 



நடிகை ஸ்ரேயாவுக்கு நிறைய தோழிகள் உள்ளனர். சக நடிகைகளிடமும் நட்பு பாராட்டுகிறார். இதுகுறித்து ஐதராபாத்தில் ஸ்ரேயா அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவில் நடிகைகள் ஒருவருக்கொருவர் நட்பாக இருப்பது இல்லை என்றும் ஒருவர் மற்றவர் மேல் பொறாமைப்படுவதும் பகையாக இருப்பதும் சகஜம் என்றும் கூறுவார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. நான் சக நடிகைகளுடன் நட்பாக இருக்கிறேன்.
திரிஷாவும், காஜல் அகர்வாலும் எனக்கு நெருங்கிய தோழிகளாக உள்ளனர். திரிஷாவிடம் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவேன் அவரும் எல்லா விஷயங்களையும் என்னோடு பகிர்ந்து கொள்வார். காஜல் அகர்வாலுக்கும் எனக்கும் மூன்று வயது வித்தியாசம் உண்டு.
ஆனாலும் நெருங்கிய தோழிகளாக இருக்கிறோம். சமீபத்தில் படப்பிடிப்புக்கு சென்ற போது இருவரும் ஒரே ஓட்டலில் பக்கத்து பக்கத்து அறையில் தங்கினோம். இருவரும் இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது காதலர் தினம் கொண்டாடுவது பற்றி பேச்சு வந்தது. எனக்கு காதலர் தினம் கொண்டாடுவது பிடிக்காது.
அதில் நம்பிக்கையும் கிடையாது என்றேன். மறுநாள் காஜல் அகர்வாலிடம் இருந்து கடிதத்துடன் சிறிய பெட்டி ஒன்று வந்தது. பெட்டியில் ரோஜாப்பூ இருந்தது. கடிதத்தை பிரித்து படித்தேன். அதில் காதலர் தினம் பிடிக்காத எனது சினேகிதிக்கு காதலர் தின வாழ்த்துக்கள் என்ற வாசகம் இருந்தது. அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அக்கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளேன்.
இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
comments | | Read More...

விளையாடவா திரை விமர்சனம்!

 
 
தெருவோரம் கேரம் விளையாடும் ஒரு அன்றாடங்காச்சியின் வளர்ப்பு மகன், ஸ்டேட் கேரம் பிளேயராகும் கதை தான் "விளையாட வா" படத்தின் மொத்த கதையும்!


தெருவோரம் கேரம் விளையாடி ஜெயிக்கும் அன்றாடங்காச்சி கட்டிட தொழிலாளியாக பொன்வண்ணன்,
மிகச்சரியாக பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். அவரது வளர்ப்பு மகனாக புதுமுகம் விஸ்வநாதன் பாலாஜியும், முதல்படம் என்று சொல்லுமளவிற்கு இல்லாமல் பிரமாதப்படுத்தியிருக்கிறார். விஸ்வநாதன் பாலாஜியின் காதலியாக நடிகை திவ்யா பத்மினி காதல், கண்ணாமூச்சி, கவர்ச்சி என ரசிகர்களை உட்கார வைக்கிறார். பொன்வண்ணனின் மனைவியாக லட்சுமி ராமகிருஷ்ணன், லிவிங்ஸ்டன், மயில்சாமி, சார்லி, கொட்டாச்சி, சங்கர் உள்ளிட்டவர்களும் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். ஐஸ்வர்யா, மீரா கிருஷ்ணாவும் வந்து போகிறார்கள்.


கே.எஸ்.ராமகிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஓ.கே., ஸ்ரீமுரளியின் இசையில் "லாலி லாலி காதலி..." பாடல் மட்டுமே சுபலாலி மற்றபடி, கதாநாயகி வில்லியாக வந்து காதலியாவது, அண்ணன்-தம்பிகளை விரோதமாக்கி வில்லன்கள் குளிர்காய்வது, தம்பியின் தன் மீதான பசாத்தை அவன் வாங்கி, தனக்காக வைத்திருக்கும் ஒரு பொருள் மூலம் உணர்ந்ததும், அண்ணன் மனம் மாறுவது, வளர்த்த குடும்பத்திற்காக ஹீரோ தன் வாழ்க்கையையே விட்டுத்தர முயல்வது... உள்ளிட்ட வழக்கமான கதைக்களத்தை தவிர்த்து விட்டுப்பார்த்தால், கமலேஷ்குமாரின் கதை, வசனத்தில் விஜய் நந்தாவின் திரைக்கதை, இயக்கத்தில் "விளையாடவா" படத்தில் கேரம் விளையாட்டை முதன்முதலாக தமிழ் திரையில் பிரபலப்படுத்தியிருப்பதாக பாராட்டலாம்!
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger