மரணம் அடைந்த அடைக்கலராஜ் உடலுக்கு வைகோ அஞ்சலி மரணம் அடைந்த அடைக்கலராஜ் உடலுக்கு வைகோ அஞ்சலி
திருச்சி, செப். 28-
திருச்சி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. எல்.அடைக்கலராஜ். நேற்று திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் திருச்சி கிராப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கிய ராஜீடன் சென்று அஞ்சலி செலுத்தினர். அடைக்கலராஜின் மனைவி ராணி, அவரது மகன்கள் ஜோசப் விண் சென்ட், வி.வி.எஸ்.வின் சென்ட், பிரான்சிஸ் வின் சென்ட் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அடைக்கலராஜ் உடலுக்கு அனைத்து கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த் போன் மூலம் அடைக்கலராஜின் மருமகன் பாஸ்டினிடம் துக்கம் விசாரித்தார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
நேற்று இரவு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அடைக்கல ராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று 4.30 மணிக்கு அடைக்கலராஜின் உடல் மேலப்புதூர் தூய மரியன்னை ஆலயத்தில் திருப்பலி செய்யப்பட்டு பிறகு ஊர்வலமாக மேலப்புதூர் ஆர்.சி. கல்லறைக்கு கொண்டு செல்லப்டுகிறது. அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
Post a Comment