News Update :
Powered by Blogger.

பசுபதி பாண்டியன் சரமாரியாக வெட்டிப் படுகொலை-பதட்டத்தில்தென் மாவட்டங்கள்!

Penulis : karthik on Tuesday, 10 January 2012 | 21:40

Tuesday, 10 January 2012

தமிழக தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு என்ற தலித் அமைப்பின் தலைவரான
பசுபதி பாண்டியன் நேற்று இரவு திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில்
வைத்து ஒரு கும்பலால் கழுத்தை அறுத்தும் , சரமாரியாக வெட்டியும் படுகொலை
செய்யப்பட்டார். இதனால் தென் மாவட்டங்களில் பதட்டம் நிலவுகிறது.
பரமக்குடியில் தலித் மக்கள் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர்
கொல்லப்பட்ட சம்பவமே இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையாத நிலையில் தலித்
தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தென் மாவட்ட தலித் மக்களிடையே
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவேந்திர வேளாளர் கூட்டமைப்புதலைவராக இருந்தவர் பசுபதிபாண்டியன் (55).
இவரது வீடு திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள நந்தவனம்பட்டியில் உள்ளது.
வழக்கமாக பசுபதிபாண்டியன் தனியாக இருக்க மாட்டார். கூடவே பத்து பதினைந்து
பேர் இருப்பார்கள். ஆனால் நேற்று இரவு பசுபதிபாண்டியன் தனது வீட்டில்
தனியாக இருந்தார்.
இரவு 8 மணி அளவில் வீட்டின் அருகேயுள்ள காலியிடத்தில் சேரில் அமர்ந்து
இருந்தார். அப்போது 3 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் கைகளில் பயங்கர
ஆயுதங்களுடன் வந்து அவரை சூழ்ந்து கொண்டது. செல்போனில் பேசிக் கொண்டு
இருந்த பசுபதிபாண்டியன் சுதாரித்துக் கொள்வதற்குள் , அந்த கும்பல்
தாக்குதல் நடத்தினர்.
அரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றால் அந்த கும்பல் பசுபதிபாண்டியனை
சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் அவரதுஉடலில் வயிறு , மார்பு உள்ளிட்ட
பல இடங்களில் வெட்டுக்காயமும் , கத்திக்குத்து காயமும் ஏற்பட்டது.
கழுத்தையும் கத்தியால் அறுத்துள்ளனர். இதில் சுருண்டு விழுந்த
பசுபதிபாண்டியன் சில நிமிடங்களில் ரத்த வெள்ளத்தில்துடிதுடித்து
இறந்தார்.
உடனடியாக போலீசுக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.உடலைக்
கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற பகுதிகளிலும் பசுபதி பாண்டியன் மீது
நிறைய வழக்குகள் உள்ளன. கொலை , கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு
வழக்குகள் நிலுவையில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த
மூலக்கடைபண்ணையார் கொலை வழக்கிலும் இவருக்குத் தொடர்பு உள்ளது. இந்த
மூலக்கடை பண்ணையாரின் மகன்தான் வெங்கடேஷ் பண்ணையார். இவர் சென்னையில்
போலீஸாரால் சுட்டுக கொல்லப்பட்டவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
பசுபதி பாண்டியன் கடந்த சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில்
போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவருடைய மனைவி வக்கீல் ஜெசிந்தாபாண்டியன்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர்.
ஜெசிந்தா பாண்டியன் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டார்.
கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மனைவியுடன் தூத்துக்குடிக்கு
வந்து கொண்டுஇருந்த போது , எப்போதும் வென்றான் அருகே வெடிகுண்டு வீசியும்
, அரிவாளால் வெட்டப்பட்டதில் ஜெசிந்தா பாண்டியன் இறந்தார்.
பல்வேறு தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
comments | | Read More...

பலாத்கார முயற்சி தொழிலாளி கைது

நெல்லை அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம்செய்ய முயன்ற தொழிலாளி கைது
செய்யப்பட்டார்.
நெல்லை அருகே தாழையூத்து குறிச்சிக்குளத்தை சேர்ந்தவர் பார்வதி(20).
கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வீட்டில் இருந்த போது அதே ஊரை சேர்ந்த
கூலித்தொழிலாளி ஜான் சுந்தர்ராஜ்(22) பாலியல் பலாத்காரம் செய்ய
முயன்றார்.
இதுகுறித்து பார்வதி தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். போலீசார்
விசாரணை நடத்தி ஜான் சுந்தர்ராஜை கைது செய்தனர்.
comments | | Read More...

பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன்,
திண்டுக்கலில் மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதன எதிரொலியாக, தென்
மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்திலிருந்து
மதுரைக்கு செல்லும் பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன. பரமக்குடி அருகே
சென்று கொண்டிருந்த 2 பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது. அதேபோல், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்
பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
comments | | Read More...

சினிமாவில் எனது முதல் நாள் அனுபவம்...

நீங்க பெரிய இடத்துப் பிள்ளை, நினைச்சா பெரிய இயக்குநர்கள் படங்களில்
ஈஸியா நடித்து விடலாம். ஏன் இன்னும் புது இயக்குநர்களின் டெஸ்ட்டிலேயே
இருக்கீங்க?
கல்லூரி முடிஞ்சதும் ஒரே விஷயம்தான் சாய்ஸில் இருந்துச்சு. அது சினிமா.
அதுக்கான எல்லா தயாரிப்புகளிலும் இருந்தேன். நினைச்சப்படியே சினிமா
கிடைச்சது. முதல் படத்தை எங்க அப்பா தயாரிச்சார். அமைதியா, ஆர்பாட்டம்
இல்லாம வாழ்ந்த எனக்கு, முதல் படமே ஆக்ரோஷமா அமைஞ்சது. அதுதான் "வம்சம்'.
முதல் நாள் ஷூட்டிங்.
அப்படியே பைக் ஒட்டிக்கிட்டு வர்றீங்கனு இயக்குநர் பாண்டிராஜ் சொன்னதும்,
படபடப்புவந்துடுச்சு. அதுவரைக்கும் நான்பைக் ஓட்டினதே கிடையாது. தைரியமாக
ஓட்டினேன். அப்படியே சறுக்கிட்டு விழுகிறேன். அப்பா கண் கலங்கி
நிற்கிறார் இப்படிதான் என் சினிமாவின் முதல் நாள் தொடங்குச்சு. அதன் பின்
நிறைய விஷயங்கள்.
நிமிஷத்துக்கு நிமிஷம் சினிமாவை நேசிக்க ஆரம்பிச்சேன்.மனசுக்கு பக்கத்துல
வெச்சு அழகுபார்க்க ஆரம்பிச்சுட்டேன். எனக்காக ஒரு படம் பண்ணுங்கன்னு
நான் யார்க்கிட்டேயும் கேட்டதே கிடையாது. அது மாதிரி சமயத்தில்தான்
ரெண்டாவது படம்"உதயன்' வந்துச்சு. படம் சரியா போகலை. ஆனா பிடிச்சு
நடிச்சதுதான். இப்பவும் அதே மாதிரிதான் "மௌனகுரு' கிடைச்சது.எனக்கான
உயரம் என்னன்னு எனக்கு சுத்தமாகத் தெரியாது. அனுபவித்துச் செய்தால் எல்லா
கைகூடும் நினைக்கிறேன்.
மௌன குரு யாரு?
எல்லோருமேதான். அடுத்த நொடியில்என்ன நடக்கும்னு தெரியாத எல்லோரும்
மௌனகுருதான். பிரச்னைகள் வரும்போதுதான் ஒவ்வொருத்தருக்கும் தன் பலம்
தெரியும். "வம்சம்' படத்துக்குப்பின் ஒரு பிரேக் வேணும்னு நினைச்சேன்.
அதை இந்தப் படம் தீர்த்து வைக்கும். பயம், பகட்டு,அடிதடி, கற்பனைன்னு
எதுவும் இல்லாம வாழ்க்கையை நடத்திக்கிட்டு இருக்குற ஒருத்தனுக்கு
எல்லாமும் ஒரு சேரகிடைத்தால் அவன் என்னவாகிறான் என்பதுதான் கதை.
ஒருவிதத்தில் பார்க்கப் போனால் இது என் உண்மையான கேரக்டரும் கூட. நான்
எப்பவும் சாஃப்ட். எந்த சமயத்திலும் இயல்பா ஏதாவது ஒரு விஷயம்
பண்ணிக்கிட்டு இருப்பேன். அதுபோல்தான் இந்தப் படத்திலும் வருவேன். ஆனா
நல்லது கெட்டதுன்னு படம் கலர்ஃபுல்லா இருக்கும்.
நல்லது கெட்டதுன்னா இதிலும்"வம்சம்' படத்தில் சாயல் இருக்குமோ?
இல்லை. அப்படி சொல்லிட முடியாது. வம்சத்தில் காதல் கொஞ்சம் இருக்கும்.
துரோகம் அதை விட அதிகம் இருக்கும். இது அப்படி இருக்காது. சாதாரண ரப்பர்
செருப்பு, சைக்கிள்ன்னு இருக்குற சராசரி கல்லூரி மாணவன். திடீரென புயல்
அடிச்ச மாதிரி ஒரு விஷயம் அவன் வாழ்க்கையைப் புரட்டிப்
போடுது.அதிலிருந்து மீண்டு அவன் எப்படிவந்தான்னு சில முடிச்சுக்களை
போட்டு அவிழ்க்கும் கதை அவ்வளவுதான்.
சினிமாவில் ஒரு ஹீரோவா கால் ஊன்றுவது கஷ்டமாகத்தானே இருக்கு?
கண்டிப்பா. ஹீரோவா வந்து முன் வரிசையில் நிற்கிற எல்லோரையும் பார்த்தா
எனக்கு ஆச்சரியம். எத்தனை நிராகரிப்புகள், விதவிதமா எத்தனை அனுபவங்கள்,
வகை வகையான துன்பங்கள், வெற்றி கொண்டாட்டங்கள்னு எத்தனை எத்தனை பார்த்து
வந்திருப்பாங்க.
சில சமயங்களில் அவங்களை நினைச்சாப் பெருமையாகவும் இருக்கும்.
ஒவ்வொருத்தருமே ஒரு விதத்தில் எனக்கு ரோல் மாடல்தான். எல்லோரையும்
பின்பற்றியே வலம் வரும்னு தோணுது. அடுத்தடுத்த என் பயணங்களுக்கான
எரிபொருளாக நான் நினைப்பது அதுதான். என்னுடைய இத்தனை வருஷ வாழ்க்கையின்
படிப்பினை இது. நானும் இந்த சினிமாவில் வெற்றி பார்த்துட்டேன். ஒரு
தோல்வியும்பார்த்துட்டேன். அதனால் என்கிட்ட சோர்வும், உற்சாகமும்
இருக்கு. பெரிய ஆறுதல் கிடைச்சா நல்லதுதானே.
அண்ணன் உதயநிதியும் ஹன்சிகா மோத்வானியுடன் டூயட் பாடுறார். எப்படி
நினைக்கிறீங்க அவரின் சினிமா என்ட்ரியை?
அண்ணன் எனக்கு முன்னாடியே சினிமாவுக்கு வர வேண்டிய ஆளு. உங்களுக்குத்
தெரியுமா?"வம்சம்' படத்தின் கதையை அவரிடம்தான் பாண்டிராஜ் முதலில்
சொல்லிருக்கார். இது இப்போ எனக்கு வேண்டாம். என் தம்பி நடிக்க
ஆசைப்படுறான். அவன்கிட்ட சொல்லுங்கன்னு பாண்டிராஜுக்கு ஐடியா கொடுத்ததே
அண்ணன்தான்.
அவருக்கு சினிமா பத்தி நிறைய தெரியும். கடந்த ஆண்டுகளில் ஜெயிச்ச
படங்களின் பட்டியலை எடுத்துப் பாருங்க. பாதி படம் அவர் தயாரிப்பில்
வந்தது. அவ்வளவு நேர்த்தியா கதை தேர்வு செய்வார். அப்படிப்பட்டவருக்கு
நான் என்ன டிப்ஸ் கொடுத்து விட முடியும்? எனக்கு இப்ப இருக்குறபக்குவம்
அவருக்கு எப்போவோ வந்துடுச்சு. என்னோட சினிமா என்ட்ரிக்கு உதய் அண்ணனின்
ஆசீர்வாதம் எப்பவும் உண்டு.
சின்ன அண்ணன் துரையும் சினிமாவுல நடிக்க வந்துடுவார்னு பேசிக்கிறாங்க?
துரை என்னை விட 10 மாசம் மூத்தவன். ஆனா என் நண்பன். அவனைப்பத்தி எனக்கு
அவ்வளவு விஷயங்கள்தெரியும். ஸ்கூல் லீவு விட்டா மதுரைக்கு டிரெயின்
புடிச்சுப் போய் பார்த்துடுவேன். அவனுக்கு சினிமா ஆசை இல்லைன்னு
நினைக்கிறேன். ஆனா அவனுக்கு சினிமா பிடிக்கும். எனக்கு ரொம்பவே
பிடிச்சமானவன். ரெண்டு அண்ணன்களும் இருக்க எனக்கென்ன பயம்? சொல்லுங்க.
comments | | Read More...

நான் அம்மாவும் இல்லை - எனக்கு குழந்தையும் இல்லை - த்ரிஷா

த்ரிஷா நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் காதலிக்கிறார் என்று
பேசப்பட்டு வந்தது போய் இப்போது கல்யாணம் செய்துகொண்டார், குழந்தை பெற்று
அம்மாவாகிவிட்டார் என்று பேசப்படுகிறது.
தமிழில் அஜீத்துடன் மங்காத்தா படத்திலும், தெலுங்கில் தீன்மார் படங்களில்
நடித்து வரும் த்ரிஷா இந்த பேச்சுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர், ''எனக்கு அரசியல் புள்ளி ஒருவரின் மகனுடன் திருமணம் நடந்துவிட்டதாக
வதந்திகள் கிளம்பியது. இப்போது தொழில் அதிபருடன் திருணம் செய்து
கொண்‌டதாக வதந்தி. ஆனால் இதனை பலமுறை மறுத்து விட்டேன், ஆனாலும்
தொடர்கிறது.
அதுகூட பரவாயில்லை எனக்கு குழந்தை இருப்பதாக கூட சிலர் வதந்திகள் பரப்புகின்றனர்.
நான் யாரையும், ரகசிய திருமணம் செய்யவில்லை, அவ்வாறு செய்ய எனக்கு
அவசியமும் இல்லை. எனது திருமணத்தை ஊர் அறிய உலகறிய நடத்துவேன்.
கண்டிப்பாக ரகசிய திருமணம் செய்யமாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
comments | | Read More...

எந்திரன்… சன் டிவியின் பொங்கல் பிரம்மாஸ்திரம்!

இந்திய சினிமாவின் பிரமாண்ட படம், இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த
படம், தரத்தில்ஹாலிவுட்டுக்கு நிகரான படம் என்ற பெருமைகளைப் பெற்ற
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படம் பொங்கல் ஸ்பெஷலாக சன் டிவியில்
வெளியாகிறது.
இந்த 90 ஆண்டு இந்திய சினிமா வரலாற்றில் ஒரு படம் இத்தனை பிரமாண்டமாய்
எடுக்கப்பட்டதில்லை. ஒரு தமிழ்ப் படம் இத்தனை அரங்குகளில்
வெளியானதுமில்லை. சென்னையில் மட்டும் 42 திரையரங்குகளில் வெளியான ஒரே
படம். தெலுங்கில் ரோபோ செய்த சாதனை மிகப் பெரியது!
கடந்த சில தினங்களாகவே, இந்தப் படத்தை மீண்டும் மறுவெளியீடு செய்தால்
நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பரவலாகக் கேட்டு வந்தனர்.
மறுவெளியீடு என்றால் குறைவான தியேட்டர்களில்தான் வெளியிட முடியும்.
அதனால் சன் டிவி அதிரடியாக பொங்கல் சிறப்புத் திரைப்படமாக எந்திரனை
வெளியிடுவதாக இன்று அறிவித்துவிட்டது.
வரும் தை முதல் நாளில் 15.01.2012- மாலை 6 மணிக்கு சன் டிவியில்
ரஜினியின் எந்திரனை மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பொங்கல் அன்று இந்தப் படத்தை டிவியில் போடுவதால், அன்றைய தினம்
வெளியாகும் புதிய படங்களின் வசூலை நினைத்து இப்போதே விநியோகஸ்தர்கள்
கவலைப்பட ஆரம்பித்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
16 16 16 16 16 16 16 16 16
Link to this page
கருத்தை பதிவு செய்யுங்கள்
comments | | Read More...

பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை அசின் டி.வி.க்கு மாறினார்: ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடத்துகிறார்

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி படம் மூலம் இந்திக்கு
போனார். தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட அப்படத்தில்
அமீர்கான் ஜோடியாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். அப்படம்
ஹிட்டானதால் அசினுக்குஇந்திப் பட வாய்ப்புகள் குவிந்தன. முன்னணி
ஹீரோக்கள் அசினுடன் ஜோடி சேர போட்டி போட்டனர்.
லண்டன் டிரீம்ஸ், ரெடி படங்களில் சல்மான்கான் ஜோடியாகநடித்தார். தற்போது
அக்ஷய் குமாருடன் ஹவுஸ் புல். 2 படத்தில் நடிக்கிறார். லண்டன் டிரீம்ஸ்
படம் தோல்வி அடைந்ததால் அசின் செல்வாக்கு சரிந்துள்ளது. கத்ரினாகயூப்,
கரீனா கயூப், பிரியங்கா சோப்ரா, வித்யாபாலன் ஆகியோர் இந்தியில்முன்னணி
நடிகையாக உள்ளனர்.
அவர்கள் நடிக்கும் படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டாகியது. அவர்களுடன்
போட்டியிட்டு மார்க்கெட்டை தக்க வைப்பது அசினுக்கு சவாலாக உள்ளது. பட
வாய்ப்புகளும் குறைந்து விட்டன. இதையடுத்து அசின் சின்னத்திரைக்கு
வருகிறார். யு.டி.வி. சார்பில் தயாராகும் சூப்பர் ஸ்டார் சாந்தா என்ற
நிகழ்சியில் பங்கேற்க அசின் சம்மதித்து உள்ளார்.
ரசிகர்களுடன் அசின் கலந்துரையாடுவது போல் இந்த நிகழ்ச்சி
தயாரிக்கப்படுகிறது.இதில் ரசிகர்களுடன் நேரடியாக அசின் கேள்விகள்
கேட்கிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களுடன் நட்பு ரீதியிலான இணக்கத்தை
ஏற்படுத்தும் என்று அசின் கூறினார்.
Link to this page
கருத்தை பதிவு செய்யுங்கள்
comments | | Read More...

‘என் தமிழ் மேல் உனக்கேனிந்த கொலவெறி?’

சகோதரா மன்னித்துவிடு… தனுஷின் கொலவெறிப்பாட்டை அங்கீகரித்த ஒட்டு மொத்த
தமிழர் சார்பிலும் மன்னிப்பு கோருகிறேன்…
- தனுஷின் 'தமிழ் கொலவெறிப்பாட்டு'க்கு எதிராக, யாழ்ப்பாண இளைஞர் ஒருவர்
அட்டகாசமான தமிழில் எழுதி அதே மெட்டில் பாடியிருக்கும் 'என் தமிழ் மேல்
உனக்கேனிந்த கொலவெறிடா?' என்ற பாட்டைக் கேட்ட பிறகு பலரும் உதிர்த்த
கமெண்ட் இது!
நாடே தனுஷின் கொலவெறி பற்றி பேசிக் கொண்டிருக்க, மொழி ஆர்வலர்கள், தமிழ்
உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது இந்தப் பாடல்.
இந்தப் பாட்டைக் கண்டிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து எஸ் ஜே
ஸ்டாலின் உருவாக்கியுள்ள 'கொலைவெறிப் பாடலுக்கு' அனைத்து தரப்பினர்
மத்தியிலும் ஏக வரவேற்பு.
தமிழ் உணர்வாளர்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இந்தப் பாடலை
உருவாக்கிய ஸ்டாலினை பாராட்டித் தள்ளிக் கொண்டுள்ளனர்.
'என் தமிழ் மொழி மேல் உனக்கேன் இந்தக் கொலைவெறிடா' என்று தொடங்கும்
அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் பப்பா பப்பா எனபாடிக் கொண்டிருக்கும்
தனுஷை 'தப்பு தம்பி தப்பு' என தலையில் குட்டுவது போல அமைந்துள்ளன. இந்தப்
பாடல் இணையதளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள் 1.30 லட்சம் பேர்
கேட்டு ரசித்திருக்​கிறார்கள். இன்றையநிலவரப்படி 1.70 லட்சம் முறை
பார்க்கப்பட்டுள்ள பாடல் இது.
யாழ் நகரைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இந்தப் பாடலை உருவாக்கி
இருக்கிறார்கள். இந்தப் பாடலை இயற்றி, பாடி, இசையமைத்த
எஸ்.ஜெ.ஸ்டாலினுக்கு,உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்தப் பாடலில் ஈழத் தமிழர்களின் அடையாளங்கள், மண் சார்ந்த
நினைவூட்டல்கள் அழகாக இடம்பெற்றுள்ளது இன்னொரு சிறப்பு.
'கொலவெறிடா – யாழ்ப்பாணம் பதிப்பு' என்ற தலைப்பில் வந்துள்ள அந்தப்
பாடலின் வரிகள் முழுமையாக:
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பை இழந்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…
தமிழ்க் கொலையாளிகளுக்கு இதைவிட ஒரு வன்மையான கண்டனத்தை யாரும் சொல்லிவிட முடியாது!
comments | | Read More...

ராஜபக்சே தங்கை கணவர் ராமேஸ்வரம் கோவிலில் தாக்கப்பட்டார்

ராஜபக்சேவின் தங்கை நிரூபமாவின் கணவர் திருக்குமரன் நடேசன் தனது
குழந்தைகளுடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது அங்கு
மதிமுகவினரும் , நாம் தமிழர் அமைப்பினரும் இணைந்து முற்றுகைப் போராட்டம்
நடத்தினர். அப்போது நடேசன் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபக்சேவின் தங்கை நிரூபமா. இவரது கணவர் நடேசன். இவர் அடிக்கடி
தமிழகத்திற்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுப் போவது வழக்கம்.
பெரும்பாலும் திருச்செந்தூர் , ராமேஸ்வரம் ஆகிய கோவில்களுக்கு அடிக்கடி
வருவார்.
இந்த நிலையில் தனது குழந்தைகளுடன் நடேசன் சாமி கும்பிட ராமேஸ்வரம்
வந்தார். அவரது வருகை குறித்த தகவல் பரவியதும் மதிமுகவினரும் , நாம்
தமிழர் அமைப்பினரும் அங்கு திரண்டனர். நடேசனை முற்றுகையிட்டு் போராட்டம்
நடத்தினர்.
கோவிலுக்கு வரக் கூடாது , தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி
கோஷமிட்டனர். அப்போது திடீரென சிலர் நடேசனை தாக்கி விட்டனர். இதனால்
பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீஸார் குறுக்கிட்டு நடேசனையும் , அவரது குழந்தைகளையும்
பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் செனறனர்.
comments | | Read More...

'வேட்டை' பாராட்டிய 'நண்பன்'!

விஜய் , ஜீவா , ஸ்ரீகாந்த் , சத்யராஜ் , இலியானா நடிப்பில் வெளியாக
இருக்கும் படம் நண்பன் , ஷங்கர் இயக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து
இருக்கிறார். ஜெமினி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது.
நண்பன் படம் 2011ம் ஆண்டே வெளியீட்டிற்கு தயாராக இருந்தாலும் விஜய்
நடிப்பில் வேலாயுதம் படம் வெளியானதால் 2012ல் பொங்கல் அன்று
வெளியீடுஎன்று அறிவிக்கப்பட்டது.
மாதவன் , ஆர்யா , சமீரா ரெட்டி , அமலா பால் நடிப்பில் லிங்குசாமி இயக்கி
இருக்கும் படம் வேட்டை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க , யு.டிவி நிறுவனம்
இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறது. இப்படமும் 2011ம் ஆண்டே
தயாரானாலும் பாடல் காட்சிகள் பாக்கி இருந்ததால் 2012ல் பொங்கலுக்கு
வெளியீடு என்று தீர்மானிக்கப்பட்டது.
நண்பன் , வேட்டை மட்டுமே பொங்கல்விடுமுறைக்கு போட்டியிடுகிறது.தியேட்டர்
அதிபர்கள் , விநியோகஸ்தர்கள் மத்தியில் இரண்டு படங்களுக்குமே அதிக
வரவேற்பு இருந்து வருகிறது.
வேட்டை படத்தின் இசையை வெளியிட்டது நண்பன் படத்தினை இயக்கிய ஷங்கர்.
அப்போது பேசிய ஷங்கர் " லிங்குசாமி இயக்கிய படங்கள் எப்போது மாஸ் +
கிளாஸ் இணைந்து இருக்கும். அது தான் அவரது படத்தின் சிறப்பு. ' வேட்டை '
படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது ' ரன் ', ' பையா ' இணைந்து இருக்கும்
" என்று வாழ்த்தினார்.
இயக்குனர் லிங்குசாமி பேசும் போது " ' வேட்டை ' படத்துடன் இணைந்து ஷங்கர்
சாரின் ' நண்பன் ' படமும் வருகிறது. ' வேட்டை ' படத்தினை விட வசூலிலும்
சரி , ஓடும் நாட்களிலும் சரி ' நண்பன் ' முதலாவதாக இருக்கும். " என்று
தெரிவித்தார். அதுமட்டுமல்லாதுபுதுவருட பிறப்பு அன்று ஷங்கர்
லிங்குசாமிக்கு போன் செய்து வேட்டை படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை
தெரிவித்து இருக்கிறார்.
இரண்டு பேருமே தங்களது படங்கள் வசூலில் முதலாவதாக இருக்கும் என்று கூறி
ஒன்றிணைந்து இருக்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் மத்தியிலோ நண்பனா வேட்டையா
என்ற போட்டி தான் நிலவி வருகிறது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger