Sunday, 1 April 2012
நயன்தாராவோ பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார். மேலும் அவரது பெயரான பிரபுதேவா என்பதை பிரபு என்று சுருக்கி கையில் பச்சை எல்லாம் குத்திக்கொண்டார். சீக்கிரத்தில் மாலையும்-கையுமாக காட்சியளிப்பாளர்கள் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், தங்களது காதலை முறித்து கொண்டுள்ளனர் இருவரும். நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது கைவசம் 4 படங்களை வைத்து கொண்டு பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் பிரபுதேவாவுடனான காதல் முறிவு குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார் நயன்தாரா. அவர் கூறியதாவது, காதல் வாழ்க்கையிலும் சரி, திருமண வாழ்விலும் சரி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது இருக்கத்தான் செய்யும். இதனால் அவர்களுக்குள் லேசான மனகசப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனால் அந்த மனகசப்பு சீக்கிரத்திலேயே சரியாகி விட வேண்டும். இல்லை என்றால் காதல் முறிவு, விவாகரத்து போன்றவற்றுக்கு வழிவகுக்கும். அப்படித்தான் என் வாழ்விலும் ஏற்பட்டு விட்டது. காதலுக்காக எதையும் செய்ய நான் தயாராகத்தான் இருந்தேன். பல விஷயங்களை விட்டுக்கொடுத்தேன். இருந்தும் திருமணம் வரை சென்ற எங்களது காதல் கடைசியில் முறிந்துவிட்டது.
நான் என்னுடைய காதலில் 100 சதவீதம் உண்மையானவளாக இருந்தேன். ஆனால் பிரபுதேவா அப்படி இல்லை. சில விஷயங்களை என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதனால் பிரச்னைக்கு மேல் பிரச்னை. எப்போது என்னுடைய உண்மையான காதலுக்கு மதிப்பில்லையோ அப்போதே அந்த உறவு முறிந்து விட்டது. எப்போது ஒரு உறவு சரியாக இல்லையோ, அப்போது எல்லாமே மாறி விடுவது இயற்கைதானே? உலகில் நிலையானது என்று எதுவும் கிடையாது. மக்கள் மாறுகின்றனர். சூழ்நிலைகள் மாறுகின்றன. செயல்பாடுகள் மாறுகின்றன. அதுபோன்றதொரு மாற்றம், என்னை பிரியச் செய்தது. எங்களது காதல் இப்படி பாதியிலேயே முறிந்து போகும் என்று நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. இதற்கு மேல் இந்த விஷயத்தை பற்றி நான் விரிவாக பேச விரும்பவில்லை என்றார். மேலும் பாலிவுட் படங்களில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும் தென்னிந்திய படங்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாகவும் நயன்தாரா கூறியுள்ளார்.
இதனிடையே பிரபுதேவா நினைவாக பிரபு என்று தன் கையில் குத்தியிருந்த பச்சையை இப்போதும் அழிக்காமல் தான் உள்ளார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.