Sunday, 27 October 2013
சவுதியில் தடையை மீறி கார் ஓட்டிய பெண்களுக்கு 300 ரியால் அபராதம் 300 Riyals fined on women for driving cars amidst ban
ரியாத், அக். 28-
சவுதி அரேபியாவின் சாலைகளில் பெண்கள் கார்களையோ இதர வாகனங்களையோ ஓட்டிச் செல்ல கூடாது என மதவாதிகள் தடை செய்துள்ளனர்.
இந்த தடையை மீறும் பெண்கள் போலீசார் மற்றும் மததலைவர்களால் தண்டிக்கப்பட நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். கார்களை ஓட்டுவதால் பெண்களின் கருப்பை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் பயமுறுத்தினர்.
இந்த தடை அங்குள்ள பெண்ணியக்க வாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதவாதிகளின் மிரட்டல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அந்நாட்டில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமங்களும் வழங்கப்பட்டதில்லை.
இந்நிலையில், இந்த தடையை உடைத்தெறியும் விதமாக நேற்று கடை மற்றும் அலுவலங்களுக்கு கார்களை ஓட்டிச் சென்ற சுமார் 60 பெண்கள் தாங்கள் கார் ஓட்டிச் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமங்களை வைத்துள்ள இவர்களில் பெரும்பாலான பெண்கள் மதவாதிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தங்களது பெண்ணுரிமையை நிலைநாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் ரியாத்தில் கார் ஓட்டிச் சென்ற 6 பெண்களையும், நாட்டின் இதர பகுதிகளில் கார் ஓட்டிய மேலும் 10 பெண்களையும் கைது செய்த போலீசார் அவர்களுக்கு தலா 300 ரியால் (இந்திய மதிப்புக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்தனர்.
சவுதி அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என அபராதம் விதிக்கப்பட்ட பெண்களிடமும் அவர்களது தந்தை அல்லது கணவரிடமும் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
உலகிலேயே பெண்கள் கார் ஓட்டக்கூடாது என தடை செய்துள்ள ஒரே நாடு சவுதி அரேபியா தான் என்பது குறிப்பிடத் தக்கது.
...
shared via