Saturday, 30 March 2013
பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்துவந்த இந்தியா, தற்போது பெருகி வரும் கற்பழிப்பு சம்பவங்களால் தனது கவர்ச்சியை இழந்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.சுற்றுலா துறைக்கான ஆய்வு அமைப்பான அசோச்சம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 25 சதவீதமும், பெண்களின் எண்ணிக்கை மட்டும் 35 சதவீதமும் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.புதுடெல்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட செய்தியின் சூடு தணிவதற்குள், மத்திய பிரதேச மாநிலத்தில் 8 பேரால் சுவிட்சர்லாந்து நாட்டு சுற்றுலா பயணி கற்பழிக்கப்பட்டது, ஓட்டலில் தங்கியிருந்த இங்கிலாந்து சுற்றுலா பயணியிடம் அந்த ஓட்டலின் ஊழியர் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்த போது, மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த பெண் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தது போன்ற செய்திகள், இந்திய சுற்றுலா துறையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மந்தநிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.ஆண் துணை இல்லாமல் பெண்கள் தனியாக இந்தியாவிற்கு சுற்றுலாசெல்ல வேண்டாம் என பலநாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதும் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.இதன் தாக்கத்தால், கடந்த 3 மாதங்களில் மட்டும் பல வெளிநாட்டினர் இந்தியா வருவதற்காக செய்திருந்த முன்பதிவை ரத்து செய்துக்கொண்டிருப்பதாக சுற்றுலா அமைப்பாளர்கள் 72 சதவீதம் பேர் கூறுகின்றனர்.இவர்களில் பெண்களின் எண்ணிக்கைஅதிகம்