News Update :
Powered by Blogger.

பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி வைகோ கைது

Penulis : Tamil on Friday, 2 August 2013 | 05:33

Friday, 2 August 2013

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஒலைக்குடியில் ரூ.600 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெல் பாய்லர் துணை தொழிற்சாலை திறப்பு விழா இன்று நடந்தது. இதைத் திறந்து வைக்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலை 11.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்தார்.
அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க., தமிழர் வாழ்வுரிமை சார்பில் கறுப்பு கொடி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சி
comments | | Read More...

விஜய், அமலா பால், சத்யராஜ் நடிப்பில் தலைவா

நீண்ட போராட்டத்திற்கு பின்பு விஜய்யின் தலைவா படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

விஜய், அமலா பால், சத்யராஜ் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.‘ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

படத்தை இந்த மாதத்தில் வெளியிட எண்ணி விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், ரிலீஸ் தேதியை மட்டும் தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்று நினைத்தனர். இந்நிலையில் படம் தணிக்கை குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாகக் கூறி படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க முடிவு செய்தனர்.

யு/ஏ சான்றிதழ் பெற்றால் படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு பெறுவது கஷ்டமாகிவிடும் என்பதால் இப்படம் ரிவைசிங் கமிட்டிக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்த்த கமிட்டி உறுப்பினர்கள் சில இடங்களை கட் பண்ணுமாறு சொல்லி விட்டு படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதனால் தலைவா படம் ஏற்கனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger