News Update :
Powered by Blogger.

பாக்ஸ் ஆஃபிஸை கலக்கும் வித்யாபாலன்!

Penulis : karthik on Saturday 24 March 2012 | 09:32

Saturday 24 March 2012

 
 

வித்யாபாலன் நடித்த Kahaani பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் எதிர்பாராத சர்ப்ரைஸ். இந்த க்ரைம் த்‌ரில்லர் படம் இரண்டாவது வார இறுதியில் 43.05 கோடிகளை வசூலித்துள்ளது.

கதையையும், ஸ்கி‌ரிப்டையும் நம்பினால் பெ‌ரிய ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை என்பது சமீபத்திய தமிழ் உதாரணம் மௌனகுரு. இந்தியில் ககானி. வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்திருக்கும் இந்தப் படம் அவ‌ரின் இமேஜை அதிக‌ரித்திருக்கிறது. இவ‌ரின் டர்ட்டி பிக்சர்ஸ், ககானி இரண்டும்
சூப்பர்ஹிட். அதுவும் அடுத்தடுத்து. இரண்டுமே ஹீரோயின் ஓ‌ரியண்ட் சப்ஜெக்ட்.

க‌‌ரீனா, கத்‌ரினாவை மறந்து விதயாபாலன் என்று முணுமுணுக்கிறது ரசிகப் பட்டாளம். முக்கியமாக அமீர்கானை இப்படத்தின் வெற்றி பாதித்திருக்கிறது. இவ‌ரின் அடுத்தப் படம் தல்லாஸும் இதேபோலொரு க்ரைம் த்‌ரில்லர். அடுத்த மாதம் வெளிவருவதாக இருந்த தனது படத்தை நவம்பருக்கு அமீர் தள்ளி வைத்துள்ளார்.

அமீரையே பயப்பட வைத்த வித்யாபாலன் இந்தியில் அறிமுகமாவதற்கு முன் நடிக்கத் தெ‌ரியவில்லை என்று ஒருமுறையும், ரொம்ப சுமார் அழகி என இன்னொருமுறையும் தமிழ்‌த் திரையுலகால் நிராக‌ரிக்கப்பட்டவர்.

நமிதாக்கள் கோலோச்சும் ஊ‌ரில் நடிக்கத் தெ‌ரிந்தவருக்கு என்ன வேலை.
comments | | Read More...

இளமைக்காக த்ரிஷா ஊசி

 
 
'வயதாகி விட்டது' இதுதான் த்ரிஷாவை ஆட்டிப் படைக்கும் ஒரே விஷயம். இதை மறைப்பதற்காக உரித்த கோழியாக மாற முடிவு செய்துவிட்டார். அப்படியும் தொங்கும் சதைகள் காட்டிக் கொடுத்து விடுமே..? இதை தவிர்க்க, மாதம் ஒருமுறை ஸ்பெஷல் இன்ஜெக்ஷன் போட்டு கொள்கிறாராம். இதற்காகவே வெளிநாட்டிலிருந்து ஊசி இறக்குமதியாகிறதாம். நிஜமாவா?


comments | | Read More...

யாழில் “மக்கள்” தொலைக்காட்சிக்குத் தடை


இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகும் "மக்கள்" தொலைக்காட்சியில் இலங்கையின் போர்க்குற்ற சித்திரிப்புக்களைப் பார்த்துக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பமொன்றை சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் மூளாய் என்ற இடத்தில் நேற்று வியாழக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜ.நா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைத் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட ஒருசில மணித்துளிகளில் மேற்படிக் குடும்பம் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் "மக்கள் தொலைக்காட்சியில்"; தினமும் 7 மணி தொடக்கம் 8 மணி வரை தமிழ் மக்களின் அவலங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதேபோன்று கடந்த வியாழக்கிழமையும் இது ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.

அந்த நேரம் பார்த்து திடீரென்று இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த நான்கு இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த வீட்டினுள் புகுந்து மக்கள் தொலைக்காட்சி நிகழ்வை அவதானித்துவிட்டு "இதைப் பார்க்கக்கூடாதென்று உங்களுக்குத் தெரியாதா? ஏன் பார்க்கிறீர்கள்?" என்றெல்லாம் கேட்டு குடும்பத்தினரை அச்சுறுத்தியுள்ளனர்.

இராணுவப் புலனாய்வாளர்களில் சிலர் சிங்களத்தில் உரையாடியதாகவும் சிலர் தமிழ் மொழியில் உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படிக் குடும்பத் தலைவனிடமிருந்து தொலைபேசியைப் பறித்த இராணுவப் புலனாய்வாளர்கள் அதன் மெமறி கார்ட்ஐயும் பறித்துச் சென்றதுடன் இன்று வெள்ளிக்கிழமை உடுவில் இராணுவ முகாமுக்கு வருமாறும் கூறிச் சென்றுள்ளனர். மேலும் இனிமேல் இவ்வாறான நிகழ்வுகளைப் பார்க்க வேண்டாமென்றும் எச்சரித்துச் சென்றனர்.

இன்று அவர் உடுவில் இராணுவ முகாமுக்குச் சென்ற போது முகாமுக்கு அண்மையிலுள்ள பாழடைந்த வீடொன்றில் வைத்து அவரின் மெமறி கார்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் மேலதிக விடயங்களை காவல்துறையினர் கவனிப்பார்கள் என்று கூறியே இவரின் மெமறி கார்ட் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியொன்றையே பார்க்க முடியாத இக்கட்டான நிலமையிலேயே யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர். யாழில் தமிழ் மக்கள் எத்தகைய இராணுவ நெருக்குவாரங்களுக்குள் வாழ்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இந்த அச்சுறுத்தல் சம்பவம் ஒன்றே எடுத்துக்காட்டாகுமென்று யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

comments | | Read More...

மீண்டும் நீண்ட முடி வளர்க்கிறார் தோனி


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மீண்டும் நீண்ட முடி வளர்க்க முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி.

மிக நீண்ட கூந்தலுடன், விக்கெட் கீப்பராக அறிமுகமான தோனி, கேப்டன் பதவியை பெற்றதும் முடியை குறைத்துக்கொண்டார்.

கடந்தாண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற அன்றே, மொட்டையடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், இன்று கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தான் மீண்டும் நீண்ட கூந்தல் வளர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து பழைய தோனியை மீண்டும் பார்க்கலாம் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger