Friday, 27 September 2013
இந்தியா அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து US India Signed the first trade agreement
Tamil NewsYesterday,
வாஷிங்க்டன், செப். 28-
இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு முதன் முறையாக இந்த துறையில் வர்த்தக ரீதியிலான முதல் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர்கள் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது, கடந்த சில நாட்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்திய அணுசக்தி கழகத்திற்கும், அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கும் இடையே இந்தியாவில் அணுசக்தி மின் திட்டம் அமைப்பது தொடர்பாக முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதாக ஒபாமா தெரிவித்தார். அதே நேரத்தில், இந்தியா நிறைவேற்றியுள்ள அணுமின் திட்ட விபத்து இழப்பீடு சட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து, ஒபாமா தனது பேட்டியில் எதுவும் குறிப்பிடவில்லை.
மேலும் இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்த தான் உறுதி பூண்டு இருப்பதை மீண்டும் வலியுறுத்திய அவர், இந்தியா ஆசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரிய சக்தியாக விளங்கி வருவதாக கூறினார். பிரதமர் மன்மோகன் சிங்கும் இரு நாட்டு நல்லுறவு மேம்பாட்டில் ஒபாமாவின் கருத்தை பிரதிபலித்தார்.
பிரதமர் மன்மோகன்சிங், தனது பேட்டியின்போது பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப்பகுதியாக தொடர்ந்து திகழ்ந்து வருவதாக தாக்குதல் தொடுத்தார். இருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடனான சந்திப்பை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அளித்த பேட்டியிலும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார்.
...
Show commentsOpen link