News Update :
Powered by Blogger.

ராஜபக்சேவுக்காக பொய் சொல்கிறாரா சுஷ்மா??

Penulis : karthik on Tuesday, 24 April 2012 | 23:02

Tuesday, 24 April 2012




இந்திய எம்.பிக்கள் குழு தன்னைச் சந்தித்தபோது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து ராஜபக்சே எதுவுமே பேசவில்லை என்றும், அதுகுறித்து இந்தியக் குழுவும் எதையும் கேட்கவில்லை என்றும் இலங்கையின் தி ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது அரசு நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசப்பட்டதாக சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பது குழப்பத்தை தருவதாக அமைந்துள்ளது. அப்படியானால் இவர்களில் யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா-இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனேவும் இதில் கையெழுத்திட்டனர். அதன் பிறகு 13-வது அரசியல் சாசனத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாகாண அரசுகளுக்கு குறிப்பிட்ட அளவு தன்னாட்சி அதிகாரம் அளிப்பதுடன் காவல்துறை, நிலம் போன்றவை தொடர்பான அதிகாரங்களையும் வழங்கியது. ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதற்கு தொடர்ந்து வந்த அரசுகள் மறுத்தன. நிலம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் மீதான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்று அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் கூறினர். இலங்கையைப் பொருத்தவரை 80 சதவீத நிலம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. மீதியுள்ள 20 ச� ��வீத நிலம் தனியாருக்குச் சொந்தமானது. மாகாண அரசுகளுக்கு நிலங்கள் மீது எந்த வகையான உரிமையும் கிடையாது.

இந்த சட்டத் திருத்தத்தை இதுவரை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அதைத்தான் இந்தியா அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து ஐலண்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தப்படி அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று இலங்கைக்கு வந்த இந்திய மக்களவை எதிர்க்கட்ச ித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழுவிடம் ராஜபட்ச உறுதியளித்ததாக கூறப்படுவதை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

எனினும், அதற்கு மேலும் செய்வதற்கு அதிபர் தயாராக இருக்கிறார் கூறப்பட்டுள்ளது. மேலும், அப்படியொரு உறுதிமொழி கோரப்படவுமில்லை, தரப்படவுமில்லை என்று இலங்கையின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

உண்மையில் 13வது சட்டத் திருத்தம் இலங்கையின் மீது இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று என்றுதான் ராஜபக்சே கூறியிருக்கிறாராம். இந்திய எம்.பிக்கள் குழு தன்னைச் சந்தித்தபோது அவர் கூறுகையில், 1987ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சட்டத் திருத்தத்தை அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனே மீது இந்தியா திணித்தது என்று கூறிய அ� �ர் அதை எப்படி செய்தது இந்தியா என்றும் விளக்கியுள்ளார். இந்த சட்டத் திருத்தத்திற்கு இந்திய வம்சாவளி தமிழர்களின் தலைவரான ஆறுமுகம் தொண்டைமான் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார் ராஜபக்சே.

கடந்த மார்ச் 22-ம் தேதி ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, 13-வது திருத்தம் குறித்து உறுதி தரும்படி இலங்கைக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த செய்தியைப் பார்க்கும்போது 13வது சட்டத் திருத்தம் குறித்து இந்திய எம்.பிக்கள் குழு ஆணித்தரமாக எதையும் பேசவில்லை என்பது தெளிவாகிறது.


பேசாத ஒரு விசயத்தையே பேசினதா சொல்றாங்கனா வாங்கின பார்சலுகுள்ள எவ்ளோ ...இருந்திருக்கும்னு நல்லாவே யூகிக்க முடியுதுங்கோ...



comments | | Read More...

கைவிடப்பட்ட அருள்நிதியின் படம்




மெளனகுரு' � �டத்தினை அடுத்து அருள்நிதி யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வந்தன.

'மெளனகுரு' படத்தினை தயாரித்த அருள்நிதியின் தந்தையான மு.க.தமிழரசு தயாரிப்பில் 'அசோகமித்ரன்' என்னும் படத்தில்  நடிக்க ஒப்பந்தமானார் அருள்நிதி.  கரு.பழனியப்பன் இயக்கதமன் இசையமைக்கிறார் என்று விளம்பரம் செய்தார்கள்.

'அசோகமித்ரன்' படம் தற்போது கைவிடப்பட்டு இருக்கிறது. இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது " கரு.பழனியப்பன் மற்றும் அருள்நிதி இருவருக்கும் ஆரம்பித்தில் இருந்த� � சில விஷயங்கள் சரிவர அமையவில்லை.

அதுமட்டுமல்லாது படத்தின் இயக்குனர் தயாரிப்பாளரிடம் படம் குறித்த தகவல் எதுவும் கூற மறுத்துவிட்டார் இயக்குனர். ஆகையால் தான் படம் கைவிடப்பட்டது " என்று தெரிவித்தார்கள்.

இந்தப் படம் கைவிடப்பட்டாலும் தான் இப்போது நடித்து வரும் படம் குறித்து  மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறாராம் அருள்நிதி.

தயாநிதி அழகிரி தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு 'பகல் கொள்ளை' என்று தலைப்பிட� ��டு இருக்கிறார்கள். இப்படத்தினை கணேஷ் விநாயக் என்ற  புதுமுக இயக்குனர் இயக்க இருக்கிறார்.

'கொசுறு' கபாலி : " கரு.பழனியப்பன் தனக்கு கொடுத்த 10 லட்ச ரூபாய் அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுத்துட்டாராம்  "



comments | | Read More...

தமிழ் ஈழம்: டி.கே.ரங்கராஜனுக்கு கருணாநிதி 'குட்டு'!




"தனித் தமிழ் ஈழம்'' தான் என்பது 1977-ம் � ��ண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு. ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை-உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த தலைவர் டி.கே.ரங்கராஜனும் இலங்கையிலே உள்ளவர்கள் தற� ��போது தமிழ் ஈழத்தை கோரவில்லை என்பதைப்போல சொல்லியிருக்கிறார்கள்.

1987-ல் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா இடையிலான ஒப்பந்த அடிப்படையில் இலங்கை அரசியல் சட்டத்திற்கு 13-வது திருத்தம் என்று ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்தத் திருத்தத்தின் மூலமாகத் தான் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பரவல் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். ஆனால் அ� ��்தத் திருத்தத்தை அரை மனதுடன் ஏற்றுக் கொண்ட இலங்கை அரசு இன்று வரை அதை நிறைவேற்றும் எண்ணம் தனக்கில்லை என்பதை தெளிவாக்கி வருகிறது.

அதனால் தான் இன்றைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே "இலங்கையில் தமிழர்களுக்கு, அவர்களுடைய பாரம்பரியமான நிலப் பகுதிகளை இணைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை உருவாக்குவதும்; இந்தியாவில் உள்ளதைப் போல அந்த மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதும்; சாத்தியம் தானா?'' என்று வினவியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், சுரேஷ் பிரேமச்சந்திரன், வாக்குறுதிகளை மீறுவதையே இலங்கை அரசு வழக்கமாக கொண்டிருக்கும் வரலாற்றினை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் தோலுரித்துக் காட்டியிருக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பின்பற்றி வரும் தமிழர் விரோத வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் பார்த்தால்; தற்போது சுஷ் மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் அதிபர் ராஜபக்சே அளித்திருக்கும் உறுதிமொழிகள் அனைத்தும் ஏமாற்றும் தந்திரோபாயங்கள் தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்..

டி.கே.ரங்கராஜன் வெளியிட்டுள்ள இன்னொரு தகவல் நமது உள்ளத்தை உலுக்குகிறது. "மட்டக்களப்பு பகுதிகளுக்குச் சென்ற போது எங்களுக்கு வேதனையான நிலை ஏற்பட்டது. உண்மையிலேயே நான் கண்ணீர் விட்டேன். இலங்கை போரில் 35,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாகி உள்ளதைப் பார்த்தோம். இவர்கள� ��ல் 13 ஆயிரம் விதவைகள் 23 வயதுக்கும் குறைவானவர்கள்'' என்று அவர் சொல்லியிருக்கிறார்.

தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் யாரும் வலியுறுத்தவில்லை என்று சொல்லியிருக்கும் டி.கே. ரங்கராஜன் கவனத்திற்கு ஒரு நிகழ்வினை நினைவூட்ட விரும்புகிறேன். 1977-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு, 1976-ல் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், அனைத்துத் தமிழ் மக்களின் விடுதலைக் கூட்டணி, மலையக மக்களுடைய அமைப்பு என எல்லோரும் ஒன்றிணைந்து "தனித் தமிழ் � �ழம்'' தான் என்ற முடிவினைத் தீர்மானமாக வடித்தெடுத்து; அதனையே முன் வைத்து தேர்தலிலே போட்டியிட்டார்கள். தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர 18 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

"தனித் தமிழ் ஈழம்'' தான் என்பது 1977-ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு. ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை-உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களி� ��் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையை-அடக்குமுறை அடாவடிகளாலோ, அதிகார அத்துமீறல்களாலோ, சர்வாதிகார சதிராட்டங்களாலோ-தீர்த்து விட முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மேலும் தாமதமோ தயக்கமோ இன்றி தீர்வு காணப்பட வேண்டுமென்பது காலத்தின் கட்டளை. அதைக் கால வரையறையின்றி ஒத்தி வைத்து விட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.



comments | | Read More...

குடியரசுத்தலைவர் தேர்தல் : கருணாநிதியை சந்திக்க சிறப்பு தூதுவரை அனுப்பினார் சோனியா காந்தி




அடுத்த குடியரசுத்தலைவர ுக்கான வேட்பாளர் தேர்வில் இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
 
இதன் ஒரு கட்டமாக காங்கிரஸ் கட்சி தனது  கூட்டனி கட்சிகளிடமும் அதரவு திரட்டி  வருகிறது.  இச்சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சிறப்பு து துவர் ஒருவரை கருணாநிதியை சந்திக்க அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே துணை குடியரசுத்தலைவராக இருக்கும் ஹமித் அன்சாரியை அடுத்த குடியரசுத்தலைவராக்க திட்டமிட்டு அதற்கு ஆதரவு திரட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஏற்கனவே, துணை குடியரசுத்தலைவர் ஹமித் அன்சாரி குட ியரசு தலைவராவதற்கு லாலு பிரசாத் தன் ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
 
இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதனால் சமாஜ்வாடி கட்சி இத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.
 
சமாஜ்வாடி கட்சியும� �� மம்தா பானர்ஜி கட்சியும் இணைந்தால் வரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.  
 
 மேலும் ஏ.ஐ.ஏ.டி.எம்.கே., பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய பிராந்திய கட்சிகளும் வரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் முக்கிய பங்காற்றும் என்பதும் குறிபிடத்தக்கது.



comments | | Read More...

40 வயதை நெருங்குகிறார் சச்சின்-இன்று 39வது பிறந்த நாள்!




இந்திய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார், அட்டகாச சாதனைகளின் நாயகன், தொய்வின்றி கிரிக்கெட் சேவை புரிந்து வரும் கிரிக்கெட் கடவுள், சச்சின் டெண்டுல்கர் தனது 39வது பிறந்த நாளை இன்று சிம்பிளாக கொண்டாடினார்.

கிரிக்கெட் உலகின் பெரும்பாலான சாதனைகள் சச்சின் பாக்கெட்டில்தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. என்ன சாதனை இல்லை இவர் பேட்டில் என்று பாட்டுப் பாடும் அளவுக்கு சாதனைகளை படைத்துப் படைத்துக் குவித்துக் கொண்டிருக்கிறார் சச்சின்.

வயதாகி விட்டது ஒதுங்குவது நல்லது என்று எத்தனையோ பேர் கூறியும் கூட அதைப் பொருட்படுத்தாமல் இவரது பேட் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறது- சாதனைகள் மூலம். சமீபத்தில் கூட அவர் ஒர அருமையான சதத்தைப் போட்டு கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 100 சதங்களைப் போ� ��்டு சாதனை படைத்தார் - அதற்கு அவர் ஒரு வருடம் எடுத்துக் கொண்டார் என்பது வேறு விஷயம்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளே என்று வணங்கப்படும் சச்சின் இன்று தனது 39வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். ஐபிஎல் போட்டிக்காக சண்டிகர் வந்துள்ள சச்சின் அங்கு இன்று தனது மனைவியுடன் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் திணேஷ் கார்த்திக், பிரக்யான் ஓஜா, கீரன் போலார்ட், பிராங்க்ளின் ஆகியோர் உடன் இரு ந்தனர்.

23 வருடமாக கிரிக்கெட் ஆடி வரும் சச்சினுக்கு அடுத்த ஆண்டு 40 வயது பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

188 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15,470 ரன்கள் எடுத்துள்ளார் சச்சின். இதில் 51 சதம், 65 அரை சதம் அடக்கம். அதேபோல 463 ஒரு நாள் போட்டிகளில் ஆஐடி 18,429 ரன்களைக் குவித்துள்ளார். அதில் 40 சதம் மற்ற� ��ம் 96 அரை சதம் அடக்கம்.

இன்னும் என்னென்ன சாதனைகளையெல்லாம் சச்சின் படைக்கப் போகிறாரோ தெரியவில்லை. அவர் என்ன செய்தாலும் ரசிக்க ரசிகர்கள் ரெடி...



comments | | Read More...

பில்லா 2 துணை இயக்குனர் 'தல' அஜீத்




பில்லா 2 படக்குழுவினர் எப்பொழுது பார்த்தாலும் அஜீத் குமார் புராணம் தான் பாடி வருகின்றனர்.
தல அஜீத் குமாரின் பில்லா 2 படப்பிடிப்புக்கு சென்றால் யாரைப் பார்த்தாலும் தல போல வருமா என்று தான் பேசிக்கொள்கிறார்கள். என்னங்கையா தல டைலாக்கை சொல்றீங்க என்று கேட்டால், ஆஹா, ஓஹோ என்று அஜீத்தை தலையில் தூக்கி வைத்துக்கொள்ளாத குறையாக புகழ்பாடுகிறார்கள். அப்படி தல என்ன மாயமந்திரம் செய்தார் என்றால் படப்பிடிப்பு எந்தவித பிரச்சனையும் இன்றி நடக்கத் தேவையான உதவிகளை அஜீத் செய்து வருகிறாராம்.

மேலும் படத்தில் பார்வதி ஓமனகுட்டன், புருனா அப்துல்லா என்று தமிழ் தெரியாத 2 நாயகிகள். அவர்களுக்கு தமிழ் வசன உச்சரிப்புகளை கற்றுக்கொடுக்கிறாராம். இது தவிர படக்குழுவினர� ��க்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கிறாராம். அதனால் தான் இந்த புகழாரம் எல்லாம்.

முன்னதாக பில்லா 2 குழுவினருக்கு தனது கையாலேயே சமைத்து விருந்து வைத்ததோடு இல்லாமல், சாப்பிட்ட தட்டுகளை தானே கழுவி வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் தல என்ப� �ு குறிப்பிடத்தக்கது.

ஒரு பெரிய நடிகர் எந்த பந்தா சிறிதும் இல்லாமல் ஓடி, ஓடி உதவி செய்வதால் படக்குழுவினர் உருகுகின்றனர்.

என்ன இருந்தாலும் தல தல தான்...



comments | | Read More...

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு




புதுக்கோட்டை தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட முத்துக்குமரன். கடந ்த 1-ந்தேதி கட்சி தொண்டர் மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது கார் கவிழ்ந்து மரணம் அடைந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் தேதியை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 


அதன்படி, வரும் ஜுன் 12-ம் தேதி இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வோர் மே 18-ம் தேதி தாக்கல் செய்யலாம்.  வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே.25. வேட்பு மனு மே 26-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. மனுவை வாபஸ் பெற மே 28-ந் தேதி கடைசி நாள். ஜுன் 15-ல் வாக்குகள் எண்ணப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது


இந்த நிலையில் புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் என்றும், அ.தி.மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி விரைவில் நடைபெற உள்ள புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் (புதுக்கோட்டை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர், புதுக்கோட்டை நகரமன்ற தலைவர்) நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். 

புதுக்கோட்டை தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது. தற்போது அ.தி.மு.க. வேட்பாளரை அறிவித்து இருப்பதன் மூலம் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. 

கடந்த சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதி ஓட்டு விவரம்:-

முத்துக்குமரன் (இந்திய கம்யூ) 65,466

பெரியண்ணன் அரசு (தி.மு.க.) 62,365

சீனிவாசன் (ஐ.ஜே.கே) 4,098



comments | | Read More...

ஜுன் 12-ல் புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு




புதுக்கோட்டை தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட முத்துக்குமரன் கடந்த 1-ந்தேதி கட்சி தொண்டர் மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது கார் கவிழ்ந்து மரணம் அடைந்தார்.  
இதையடுத்து புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வந்தது.
 
இந்நிலையில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் தேதியை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, வரும் ஜுன் 12-ம் தேதி இ� �ைத்தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வோர் மே 18-ம் தேதி தாக்கல் செய்யலாம்.  வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே.25. வேட்பு மனு மே 26-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. மனுவை வாபஸ் பெற மே 28-ந் தேதி கடைசி நாள். ஜுன் 15-ல் வாக்குகள் எண்ணப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
 
புதுக்கோட்டை உடன் இதர 4 மாநிலங்களில் 27 சட்டமன� ��ற தொகுதிகளுக்கும் ஜுன் 12-ல் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் மட்டும் 18 சட்டமன்ற மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. கர்நாடகா, மேற்கு வங்கத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடக்கிறது.
 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தொகுதிகளில் நடத்தை விதி உடனடியாக அமுலுக்கு வந்தது.




comments | | Read More...

திரிகோணமலை விநாயகர் கோவிலை இடிக்க இலங்கை அரசு உத்தரவு




திரிகோணமலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை இடிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை தம்புள்ளா பகுதியில் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளிவாசலை கடந்த வாரம் புத்த பிச்சுக்கள் தாக்கினர். இதையடுத்து அந்த பள்ளிவாசல் கட்டிடத்தை இடித்துவிட்டு, வேறு இடத்� ��ிற்கு பள்ளிவாசல் மாற்றப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது. இதனால் அங்குள்ள முஸ்லிம்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இந்த பிரச்சனை தீருவதற்குள் சாலையை விரிவுபடுத்துவதற்காக திரிகோணமலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை இடிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

திரிகோணமலை மருத்துவமனை வளாகத்தில் 60 ஆண்டு பழமை வாய்ந்த விநாயகர் கோவில் உள்ளது. போரில் சேதமடைந்த கோவிலை சீரமைத்துள்ளனர். வரும் ஜூன் மாதம் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் சாலையை விரிவுபடுத்துவதற்காக அந்த கோவிலை இடிக்க பாதுகாப்பு அமைச்� ��கத்தின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த உத்தரவால் இந்துக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

போருக்குபு் பிறகு தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட இலங்கை சென்ற இந்திய எம்.பி.க்கள் குழு நாடு திரும்பியவுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்ப்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

நகைச்சுவைக்கதை: படக்கூடாத இடத்தில் பட்ட மீன்



தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் மீனவர் சிலர் பாக்குநீரிணையில் இந்திய இலங்கை எல்லையின் இந்தியப் பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த சிங்களக் கடற்படையினர் அவர்கள் மீது சுட� ��் தொடங்கினர். தமிழ் மீனவர்களில் இருவர் அந்த இடத்திலேயே செத்து விழுந்தனர். இருவர் காயமடைந்தனர். அப்போது கடற்படைத் தளபதி அவர்களைத் தடுத்து இப்பொது முன்னர் மாதிரி நிலமை இல்லை. பிரச்சனை ஜெனீவாவரைக்கும் போகலாம் அவர்களை முன்பு போலச் சுட்டுக் கொல்லாமல் கைது செய்வோம் என்றான். அவர்கள் தமிழ் மீனவர்களின் படகை அண்மித்த வேளையில் இந்தியக் கடலோரப் பாதுகாப்புக் கப்பல் ஒன்று அந்த இடத்திற்கு வழி மாறி வந்துவிட்டது. இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுடப்படும் பக்கம் போகவே கூடாது என்று அவர்களுக்கு கடுமையான உத்தரவு மேலிடத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. பிழையான இடத்தில் பிழையான நேரம் தாம் வந்துவிட்டதை உணர்ந்த இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையினர் ஒருவாறு நிலைமையை சமாளிக்க எஞ்சியிரு� ��்த இரு தமிழ் மீனவர்களிடம் என்ன நடந்தது என்று முதலில் இந்தியிலும் பின்னர் மலையாளத்திலும் கேட்டனர். கேள்வியை ஒருவாறு புரிந்து கொண்ட தமிழ் மீனவன் நடந்ததைச் சொன்னான்.  சிங்களக் கடற்படைத் தளபதி இந்தியாவில் படைப் பயிற்ச்சி பெற்றவனாதனால் இந்தியில் கதைக்கத் தொடங்கினான். இவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கடத்துபவர்கள் எங்கள் பிரதேசத்துக்குள் வந்து மீன் பிடித்தார்� ��ள். அவர்களை நாம் கைது செய்யச் சென்றபோது அவர்களிடம் இருந்த கைக்குண்டு வெடித்து இருவர் இறந்துவிட்டனர் இருவர் காயமடைந்து விட்டனர். அப்போது இந்தியக் கரையோரக் காவல்படையினர் காயப்பட்டவர்களுக்கு எந்த வித உதவியும் செய்யாமல் தமிழ் மீனவர்கள் இருவரையும் பார்த்து  நீங்கள் அவர்கள் கடலில் பிடித்த மீன்களை அவர்களிடமே கொடுத்து விடு என்றனர். தமிழ் மீனவர்கள் இருவரும் இல்லை � ��து எங்கள் கடலுக்குள் பிடித்த மீன்கள் என்றனர். அப்போது இந்தியக் கடலோரக் காவல் படையினர் இரு நாடுகளின் ராஜதந்திரப் பிரச்சனை என்றபடியால் இதை சாணக்கிய தந்திரப்படியும் மனுதர்ம சாஸ்த்திரப்படியும் தீர்க்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் மீன் எறியும் போட்டியால் தீர்த்துக் கொள்ளுவோம். முதலில் சிங்களக் கடற்படை உன் மீது ஒரு மீனை வீசட்டும் பின்னர் நீ சிங்களவன் மீது ஒரு மீனை வீசு யாருடைய எறி அதிக காயத்தை ஏற்படுத்துகிறதோ அவன் வென்றவன் ஆவான் என்றானர் இந்தியக் கடலோரக் காவற்படையினர். இருதரப்பினரும் சம்மதித்தனர். முதலில் சிங்களவன் ஒரு பெரிய மீனை எடுத்து அதன் வயிற்றுக்குள் ஒரு சங்கைத் திணித்து தமிழ் மீனவர் இருவரில் ஒருவர் மீது வீசினான். அவர் எதிர்பார்த்தபடியே அது தமிழ் மீனவன் மீது படாத இடத்தில் பட தமிழ் மீனவன் துடித்து விழுந்து இறந்தான� �. கொதிப்படைந்த எஞ்சிய கடைசித் தமிழ் மீனவன் தானும் ஒரு பெரிய மீனை எடுக்க இந்தியக் கடலோரக் காவற்படையினர் இது என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு மீனால் எறிந்து கொண்டு....சரி உனது மீன் யாவற்றையும் நீயே எடுத்துக் கொண்டு போய்விடு என்று தீர்ப்பளித்தான்.

கதையின் நீதி: அதிக அளவு தமிழர்கள் கொல்லப்படவேண்டும் என்பதே ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் நோக்கம்.

ஒரு பொருத்தமான � �ருத்துப்படம்:
படம் வரைந்தவருக்கு நன்றியும் பாராட்டுக்களும்




http://tamil-video.blogspot.com




comments | | Read More...

சிபி சக்கரவர்த்தி புறாவை ரசம் வைத்து சாப்பிட்டிருந்தால்... பண்ருட்டி ராமச்சந்திரன்




போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாற்காலியில் உட்கார வை த்து மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். இதன் மீது நடந்த விவாதம் விவரம்,

பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக): சத்தீஸ்கர் மாநிலத்தில் கலெக்டர் கடத்தல், ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ. கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. வறுமை, ஏற்றத்தாழ்வு போன்ற காரணங்களால்தான் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் தோன்றுகிறார்கள். தமிழகத்தில் வறுமை, துன்பம் ஒருபுறமும், வசதி வாய்ப்பு அதிகரிப்பது என்கிற நிலை மற்றொரு புறம் ஏற்பட்டு ஒரு ஏற்றத்தாழ்வான நிலை இருப்பதால்தான் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா: தீவிரவாதிகள், நக்சலைட்டுகள், வறுமை ஏற்றத்தாழ்வு காரணமாக உருவாகிறார்கள் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் கூறினார். அத்தகைய தீவிரவாதிகளும், நக்சலைட்டுகளும் தமிழ்நாட்டில் இல்லை. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன்: காவல் துறையினர் சாதாரண மக்களுக்காக உழைப்பவர்கள். அவர்களுடைய பார்வையில் ஒரு புதிய சமூக கண்ணோட்டம் வேண்டும். சாதாரண மக்கள் காவல் நிலையத்திற்கு செல்வதற்கு அஞ்சும் நிலை வரக் கூடாது. ஏழைகள் காவல் நிலையத்தை கண்டு பயப்படக்கூடாது.

ஜெயலலிதா: காவல் நிலையங்களை கண்டு அஞ்சுகின்ற நிலைமை கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில்தான் இருந்தது. தற்போது அத்தகைய நிலைமை இல்லை. காவல்துறையை மக்கள் நண்பனாகத்தான் கருதுகிறார்கள். போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மக்கள் காவல் நிலையம் சென்ற ால் அவர்கள் நன்றாக கவனிக்கப்படுகின்றனர். புகார் அளிப்பதற்காக காவல் நிலையம் செல்லும் பொதுமக்களுக்கு மரியாதை செய்து அவர்களை நாற்காலி போட்டு அமர வைத்து புகார்களை பெற வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டு இதற்கென ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 10 இருக்கைகள் போடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி காவல் நிலையம் வரும் மக்கள் உபசரிக்கப்பட்டு அவர்களிடம் ப ுகார் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 11 மாத கால இந்த ஆட்சியில் காவல் நிலையம் செல்வதற்கு மக்கள் அஞ்சுகின்ற நிலை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

பண்ருட்டி ராமச்சந்திரன்: முதலமைச்சரின் நல்ல நோக்கம் வரவேற்கத்தக்கதுதான். ஆனாலும் அதிலுள்ள சில குறைபாடுகளை எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
உதாரணத் திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பாத்தியனூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்ற தந்தையும், மகனும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்று அதில் மகன் இறந்து போனதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. எனவே இன்னும் காவல் நிலையத்தை கண்டு பயப்படும் நி லை உள்ளது.

ஜெயலலிதா: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பத்திரிகைகளில் வந்த ஒரு செய்தியை வாசிக்கிறார். பாலமுருகன் என்ற அந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்கு என்ன காரணம் என்று தெரியாது. காவல் துறையினர்தான் காரணம் என்பதற்கு ஆதாரம் எதுவும் இவரிடம் இல்லை. இது பற்றி முறையாக இவர் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அந்த மாவட்ட க ாவல் துறை அதிகாரி மற்றும் அந்த காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருடன் உரிய முறையில் விசாரித்து அரசு உண்மை நிலை குறித்து அறிக்கை வெளியிடும்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: முதலமைச்சருக்கு நன்றி. காவல் நிலையங்களின் மீது சாதாரண மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றுதான் கூறினேன். சிபி சக்கரவர்த்தி காலத்தில் வல்லூரு ஒன்று புறாவை துரத்த அந்த புறா மன்னன் நமக்கு அடைக்கலம் தருவார் என்ற நம்பிக்கையுடன்தான் அவரிடம் தஞ்சமடைந்தது. அவர் ரசம் வைத்து சாப்பி� ��்டு விடுவார் என்றால் அங்கு சென்றிருக்குமா?

ஜெயலலிதா: எதிர்க்கட்சி துணைத் தலைவர் புராண காலத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ராமாயணத்தை பற்றி பேசினார். இப்போது சிபி சக்கரவர்த்தி கதை பற்றி சொல்கிறார். தற்போது நவீன காலம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் காவல் துறை எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: கதையை மட்டும் பார்க்கக் கூடாது. அதன் பின்னால் உள்ள கருத்தையும் பார்க்க வேண்டும். காவல் துறையினரால் பணக்காரர்கள் எவரும் பாதிப்புக்கு ஆளாவதில்லை. சாதாரண ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

ஜெயலலிதா: பணக்காரர்கள் யாரும் காவல் நிலையத்திற்கே செல்வதில்லை. சாதாரண மக்கள்தான் செல்கின்றனர். சாமானியர்களுக்கு காவல் நிலையம் உறுதுணையாக இருக்கிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன்: காவல் நிலைய மரணங்கள் குறித்து முதலமைச்சர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே 4 பேர் மரணம் என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் 11 பேர் மரணமடைந்துள்ளதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதா: நாங்கள் ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் ஒரு சில வழக்கில் சாட்சிகளை விசாரணைக்கு அழைத்து சென்றபோது நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம் 4 பேர் மரணமடைந்ததாகத்தான் அரசு தரப்பில் தகவல் உள்ளது. இவர் 11 பேர் மரணம் என்கிறார். அரசுக்கு வராத தகவல் எப்படி இவருக்கு கிடைத்தது. இதற்கு என்ன ஆதாரம்?

காவல் துறையினர் வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போதும், வழி காவலின் போதும் எதிர்பாராதவிதமாகவும், நோய் காரணமாக மருத்துவமனைக்கு அனுப்பும் போதும் திருடர்கள் என நினைத்து மக்கள் சிலரை தாக்கி அவர்கள் காவல் நிலையம் வரும் போதும் காவல் நிலைய விசாரணைக்கு பிறகு வீடு திரும்பியவர்கள் தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது உடல்நலக்குறைவு காரணமாக இறந்தாலோ அதையெல்லாம் காவல் நிலைய மரணம் என்று சொல்லி விடுகிறார்கள்.

இது தொடர்பாக ஒரு பாரபட்சமற்ற குற்றவியல் நடுவர் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறோம். அதில் காவல் துறையினர் மீது தவறு இருந்ததாக தெரிய வந்தால் தகுந்த நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. காவல் துறையினரும் பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியிருக்கிறோம்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: சாலை விபத்துகள் தமிழகத்தில் அதிகம் நடைபெறுகிறது. உயிரிழப்பும் இங்கு அதிக அளவில் ஏற்படுகிறது.

ஜெயலலிதா: தமிழகத்தில் வாகன எண்ணிக்கைகள்தான் அதிகரித்துள்ளது. சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் குறைந்த அளவில்தான் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு இந்த விவாதம் நடைபெற்றது.

மேலும் முதல்வர் கூறுகையில், போலீசார் ஓய்வு பெற்ற பிறகு சொந்த வீட்டில் வசிக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தர்மபுரியில் ஆசிரியரை தாக்கிய டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



comments | | Read More...

சென்னையில் இன்று திருமண நாள் கொண்டாடிய அஜித், ஷாலினி




அஜீத், ஷாலினி தம்பதி � ��ென்னையில் இன்று தங்கள் திருமண நாளை கொண்டாடினார்கள். அஜீத் 12 வருடங்களுக்கு முன் 2000 ஏப்ரல் 24-ந் தேதி ஷாலினியை மணந்தார். அப்போது அஜித் கதாநாயகனாக நடித்து வந்தார்.

ஷாலினியும் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருந்தார். இருவரும் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பின் அஜித் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார். அவரது படங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக ஓடுகின்றன. பில்லா, மங்காத்தா ஹிட் படங்கள் வரிசையில் அடு த்து பில்லா-2 வர இருக்கிறது. இவர்களுக்கு 2008-ல் பெண் குழந்தை பிறந்தது. அனோஷ்கா என பெயரிட்டுள்ளனர்.



comments | | Read More...

சி.டி விவகாரம்: பதவிகளை ராஜினாமா செய்தார் அபிஷேக் சிங்வி





ஆபாச சிடி சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

அபிஷேக்சிங்வியும் ஒரு பெண் வழக்கறிஞரும் ஏடாகூடமாக இருக்கும் ஆடியோ சிடி இணையத்தில் உலாவி சர்ச்சையை உருவாக்கியது. சிங்வியும் நீதிமன்றப் படிகளில் ஏறி அது ஒரு பொய்யான சிடி என்று கூறி வாதிட்டு வந்தார். கடைசியாக அவரது ஓட்டுநரே போலி சிடி தயாரித்து ஆப்படித்த விவகாரம் தெரியவந்தது.

இந்த சர்ச்சை வெளியானதுமுதல் காங்கிரஸ் கட்சியும் அவரை ஓரம்கட்டி வைத்துவிட்டது. ஒவ்வொரு திங்கள்கிழமையும் செய்தியாளர்களை காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் சிங்வி சந்தித்து வந்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் நாடாளுமன்றத்தின் சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழுவின் தலைவர் பொறுப்பு ஆகியவற்றிலிருந்து அவர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாலும் நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பக் கூடும் என்பதாலும் காங்கிரஸ் கட்சியே அவரை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.

ராஜினாமா செய்துவிட்டால் மட்டும் போதுமா? நாடாளுமன்றத்தின் மரியாதையைக் கெடுத்துவிட்ட சிங்வி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா இப்போதே போர்க்கொடி தூக்கிவிட்டது. நாடாளுமன்றத்தை முடக்க சிங்வி விவகாரமும் எதிர்க்கட்சிகளின் கைகளுக்கு கிடைத்� ��ுவிட்டது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger