News Update :
Powered by Blogger.

ஜெயலலிதாவை பிரதமராக்க ஒத்துழைக்க வேண்டும்: பாஜகவுக்கு கோரிக்கை

Penulis : karthik on Saturday, 14 January 2012 | 22:57

Saturday, 14 January 2012

சென்னையில் நேற்று ( 14.1.2012) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் மூத்த
தலைவரும் , முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி , குஜராத் முதல்வர்
நரேந்திர மோடி , தமிழக பா.ஜ. , தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் , முன்னாள்
தலைவர் இல.கணேசன் , இந்து முன்னணி ராம.கோபாலன் , உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பேசும்போது
`` வணக்கம் , அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் '' என்று தமிழில்
பேசி தன் பேச்சை ஆங்கிலத்தில் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது ;-
தமிழ்நாட்டிற்கும் , குஜராத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நீண்ட
காலமாகஇரு மாநிலங்களுக்கு நல்லுறவு இருந்து வருகிறது. தமிழர்களுக்கு
காப்பி என்றால் மிகவும் பிடிக்கும். அந்த காப்பிக்கு தேவைப்படும்
சிக்கிரி குஜராத்தில் அதிகம் விளைகிறது. அதேபோல் , தமிழ் பெண்களுக்கு
பருத்தி சேலை மிகவும் பிடிக்கும்.
இந்தியாவில் அதிக பருத்தி சேலைகள் தயாரிக்கப்படுவது குஜராத்
மாநிலத்தில்தான். தமிழர்கள் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் கடலை
எண்ணெய் உற்பத்தியில் குஜராத் முன்னணியில் உள்ளது. குஜராத்தை பூர்வீகமாக
கொண்ட சவுராஷ்டிரர்கள் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து
மண்ணின் மைந்தர்களாகவே மாறிவிட்டார்கள்.
இதேபோல் குஜராத்திலும் எனது மணிநகர் தொகுதியில் மட்டும் 20
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். இரு தரப்பினரும்
தத்தம் மாநில பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
குஜராத் , தமிழ்நாடு இரு மாநிலங்களும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணம்
செய்கின்றன.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு , காங்கிரஸ் ஆட்சியில் அல்லாத
மாநிலங்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது. அந்த
வகையில் தமிழகமும் , குஜராத்தும் தொடர்ந்து மத்திய அரசால்
புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு
பறிக்கிறது.
இது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும். காங்கிரஸ் அரசு
ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கிறதே தவிர ,
நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியிலோ , முன்னேற்றத்திலோஅக்கறை
செலுத்தவில்லை. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்திவிட்டு
மக்களிடையே மத , இன , பிராந்திய ரீதியாக வேற்றுமை உணர்வை ஏற்படுத்தி
வருகிறது.
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
முன்னதாக , துக்ளக் ஆசிரியர் சோ , துக்ளக் அலுவலக நிர்வாகிகளை மேடையில்
ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திவைத்தார். பின்னர் துக்ளக் வாசகர்கள்
எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துப்பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் இலவச திட்டங்களை ஜெயலலிதா
அறிவித்திருக்காவிட்டால் தி.மு.க.தான் தொடர்ந்து ஆட்சியில்
இருந்திருக்கும். அரசியல் உத்திக்காகத்தான் ஜெயலலிதா இலவசங்களை அறிவிக்க
வேண்டியது இருந்தது. ஆனால் , பதவியேற்றதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்
அறிவித்த இலவச திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
அவரை போல் தினமும் தலைமைச் செயலகத்திற்குச் சென்று உழைக்கக்கூடிய ஒரு
முதல்-அமைச்சரை இதுவரை பார்த்து இல்லை. தவறு என்று தெரிந்துவிட்டால்
அவரைப் போல தைரியமாக யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாது.
குஜராத் மாநிலம் அனைத்து துறைகளிலும் வளர்ந்தது போல தமிழகத்திலும்
வளர்ச்சியை ஏற்படுத்த ஜெயலலிதா ஆசைப்படுகிறார். அதற்கு அவர் தொடர்ந்து 10
ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும். தேசப்பக்தி , கடின உழைப்பு ,
பலமொழிகள் பேசும்திறன் , எதையும் எளிதாக கிரகித்துக்கொள்ளும் ஆற்றல்
உள்பட பல்வேறு திறமைகள் அவரிடம் காணப்படுகின்றன.
மத்தியில் அடுத்து அமைய உள்ள புதிய ஆட்சியை உருவாக்கும் பணியில்
அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் பங்கு இருக்கும். மத்தியில் பா.ஜ.க. அல்லாமல்
அது ஆதரிக்கும் கட்சி ஆட்சிக்கு வருவதாக இருந்தால் ஜெயலலிதா பிரதமராக வர
வேண்டும்.
இவ்வாறு சோ கூறினார்.
விழாவில் , பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் , மாநில தலைவர்
பொன்.ராதாகிருஷ்ணன் , முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் , துணை
பொதுச்செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பத்திரிகையாளர்
எஸ்.குருமூர்த்தி , சினிமா டைரக்டர் கே.பாலச்சந்தர் , நடிகர் ரஜினிகாந்த்
, முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் , வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர்
ஜி.விஸ்வநாதன் , முன்னாள் எம்.பி.இரா.செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
comments | | Read More...

மனைவிக்கு போதை மாத்திரை கொடுத்து ஆபாச படம்

கோவையை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ்
நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் ,
'' எனக்கும் பெங்களூர் ஆர்.கே.நகரை சேர்ந்த முகமது பயாஸ் ( 25 )
என்பவருக்கும் கடந்த 5.12.2010 அன்று திருமணம் நடந்தது. திருமணத்துக்கு
பின் நாங்கள் பெங்களூரில் தனிக்குடித்தனம் நடத்தினோம்.
அங்கு சென்றதும் கணவர் வேலைக்கு செல்லாமலும் , வீட்டுக்கு ஒழுங்காக
வராமலும் இருந்தார். என்னை வீட்டில் அடைத்து வைத்து , என்னுடைய
செல்போனையும் பறித்து வைத்துக்கொண்டார்.
ஒரு நாள் தலைவலிக்கு மாத்திரை கேட்டேன். அதற்கு கணவர் கொடுத்தமாத்திரையை
சாப்பிட்டதும் மயங்கி விட்டேன். பின்னர் அவரதுநண்பரை , என்னோடு சேர்த்து
ஆபாச படம் எடுத்துள்ளார்.
மயக்கம் தெளிந்ததும் , அதை என்னிடம் காட்டி எனது பெற்றோரிடமிருந்து 10
பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் வாங்கி வா.
இல்லையென்றால் ஆபாச படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி
விடுவேன் என்று மிரட்டி கொடுமைப்படுத்தினார். எனவே அவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் '' என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து முகமது பயாஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை
தேடி பெங்களூர் விரைந்துள்ளனர்.
comments | | Read More...

பெர்த் டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது இந்தியா

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பெர்த்தில் நடைபெற்ற மூன்றாவது
டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்கள்
வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்
தொடரை ஆஸி. அணி 3-0என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்
செய்து 4 டெஸ்ட்போட்டிகளில் விளையாடுகிறது. இதில் மெல்போர்ன் மற்றும்
சிட்னியில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா படுதோல்வி அடைந்தது.
3-வது டெஸ்ட் பெர்த்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல் இன்னிங்சில் இந்தியா 161ரன்னில் சுருண்டது. அதன்பின் முதல்
இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட்
இழப்பின்றி 149 ரன் எடுத்திருந்தது. வார்னர் 104 ரன்னுடனும் , கோவன் 40
ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில்
கோவன் அரைசதம் அடித்தார். அரை சதம் அடித்த கோவன் 70 ரன்னில் ஆட்டம்
இழந்தார். அதன்பின் வந்தமார்ஷ் 11 ரன்னிலும் , பாண்டிங் 7 ரன்னிலும்
ஆட்டம் இழந்தனர். மூன்று விக்கெட்டுகளையும் யாதவ் வீழ்த்தினார். ஒருபுறம்
விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வார்னர் சிறப்பாக விளையாடி வார்னர்
150 ரன்னை கடந்தார். அதிரடியாக விளையாடிய வார்னர் 180 ரன் எடுத்து
ஆட்டம் இழந்தார்.
வார்னரின் விக்கெட் வீழ்ந்ததும் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் மளமளவென
சரிந்தது. இறுதியில் ஆஸ்திரேலியா 369 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளை
கைப்பற்றினார்.
208 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது.
வழக்கம்போல் முன்னணி வீரர்களான காம்பீர் (14) , சேவாக் (10) , சச்சின்
(8) , லட்சுமண் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
5வது விக்கெட்டுக்கு டிராவிட்டுடன் வீராட் கோக்லி ஜோடி சேர்ந்தார்.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்
இழப்பிற்கு 88 ரன்கள்எடுத்திருந்தது. டிராவிட் 32 ரன்களுடனும் , விராட்
கோக்லி 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. இருவரும் நிதானமாக ஆடி ஸ்கோரை
மெதுவாக உயர்த்தினர். இவர்களது ஆட்டம் ரசிகர்களுக்கு சிறிது நம்பிக்கையை
தந்தது. விராட் கோக்லி அரை சதம் அடித்து ஆறுதல்தந்தார்.
அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் சுவரான
டிராவிட் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் டோனி பொறுப்பே
இல்லாமல் 2 ரன்னில் ஆட்டமிழந்து எரிச்சலூட்டினார்.
அடுத்து வந்த டெயிலெண்டர்களும்வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி விட
இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 171 ரன்களுக்குள் சுருண்டது. இது
முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 10 ரன்கள் மட்டும் அதிகம் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கோக்லி 75 ரன்கள் எடுத்து
ஆட்டமிழந்தார். ஆஸி. அணி தரப்பில் ஹில்பெனாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி
அசத்தினார்.
அதிரடியாக ரன் குவித்த ஆஸி. அணி வீரர் டேவிட் வார்னர் இப்போட்டியின்
ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
comments | | Read More...

நண்பருடன் சேர்த்து மனைவியை ஆபாச படம் எடுத்த கணவன்

மனைவிக்கு போதை மாத்திரை கொடுத்து மயங்க செய்து நண்பருடன் சேர்த்து ஆபாச
படமெடுத்த பின் இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டிய கணவன் மீது கோவை
போலீசார் வழக்குபதிவுசெய்துள்ளனர். நீலகிரி மாவட்டம்ஊட்டி அடுத்த
பிக்கட்டியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், உடலில் காயத்துடன் கோவை அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 9ம் வகுப்பு வரை படித்துள்ள அவர்
அனைத்து மகளிர் போலீசில் அளித்தபுகாரில் கூறியிருப்பதாவது:
எனக்கும், பெங்களூர் ஆர்.கே.நகரை சேர்ந்த முகமது பயாசுக்கும்(25)கடந்த
2010ல் திருமணம் நடந்தது.கணவர் கார்பென்டர். திருமணத்தின்போது பெற்றோர் 7
பவுன் நகையும், ரூ.1.25 லட்சமும் கொடுத்தனர். திருமணத்துக்குப்பின்
பெங்களூரில் தனிகுடித்தனம் நடத்தினோம். சில மாதங்களிலேயே கணவர் மேலும்
நகை, பணம் கேட்டு டார்ச்சர் செய்ய துவங்கினார். சமீபத்தில் தலைவலிக்கு
மாத்திரை கேட்டேன். கணவன் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதும்
மயங்கிவிட்டேன்.
பின்னர் அவரது நண்பரை என்னோடு சேர்த்து ஆபாச வீடியோ எடுத்துள்ளார்.
மயக்கம் தெளிந்ததும் அதை என்னிடம் காட்டி எனது பெற்றோரிடமிருந்து 10
பவுன் நகை, ரூ.10 ஆயிரம் வாங்கி வராவிட்டால் இந்த ஆபாச படத்தை
இன்டர்நெட்டில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டினார். என்னை அடித்தும்
துன்புறுத்தினார். நான் கோவையில் உள்ள எனது அண்ணன் வீட்டுக்கு
வந்துவிட்டேன். இங்கு வந்தும் என்னை தாக்கினார். எனது கணவர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். இதையடுத்து, முகமது
பயாஸ் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு
சட்டம் உட்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பயாசை
தேடி பெங்களூருக்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர்.
comments | | Read More...

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடிகள் தஞ்சம்

உடுமலை நகர போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நகரப்பகுதியைசேர்ந்த இரண்டு காதல்
ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். நேற்று காலை உடுமலை தனியார்
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பிரியங்கா (21); ராமசாமி நகரை
சேர்ந்தவர். இதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23) தனியார்நிறுவனத்தில்
பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாககாதலித்து வந்த இருவரும் நேற்று
முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். காதல் ஜோடிகள்நேற்று பாதுகாப்பு
கேட்டு உடுமலை போலீசில் மனு அளித்தனர்.இருவரின் பெற்றோருக்கும் போலீசார்
தகவல் அளித்து கவுன்சிலிங் நடத்தினர்.
இதே போல், உடுமலை கோமதி நகரை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2
வகுப்பில் படிக்கும் மாணவி, கங்காதரன் லே-அவுட்டில் வசிக்கும் மினி ஆட்டோ
டிரைவர் லோகநாதன் (26) இந்த ஜோடியும் திருமணம் முடித்து ஸ்டேஷனில்
தஞ்சமடைந்தனர்.
இதில், மாணவியின் வயது குறித்த சர்ச்சையால் போலீசார் பல மணி நேர
பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில், பெற்றோருடன் செல்ல இருவரும்
மறுத்ததால் அவர்களை மாலை 5.00 மணிக்கு மேல் போலீசார் திருப்பி
அனுப்பினர்.
comments | | Read More...

ஏரல் அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை

ஏரல் அருகே வண்ணியநல்லூரில் கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார்
தேடி வருகின்றனர்.
ஏரல் அருகேயுள்ள வண்ணியநல்லூர்நடுத்தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ்(27).
இவருக்கு திருமணம்மாகி சுதாஜெபகனி(23) என்ற மனைவியும் இரண்டரை வயதில் ஆண்
குழந்தையும் உள்ளது. இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்தோணிராஜ் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது
மனைவி மற்றும் குழந்தை வீட்டில் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். அவர்களை
பல இடங்களில் தேடியும் இதுவரை எந்த தகவலும் இல்லை. இதனால் அந்தோணிராஜ்
ஏரல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பால்ஐசக் வழக்குப்பதிவு
செய்து காணாமல் போன இளம்பெண் மற்றும் கைக்குழந்தையை தேடி வருகிறார்.
comments | | Read More...

ஒரு நாள் முன்னதாக ஜோதி தெரிந்ததாக பரபரப்பு: தேவசம்போர்டு திணறல்

சபரிமலையில் இன்று மாலையிலேயே ஜோதி தெரிந்ததாக பக்தர்கள் மத்தியில்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தேவசம்போர்டு செய்வதறியாது திகைத்து
நின்றது.
சபரிமலையில் பொதுவாக மகரவிளக்கு விழா ஜன., 14-ம் தேதிதான் நடைபெறும்.
சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் நாளில் மகரவிளக்கு
விழா நடைபெறும். இந்த ஆண்டு நாளை அதிகாலை 12.59 மணிக்கு சூரியன் மகர
ராசியில் கடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் சூரியன் இடம்
பெயர்வதால் 15-ம் தேதி மகரவிளக்கு விழா நடைபெறும் என்று தேவசம்போர்டு
அறிவித்தது. ஆனால் கேரளாவில் ஒரு பிரிவு ஜோஸ்யர்களும், தந்திரி சமாஜாத்தை
சேர்ந்தவர்களும் 14-ம் தேதிதான் மகரவிளக்கு நடத்த வேண்டும் என்று கருத்து
தெரிவித்தனர். ஆனால் இதை தேவசம்போர்டு நிராகரித்து விட்டது.
இந்நிலையில் இன்று மாலை சபரிமலை சன்னிதானத்தில் தீபாராதனை முடிந்ததும்
வழக்கமாக ஜோதி தெரியும் இடத்தில் ஒரு நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க
தொடங்கியது. நாளை நடைபெறும் மகரவிளக்கு விழாவை நேரடி ஓளிபரப்பு
செய்வதற்காக தயாராகிகொண்டிருந்த டிவி கேமராமேன்கள்இதை படம் பிடித்தனர்.
சிறிது நேரத்தில் இது காட்டுத்தீ போல பரவியது. பக்தர்கள் அனைவரும்
பொன்னம்பலமேட்டை நோக்கி கைகூப்பிய படி நின்றனர். அந்த நட்சத்திரம்
மீண்டும் பிரகாசித்த போது பக்தர்கள் சரணகோஷம் எழுப்பினர். பின்னர்
மீண்டும் அது பிரகாசித்தது. இந்த நேரத்தில் மகரவிளக்கு தெரிந்ததாகவும் பல
பக்தர்கள் தெரிவித்தனர். ஆனால் நட்சத்திரத்தை அனைவரும் பார்க்க
முடிந்தது. மகரஜோதி நாளை (ஜனவரி 15) தான் என்று பலமுறை ஒலிபெருக்கியில்
அறிவித்தும் பக்தர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. புல்மேடு விபத்துக்கு
பின்னர் கேரள ஐகோர்ட், அரசிடமும், தேவசம்போர்டிடமும் விளக்கம் கோரியது.
அப்போது அளிக்கப்பட்ட சத்திய வாக்குமூலத்தில் பொன்னம்பலமேட்டில் தெரியும்
நட்சத்திரம் மகரஜோதி என்றும், அது தானாக தெரிகிறது என்றும், அதே
நேரத்தில் மகரவிளக்கு தேவசம்போர்டால் ஏற்றப்படுவது என்றும்
தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்தை சபரிமலையின் மூத்த தந்திரி கண்டரரு
மகேஸ்வரருவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இன்றே நட்சத்திரம்தெரிந்ததால் மகரவிளக்கு விழாவில் குழப்பம்
ஏற்பட்டுள்ளது. ஆனால் நாளை (ஜனவரி 15) தான் மகரவிளக்கு விழா என்றும்,
நாளை திருவாபரணம்அணிவித்து தீபாராதனை நடக்கும் போது பொன்னம்பலமேட்டில்
நட்சத்திரம் ஜோதியாக காட்சி தரும் என்றும், மகரவிளக்கு நாளைதான் தெரியும்
என்றும் தேவசம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரஜோதி
விஷயத்தில் ஆரம்பம் முதலே குழப்பம் ஏற்பட்டுள்ளதால் தேவசம்போர்டு திணறி
வருகிறது.
comments | | Read More...

தமிழர் திருநாள்: ஆளுநர் - முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர்
ஜெயலலிதா மற்றும் அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்கு தங்கள்
வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தை முதல் தேதியை தமிழர்கள் உழவர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். ஜனவரி
15-ம் தேதி தை மாதம் பிறக்கிறது. தமிழரின் ஆண்டுக் கணக்கான
திருவள்ளுவராண்டு 2043 அன்றுதான் பிறக்கிறது.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தை
முதல் நாள் உழவர் திருநாளான பொங்கலும், தை 2-ம் நாள் திருவள்ளுவர் தினம்
எனப்படும் மாட்டுப் பொங்கலும்,அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கலும்
கொண்டாடப்படுகிறது.
தமிழர் கலாச்சாரப்படி மிகப்பெரிய முக்கியமான திருவிழா இதுவே. இந்த தமிழர்
திருநாளுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் அரசியல்
தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்து:
"இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் அறுவடை
தீருவிழாவான பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறேன். இந்த திருவிழாக்கள் மக்களிடம் ஒற்றுமை,
நல்லிணக்கம், அமைதி மற்றும் செல்வ செழிப்பை உருவாக்கட்டும்."
முதல்வர் ஜெயலலிதா:
புதுப் பானையில் பொங்கும் பொங்கல் போன்று நம் மனதில் நல்லெண்ணங்கள்
பொங்கட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல்
திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்களைத்தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சிக் குரல்
எழுப்பி இறைவனை வணங்கி அனைவரும் ஒன்று பட்டு, வேற்றுமைகளை மறந்து உள்ளம்
மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும்.
அச்சமின்மை, மனத்தூய்மை, உண்மை, துணிவு, கருணை போன்ற நல்ல எண்ணங்கள்,
புதுப் பானையில் உள்ள நற்பொங்கல் போன்று நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால்
நாடு நலமும், வளமும் பெறும். பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது
தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும்
அயராது பாடுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப்பண்புள்ளவர்கள்
ஆவார்கள்.
இத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட பல்வேறு
நலத்திட்டங்கள் எனது தலைமையிலான தமிழக அரசால் தீட்டப்பட்டு சீரிய
முறையில் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. தமிழர் திருநாளாம் இந்த பொங்கல்
திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும்,
சிறப்போடும் வாழ இறைவனை வேண்டி என்னுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை
மீண்டும் உரித்தாக்கிக் கொள்கிறேன்," என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி
தமிழக மக்களுக்கு உழவர் திருநாள் வாழ்த்துக்களையும், தை முதல் தேதி
பிறப்பதையொட்டி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்
முன்னாள் முதல்வரும் தி்முக தலைவருமான கருணாநிதி.
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என முன்பு கருணாநிதிஅறிவித்திருந்தார்.
ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் அந்த அறிவிப்பை ரத்து செய்து சித்திரை 1 தான்
தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றினார்.
ஆனால் திமுகவைப் பொருத்தவரை, தமிழறிஞர்கள் பலரும் ஆய்வு
செய்துவலியுறுத்திய தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதில் உறுதியாக
உள்ளது. எனவே தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர்
திருவிழாவாக அறிவித்து வாழ்த்துக் கூறியுள்ளார் கருணாநிதி.
திருவள்ளுவராண்டு கணக்குப் படி, நாளை பிறக்கும் ஆண்டு 2043 ஆகும்.
விஜயகாந்த்
தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், தனது பொங்கல்
வாழ்த்து செய்தியில், தை பிறக்கும் இந்த நல்லவேளையில் மக்கள் இடர் நீங்கி
நலம் பெற்று வாழ வாழ்த்துவதாகக் கூறியுள்ளார். முன்னதாக அவர் தனது
அலுவலகத்தில் தொண்டர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார்.
ஞானதேசிகன்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன்,"தானே புயலால்
பாதிக்கப்பட்டிருக்கின்ற விவசாய நண்பர்களை நினைத்துப் பார்த்து,
அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம், அவர்களின்துயர் துடைப்பில்
ஈடுபடுவோம்," என்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சி
தமிழ், தமிழர்கள், தமிழகம் அனைத்துத் துறைகளிலும், நிலைகளிலும் மேம்பட
தொடர்ந்து போராட இந்த பொங்கல் நாளில்உறுதியேற்போம் என மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்
கூறியுள்ளார்.
தா பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் தா.பாண்டியன் தனது பொங்கல்
வாழ்த்தில்,"நிர்வாகத் துறைகளிலும், பொது வாழ்க்கையிலும் ஊழல்களை அகற்றி,
நெறிகளோடு அமைந்த சமூதாயம் அமைந்திட உறுதி ஏற்பதோடு, நமக்குள்ள நீர்
ஆதாரங்கள், ஆறுகள், குளங்கள், ஏரிகளை, அழிய விடாமலும், புதுப்பித்தும்
காத்திட முயல்வோம். தமிழ் மக்கள் அண்டை நாடான இலங்கையில் பட்டுவரும்
துயரங்களைத் துடைக்க தொடர்ந்து பணிகளை ஆற்றுவோம்.
தமிழ்நாட்டின் அடிப்படை நலன்கள், உரிமைகளைக் காத்திட ஒன்றுபட்டுப்
பணிபுரிவோம். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோர் தம் வாழ்வில் மக்களுக்கு வழி
காட்டும் வகையில் நேர்மையைக் கடைப்பிடித்து ஒழுக முயல வேண்டும். எதை
இழக்க நேரிடினும், நம் முன்னோர் பதித்துள்ள பண்பாட்டைக் காத்து நிற்க,
பொங்கல் திருநாளில் உறுதியேற்க கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேண்டி
நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
Tags: வாழ்த்து
Other articles
comments | | Read More...

புதிய அணை கேரளாவுக்கு மட்டுமேசொந்தமாக இருக்கும்: முதல்-மந்திரி உம்மன்சாண்டி

முல்லைப் பெரியாறில் கட்டப்படும் புதிய அணை கேரளாவுக்கு மட்டுமே சொந்தமாக
இருக்கும். தமிழகம் உரிமை கோர முடியாது என்று முதல்-மந்திரி உம்
மன்சாண்டி கூறினார். கேரளாமுதல்-மந்திரி உம்மன்சாண்டி அளித்த பேட்டி
வருமாறு:-
முல்லைப் பெரியாறு அணையை ஒட்டி எழுந்த பிரச்சினை குறித்து தமிழக முதல்வர்
ஜெயலலிதாவுக்கு2 கடிதங்கள் எழுதினேன். ஒன்றுக்கு மட்டுமே பதில் வந்தது.
அந்த கடிதத்தில் என்னை குற்றம் சாட்டி எழுதப்பட்டு இருந்தது. அடுத்த
கடிதத்துக்கு இது வரை பதில் வரவில்லை. இரண்டாவது கடிதம் தமிழ் நாட்டில்
நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடர்பானது ஆகும்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக முதல்வருடன் பேச விரும்புவதாக ,
பெங்களூரில் என்னை சந்தித்த அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தேன்.
ஒரு கூட்டறிக்கை விட நான் தயாராக இருக்கிறேன். முல்லைப் பெரியாறில் புதிய
அணை கட்டும் யோசனை இப்போது தோன்றியது அல்ல.
மத்திய நீர்வள கமிஷன் 1979-ம் ஆண்டிலேயே தெரிவித்த யோசனை ஆகும். இது
தொடர்பாக முன்பு கேரளாவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக
என்ஜினீயர்கள் புதிய அணை கட்ட ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து , இரு மாநில என்ஜினீயர்களும் சேர்ந்து புதிய அணை கட்டுவதற்கான
இடத்தை தேர்வு செய்யும் நடவடிக்கையில்ஈடுபட்டனர். தற்போதுள்ள அணையில்
இருந்து 1,300 அடி தொலைவில் புதிய அணை கட்டுவதற்கான இடத்தை தேர்வு
செய்தனர். புதிய அணை கட்டப்படும் வரை பழைய அணையின் பராமரிப்பை இரண்டு
மாநில அரசுகளும் வழக்கமாக மேற்கொள்வது என்று அப்போது முடிவானது.
ஆனால் , இந்த யோசனையை தமிழக அரசு பின்னர் கைவிட்டது. எங்களை பொருத்தவரை
, அணையின் பாதுகாப்பு குறித்து கவலை உள்ளது. அணைப் பகுதியில்
வாழும்மக்களின் பாதுகாப்பை உதாசீனப்படுத்த முடியாது. தமிழகத்துக்கு
தண்ணீரைப் பற்றிகவலை. எங்களுக்கு பாதுகாப்பு குறித்த அச்சம். அவர்களின்
(தமிழகம்) கவலையில் நியாயமில்லை.
புதிய அணை கட்டினாலும் , தமிழகத்தின் பங்கில் ஒரு சொட்டு தண்ணீர் அளவு
கூட குறையாது என்று உறுதி அளித்த பிறகும் , அவர்கள் சமாதானம் அடையவில்லை.
தண்ணீர் பங்கீட்டு முறையை ஒழுங்குப்படுத்த மற்றும் கண்காணிக்க
சுதந்திரமான அமைப்பை ஏற்படுத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அதே
சமயம் , புதிய அணை கட்டும் விஷயத்தில் பின்வாங்கப் போவதில்லை. புதிய
அணையை கட்டியே தீருவோம்.
புதிய அணை கேரளா பகுதிக்குள் அமையும். அணையின் கட்டுமான செலவுகளை கேரளா
அரசே செய்யும். எனவே புதிய அணை கேரளாவுக்கு மட்டுமே சொந்தமானதாக
இருக்கும். கூட்டு உரிமை என்ற பேச்சுக்கே இட மில்லை. புதிய அணையில்
தமிழ்நாடு அரசு உரிமை கோர முடியாது.
இவ்வாறு உம்மன்சாண்டி கூறினார்.
comments | | Read More...

அரசியல் பிரமுகருடன்திருமணம்!? : நடிகை ஷகிலா பேட்டி

ஆபாசமாக நடித்ததாக ஷகிலா மீது வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. தற்போது
ஆசாமி என்ற படத்தில் ஷகிலா நடித்து வருகிறார். இதில்பீர் குடித்து குறி
சொல்லும் போலி சாமியார் கேரக்டரில் வருகிறார்.
ஷகிலாவுக்கு நிஜமாகவே பீர் குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும்
படப்பிடிப்பில் இயக்குரிடம் தினமும் பீர் வாங்கித் தரும் படி தொல்லை
செய்ததாகவும் செய்தி பரவியது. அத்துடன் அரசியல் பிரமுகர் ஒருவரை ரகசியமாக
திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்துவதாகவும் கூறப் பட்டது.
இதுபற்றி ஷகிலாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
ஆசாமி படத்தில் நடித்த போது இயக்குனரிடம் பீர் வாங்கித் தரும்படி நான்
கேட்கவில்லை. என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளது. எனக்கு
மது அருந்தும் பழக்கம் இல்லை. இப்படத்தில் வில்லி கேரக்டரில்வருகிறேன்.
அது எனக்கு பிடித்துள்ளது.
நான் அரசியல் பிரமுகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக வெளியான
செய்தியும் வதந்திதான். இதுவரை எனக்கு திருமணம் நடக்கவில்லை.
தனியாகத்தான் இருக்கிறேன். முதுமலைக்கு சுற்றுலா சென்றபோது கோவையைச்
சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தித்தேன். அவர் எனக்கு நெருக்கமான நண்பராக
இருக்கிறார்.
இவ்வாறு ஷகிலா கூறினார்.
comments | | Read More...

'பாரி பூரி கக்கூஸ் லாரியா?' - ஷங்கர் மீது பாரிவேந்தர் பாய்ச்சல்!!

இயக்குநர் ஷங்கர் பாரிவேந்தர் பெயரை வேண்டுமென்றே கிண்டலடித்து
அவமானப்படுத்துவதாக இந்திய ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பாரிவேந்தர் என்பவரது உண்மையானபெயர் பச்சைமுத்து. இவர்தான் எஸ்ஆர்எம்
பல்கலைக்கழகம் மற்றும் பல தொழில் நிறுவனங்களின் உரி்மையாளர். புதிய
தலைமுறை இவரது தொலைக்காட்சிதான்.
தனது பெயரான பச்சை முத்து என்பதை எந்திரன் படத்தில் ஒரு குடிகாரனுக்கு
சூட்டிவிட்டார் என ஏற்கெனவே இவர் இயக்குநர் ஷங்கர் மீது
குற்றம்சாட்டியிருந்தார் (ஏன் , குடிப்பவர்களுக்கு பச்சைமுத்து என்ற
பெயர் இருக்கக் கூடாதா என்ன ?!!).
இப்போது நண்பன் படத்தில் நாயகன் பாத்திரத்துக்கு பஞ்சவன் பாரிவேந்தன் என
பெயரிட்டிருப்பதையும் , படத்தில் அந்தப் பெயரில் விஜய் கல்லூரியில்
படித்து ஆள் மாறாட்டம் செய்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதையும் ,
அந்தப் பெயரை கதாநாயகி , பாரிவேந்தராவது பூரிவேந்தராவது என
கிண்டலடிப்பதையும் குறை சொல்லி , தனது கட்சியின் சார்பில் அவதூறு வழக்கு
தொடரப் போகிறாராம்!
இதுகுறித்து இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் பி. ஜெயசீலன் , சென்னை
நகர போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனுவில் , " எங்கள் கட்சி
தலைவர் பாரிவேந்தர் பல லட்சம் மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.
எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம் மூலமாக கல்வி சேவையும் செய்கிறார். ஷங்கர்
இயக்கிய " நண்பன் " படத்தில் பாரிவேந்தரை அவதூறு செய்துள்ளார். அந்த
படத்தில் ஒரு மோசடி கதாபாத்திரத்துக்கு பாரிவேந்தன் பெயர்
சூட்டியுள்ளார்.
இன்னொரு பெண் கதாபாத்திரம் மது போதையில் பாரிவேந்தராவது பூரிவேந்தராவது
என்று பேசுவது போன்றும் இன்னொரு இடத்தில் பாரி , பூரி , கக்கூஸ் லாரி
என்ற வசனத்தை பயன்படுத்தியும் பாரிவேந்தரை களங்கப்படுத்தி உள்ளார்.
ஏற்கனவே தனது " சிவாஜி " படத்திலும் வள்ளல் பாரியின் மகள்களான அங்கவை ,
சங்கவை பெயர்களில் கதாபாத்திரங்கள் உருவாக்கி தமிழ் பெண்கள்
கருப்பானவர்கள் என சித்தரித்தார்.
" எந்திரன் " படத்தில் ஒரு குடிகாரனுக்கு பச்சைமுத்து என பெயர் சூட்டி
அவர் பெண்களிடம் தகாத முறையில் நடப்பதுபோல் காட்சி அமைத்தார். எனவே
ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை
எடுக்கவேண்டும். அவதூறான வார்த்தைகளை நீக்கவேண்டும் ," என்று
கூறியுள்ளார்.
நாட்டுல எவ்வளவோ பிரச்சினை... பச்சைமுத்துவுக்கு அவர் பெயரே பிரச்சினை.
விட்டா இதுக்கும் வழக்கு போடச் சொல்வாங்க போல!!
comments | | Read More...

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு - ஜெ ஆட்சியில் வரிவிலக்கு பெற்ற முதல்படம்!

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா
ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழில் தலைப்பு வைத்தாலே போதும், வரி விலக்கு உண்டு என்று முன்பு
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரமற்ற குப்பைப்
படங்களும் தமிழில் தலைப்பு வைத்ததற்காக வரி விலக்கு பெற்றன.
For free News videos
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது...
அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், தரமான படமாக
இருக்க வேண்டும். அப்போதுதான் வரிவிலக்கு என நிபந்தனைகள் விதித்தது.
வரிவிலக்கு பெறத் தகுதியான படங்களை தேர்வு செய்ய 22 பேர் கொண்ட
குழுவையும் அமைத்தது அரசு. இதில் இயக்குநர்கள்,நடிகர்கள்,
தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு பார்த்து பரிந்துரைக்கும் படத்துக்கே வரிவிலக்கு கிடைக்கும்.
வரிவிலக்குக்கு படங்களை அனுப்ப ரூ 10000 கட்டணம் உண்டு.
இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விஜய் நடித்துள்ள நண்பன்
படம் இருப்பதால் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஷங்கர்
இயக்கத்தில்,விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடிக்க பொங்கலுக்கு
வெளியாகியுள்ள இந்தப் படத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
கிடைத்துள்ளது. இந்தநிலையில் வரிவிலக்கு அறிவித்துள்ளது வசூலை மேலும்
அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா பதவிக்கு வந்த இந்த 7 மாதங்களில் வரி விலக்கு பெற்றுள்ள முதல்
படம் நண்பன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: நண்பன் , nanban
comments | | Read More...

தை திருநாள் : மகிழ்ச்சி பொங்கும் தமிழர் திருநாள்

தைப் பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் களை கட்டியுள்ளது.
புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து இயற்கைக்கு நன்றி
செலுத்தும் விழாவாகவும், அறுவடைத் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை
கொண்டாடப்படுகிறது.
வளம் தரும் பொங்கல்
தை முதல்நாள் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் என்றும்,
அறுவடைத்திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில்
மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
பொங்கல் என்பது"பொங்கு' என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். வளம்,
செழிப்பு, மகிழ்ச்சி,ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின்
உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக
அமைந்துள்ளது.
நன்றி தெரிவிக்கும் விழா
ஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும்,
உழைப்புக்கும் துணை இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும்
பண்டிகை பொங்கல். அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த
பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி,
மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும்
விவசாயின் விசுவாசமே பொங்கல். எளிமையும், உயிரோட்டமும் நிறைந்த இந்த
பண்டிகை ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது.
வாசல் முன் வண்ண கோலமிட்டு அடுப்பு மூட்டி அதில் புதுப்பானை வைத்து அந்த
பானையில் இஞ்சி, மஞ்சள் செடிகளை கட்டி பொங்கல் வைக்கின்றர். புத்தரிசி,
வெல்லம், பால், நெய், முந்திரிபோன்றவைகளை கொண்டு பொங்கல் வைக்கின்றனர்.
பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோபொங்கல்' என்று வீட்டில் உள்ள
அனைவரும் உற்சாகத்துடன் கூறி மகிழ்வர். கிராமங்களில் பொங்கல் பொங்கும்
போது குலவை ஒலிக்க அரிசியையும், பாலையும் பானையில் இடுகின்றனர். பொங்கல்
சமைத்தவுடன் தலை வாழை இலை பரப்பி அதில் சமைத்த பொங்கலையும், கரும்பு
வைத்தும் படைத்து இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்துவர்.
கரும்பு படைப்பது ஏன்?
உழைப்பின் அருமையை கரும்பு நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி
உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும்.
இளமையில்கஷ்டப்பட்டு உழைத்தால்தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு
வாழ முடியும் என்ற உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து
வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.
சூரியனுக்கு உகந்தஞாயிறு
இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி தை மாதம் பிறக்கிறது.
சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையிலும், உகந்த அஸ்தம்
நட்சத்திரத்திலும், சூரியபகவானின் நட்பாக கருதப்படும் விருச்சிக
லக்னத்திலும் தை மாதம் பிறக்கிறது. கர வருடத்தில், மகர சங்கராந்தி பலனும்
அதிக நன்மை கிடைப்பதாகவே கணக்கிடப்பட்டுள்ளது.
பொங்கலிட உகந்த நேரம்
வீடுகளில், புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பொங்கலிட உகந்த நேரம், நாளை
(ஞாயிற்றுக்கிழமை) காலை 7.35 மணியில் இருந்து 9.35 மணி வரையிலும்,
அதன்பின்10.35 மணியில் இருந்து பகல் 12 மணிவரையிலும் நல்ல நேரம் ஆகும்.
இந்த வேளைகளில், புத்தாடைஅணிந்து, புத்தரிசி கொண்டு பொங்கலிட்டு சூரிய
பகவானுக்கு படைத்து குடும்பத்துடன் உண்டு மகிழலாம் என வேத விற்பன்னர்கள்
தெரிவித்துள்ளனர்.
Tags: pongal , பொங்கல் , festival
Other articles
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger