Monday, 21 October 2013
நியூயார்க்கில் போலீசாக பணியாற்றும் இந்தியருக்கு இந்திய அமெரிக்க கூட்டமைப்பு நடத்திய பாராட்டு விழா Kerala born NYPD cop felicitated
நியூயார்க், அக்.22-
இந்தியாவின் கேரள மாநிலம், குமிளி நகரில் பிறந்து, படித்து, வளர்ந்தவர் ஸ்டான்லி ஜார்ஜ். பெற்றோருடன் 1983ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியேறிய ஸ்டான்லி ஜார்ஜ் அங்குள்ள பருச் கல்லூரியில் படித்து, பட்டம் பெற்று நியூயார்க் போலீஸ் துறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார்.
பின்னர், போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் அதற்கான பயிற்சி கல்லூரியில் 1992ம் ஆண்டு சேர்ந்து தேர்ச்சியும் பெற்றார்.
2000-ம் ஆண்டு சார்ஜண்ட் ஆக பதவி உயர்வு பெற்று பின்னர் 2007-ம் ஆண்டு போலீஸ் நிலையத்திலேயே பெரிய பதவியான கேப்டன் என்ற நிலையை அடைந்தார்.
இதற்கிடையில், தீவிரவாத தடுப்பு பிரிவிலும் தனது திறமையை பலமுறை நிரூபித்துள்ள இவர் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியினருக்கு பல வகைகளில் உதவியும் செய்து வந்துள்ளார்.
7 ஆண்டுகளாக நியூயார்க் நகர போலீஸ் துறையில் கேப்டனாக பணியாற்றிய ஸ்டான்லி ஜார்ஜுக்கு அமெரிக்காவில் வாழும் இந்தியர் கூட்டமைப்பு நியூயார்க் நகரில் பாராட்டு விழா நடத்தி கவுரவித்தது.
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் இவருக்கு ஏற்கனவே நினைவு பரிசு வழங்கி கவுரவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
...
shared via