Tuesday, 11 September 2012
கசாபுக்கு மரணதண்டனை தீர்ப்பின் நகல் வழங்கப்பட்டது கசாபுக்கு மரணதண்டனை தீர்ப்பின் நகல் வழங்கப்பட்டது
விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
நவநீதம்பிள்ளையின் ஜெனீவா அலுவலகத்துக்கு நிதி வழங்குவது, ஆட்களை நியமிப்பது தொடர்பில் வ ெளிப்படைத் தன்மையை கூட்டுவதற்கு நாடுகள் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டுமென சிறிலங்கா அரச பிரதிநிதி ஆரிய சிங்கா கூறியுள்ளார். நேற்று ஜெனீவா அமர்வின் போதே மேற்கண்ĩ 5;வாறு அறிக்கை வாசித்துள்ளார். இவர் முதலில் தனது அரசாங்கம், தனது அரசாங்கத்தின் கீழ் இருக்கின்ற மனித உரிமை செயலகம் மற்றும் அதன் செயற்பாடுகள், மனித உரிமை செயற்பாடுகளில் நம்பிக்கைத்தன்மையுடனு&# 2990;், வெளிப்படையாகவும் இருக்கின்றதா என்பதனை பார்க்கவேண்டும். ஊழல், கொலை, கொள்ளை,ஆட்கடத்தல், விபச்சாரம், போதைப்பொருள்வர்த்தகம் என கொடிகட்டும் தனது ஆட்சியின் பிரதி  984;ிதியாக இருப்பவர் இவ்வாறு பேசுவது தமாஷாக பேசுவது போன்றே உள்ளது. அல்லது யாரோ எழுதி வைத்த அறிக்கையினை தனது என்று தப்பாக வாசித்துவிட்டாரா? |
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி, இன்று நடக்கிறது. முதல் போட்டி ரத&# 3021;தான நிலையில் புற்றுநோயிலிருந்து மீண்ட யுவராஜ் சிங், இன்று களமிறங்குவதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இரண்டு டி20 போட்ட 07;கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி விசாகப்பட்டனத்தில் நடக்க இருந்தது. இடைவிடாமல் பெய்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்தானது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு "கீமோதெரபி" சிகிச்சைக்கு ப் பின்பு மீண்ட யுவராஜ் சிங் 10 மாத இடைவெளிக்குப் பின்பு களமிறங்க காத்திருக்கிறார். இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக வீரேந்திர ஷேவாக், கவுதம் கம்பீர் வருவர். நடுவரிசையில் சமீப காலமாக இந்தியாவுக்கு பல்வேறு வெற்றிகள் தேடித் தரும் வீராட் கோஹ்லி, ச 09;ரேஷ் ரெய்னா, அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி உதவலாம். பார்ம் இல்லாமல் தவிக்கும் ரோகித் சர்மா இடத்தை, மனோஜ் திவாரி எளிதாக தட்டிச் செல்லலாம். கடந்த யூலையில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது பாதியில் திருப்பி அனுப்பப்பட்ட ஹர்பஜன், ஒருவழியாக இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றார். இவருக்கு விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இன்று வாய்ப்பு கிடைப்பது சிரமமே. ஏனெனில் கடந்த 2 டெஸ்டில் 18 விக்கெட் வீழ்த்திய அஸ்வின், தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ī 5;ார். வேகப்பந்து பந்துவீச்சில் இலங்கைத் தொடரில் அசத்திய இர்பான் பதான், மூன்றரை ஆண்டுக்குப் பின்பு அணிக்கு திரும்பிய பாலாஜி, ஜாகீர் கான், டிண்டா நம்பிக்கையுடன் செயல் ;பட வேண்டும். தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இந்திய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் நியூசிலாந்து தோற்றது. கடைசியாக பங்கேற்ற மூன்று டி20 போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்த அணிக்கு இன்று, மெக்கலம், அதிரடி துவக்கம் தரலாம். பிராங்க்ளின், அணித்தலைவர் ராஸ் டெய்லர், கப்டில், வில ்லியம்சனும் அசத்த தயாராக உள்ளனர். டெஸ்ட் தொடரில் பங்கேற்காத வெட்டோரியுடன், வேகத்தில் மிரட்டிய டிம் சவுத்தி, பிரேஸ்வெல், சகலதுறை வீரர் ஜேக்கப் ஓரம் ஆகியோர் பந்துவீச்சில் திறமை வெளிப்படுத்தலாம் . மழையால் முதல் போட்டி ரத்தான நிலையில், இரு அணிகளும் வெற்றிக்கு போராடும் என்பதால், களத்தில் மோதல் காத்திருக்கிறது. |
தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவையும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும் இழிவுபடுத்தும ;் வகையில், கேவலமான கேலிச்சித்திரத்தை வெளியிட்ட சிறிலங்காவின் அரசசார்பு முன்னணி சிங்கள மற்றும் ஆங்கில வாரஇதழ்களுக்கு எதிராக அனைத்துலக அளவில் கண்டனங்கள் எழுநĮ 1;துள்ளன.
கடந்த ஞாயிறன்று வெளியான 'லக்பிம' சிங்கள வாரஇதழ் மற்றும் 'லக்பிம நியூஸ்' ஆங்கில வாரஇதழ் ஆகியவற்றில் இந்த கேலிச்சித்திரம் வரையப்பட்டிருந்தது.
ஹசந்த விஜேநாயக்க வரைந்த இந்தக் கேலிச்சித்திரத்தில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் மிகக் கேவலமான முறையில் சித்திரிக்கப் ;பட்டுள்ளனர்.
இந்த கேலிச்சித்திரத்தை வெளியிட்ட 'லக்பிம' வாரஇதழ்கள், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான தி ;லங்க சுமதிபாலவுக்குச் சொந்தமான சுமதி பப்ளிகேசன் நிறுவனத்தினால் வெளியிடப்படுபவையாகும்.
அத்துடன், சிறிலங்கா அதிபரின் ஊடக ஆலோசகரான பந்துல ஜயசேகரவின் ஆலோசனையின் பேரிலேயே இந்தக் கேலிச்சித்திரம் வரையப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரையப்பட்ட இந்தக் கேலிச்சித்திரத்தை உலகின் பல்வேறு பெண்கள் அமைப்புகளும் கண்டித்துள்ளன.
அதேவேளை ஊடகநெறிமுறைகளை மீறும் வகையில் இந்தக் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டுள்ளதாக ஊடக அமைப்புகளாலும் கண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 'லக்பிம நியூஸ்' இணையப் பதிப்பில் இருந்து இந்தக் கேலிச்சித்திரம் அகற்றப்பட்டுள்ளது.
அதேவேளை, லக்பிம நியூஸ் பதில் ஆசிரியர் ரங்க ஜெயசூரிய, இந்தக் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளார்.
இது ஓவியரின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை. இந்திய ஊடகங்கள் பலவும் சிறிலங்காவின் இந்த அத்துமீறலுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. |
கிழக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்க ஆதரவு தருவதாக ச&# 3007;றிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு ஆங்கல ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபரின் வசிப்பிடமான அலரி மாளிகையில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போதே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த முடிவை தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இதுபற்றி எந்த அதிகாரபூர்வ முடிவையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |