Monday, 24 October 2011
ஒரே பெண்ணுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவது அறுவறுப்பான ஜர்னலிசம் என்று நாகார்ஜுனா கூறினார். நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்று ஆந்திராவில் செய்திகள் வெளியாயின. அதற்கு முன் அனுஷ்காவை நாகர்ஜுனா காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அந்த செய்தியை வெளியிட்ட ஆங்கில பத்திரிகையின் நிருபரை, நாகார்ஜுனா அவதூறாகப் பேசினார் என்று கூறப்பட்டது. இதுபற்றி நாகார்ஜுனா கூறியிருப்பதாவது:
சினிமா துறையில் வெள்ளிவிழாவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். பல்வேறு நடிகைகளுடன் இணைத்து கிசு கிசு வருகிறது. முதலில் தபு, அனுஷ்கா, சார்மி, இப்போது பூனம் கவுர். பத்திரிகைகளில் இந்த செய்திகளைப் படித்துவிட்டு சிரிப்பதை தவிர வேறும் எதுவும் எனக்கு தெரியாது. ஆனால், இவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள். அனுஷ்கா நடிகை என்பதை தாண்டி என் குடும்பத்தில் ஒருவர். என்னை விட என் மனைவி அமலாவிடம்தான் அதிகம் பேசுவார். சார்மியுடன் 'மாஸ்' படத்தில் நடித்தேன். அவர் சிறந்த நடிகை. ஏதாவது விஷயங்களில் என்னிடம் கருத்துக் கேட்பார். இந்த இடத்தில் அபார்ட்மென்ட் வாங்க போகிறேன். என்ன நினைக்கிறீர்கள் என்றால், வாங்கு என்பேன். உடனே, நாகார்ஜுனா அபார்ட்மென்ட் வாங்கி கொடுத்தார் என்று எழுதிவிடுகிறார்கள்.
இதே போல பூனர் கவுருடன் 'பயணம்' படத்தில் நடித்தேன். படத்தில் இருவரும் சேர்ந்து வருவது போல ஒரு ஷாட் கூட கிடையாது. ஆனால் எப்படித்தான் அவருடன் இணைத்து பேசுகிறார்களோ தெரியவில்லை. இப்படி எழுதுவதற்காக, நான் என் நட்பை நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லையே. நான் இப்போதும் அவர்களுடன் நட்பாகத்தான் இருக்கிறேன். இதையெல்லாம் கூட என்னால் விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், அனுஷ்காவுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இது அறுவறுப்பான ஜர்னலிஷம். இதுதான் என்னை ரொம்ப அப்செட் பண்ணியது. அப்படியென்றால் இதுவரை நீங்கள் இதுபற்றி கருத்து சொல்லவில்லையே என்கிறார்கள். இதற்கெல்லாம் நான் ஏன் கருத்துச் சொல்லவேண்டும். அது என் தகுதிக்கு குறைவானது. இவ்வாறு நாகார்ஜுனா கூறினார்.