News Update :
Powered by Blogger.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ருசிகர சம்பவம்: மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் உயிரோடு வந்தார் soldier came alive thought to have died of heart attack

Penulis : Tamil on Wednesday, 18 September 2013 | 18:31

Wednesday, 18 September 2013

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ருசிகர சம்பவம்: மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் உயிரோடு வந்தார் soldier came alive thought to have died of heart attack
Tamil NewsYesterday, 05:30

சென்னை, செப்.19-

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணி ஒருவர் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். பஸ் நிலையத்திலேயே சுருண்டு விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் 108 ஆம்புலன்ஸ் வேனை வரவழைத்தனர்.

மாரடைப்பால் சுருண்டு விழுந்த வரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அந்த பயணி மரணம் அடைந்து விட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சவகிடங்கில் வைக்கப்பட்டது. கோயம்பேடு பஸ் நிலைய போலீசார், அவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார். மாரடைப்பில் பயணி சுருண்டு விழுந்த இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது என்று கூறி அந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அந்த செல்போன் மாரடைப்பில் இறந்த பயணியின் செல்போனாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர். அந்த செல்போனை வைத்து, இறந்தவரை அடையாளம் காண முயற்சி மேற்கொண்டனர். அந்த செல்போனில் கடைசியாக 3 எண்களில் தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்தது.

அந்த 3 எண்களிலும் போலீசார் தொடர்பு கொண்டு பேசியபோது 3 பெண்கள் போனை எடுத்து பேசினார்கள். அந்த செல்போனின் சொந்தகாரரின் பெயர் ஜெமினி, அவர் திருவண்ணாமலை மாவட்டம் சீலனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

போலீசாரிடம் பேசிய 3 பெண்களும் ஜெமினியின் மனைவிகள் என்றும் கண்டறியப்பட்டது. ஜெமினி முன்னாள் ராணுவவீரர் என்றும் அவர் சென்னைக்கு வந்தார் என்றும், அவருடைய 3 மனைவிகளும் தெரிவித்தனர்.

மாரடைப்பில் இறந்தது ஜெமினி தான் என்று முடிவு செய்த போலீசார், உங்கள் கணவர் இறந்துவிட்டார் என்று அவர்களிடம் தெரிவித்தார்கள்.

இதைத்தொடர்ந்து அந்த 3 பெண்களும் தங்களது கணவர் ஜெமினி இறந்துவிட்டார் என்று கூறி கதறி அழுதபடி திருவண்ணாமலையிலிருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

போலீஸ் நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை கேட்டு, நெஞ்சில் அடித்து போட்டி போட்டு அழுதார்கள். போலீசார் அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். பின்னர் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு சென்று கணவரின் உடலை பார்க்கலாம் என்று அந்த 3 பெண்களும் புறப்பட்டனர்.

அந்த நேரத்தில் தான் அந்த இன்ப அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இறந்ததாக கருதப்பட்ட ஜெமினி, போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தன்னுடைய செல்போன் தொலைந்துவிட்டதாகவும், அதை கண்டுபிடித்து தரும்படியாக மனுகொடுக்க வந்ததாக கூறினார். போலீஸ் நிலையத்தில் அவருடைய 3 மனைவிகளும் கண்ணீர் கோலத்தில் நிற்பதை பார்த்து அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

இறந்து போனதாக கருதிய தங்கள் கணவர் உயிரோடு வந்ததை பார்த்து 3 மனைவிகளும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த காட்சிகளை பார்த்த போலீசாருக்கோ, நடந்த சம்பவம் கனவா? நனவா? என்று புரியவில்லை. என்றாலும் ஜெமினி உயிரோடு வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது. ஜெமினி சந்தோஷமாக தன்னுடைய மனைவிகளோடு போலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

போலீசாருக்கு அடுத்த தலைவலி ஆரம்பமானது. பஸ் நிலையத்தில் மாரடைப்பில் இறந்தவர் யார்? என்று கண்டுபிடிக்கும் வேலையை தொடங்கிவிட்டனர்.
...
Show commentsOpen link

comments | | Read More...

சிறுமிகளை, அம்மனாக வழிபடும் புரட்டாசி திருவிழா sexy kovil thiruvizha

சிறுமிகளை, அம்மனாக வழிபடும் புரட்டாசி தி
by tnkesaven

New Tamil Jokes - Penmai.comToday, 1
மேலூர் அருகே, வெள்ளலூர் ஏழைகாத்தம்மன் கோவிலில், சிறுமிகளை, அம்மனாக வழிபடும் புரட்டாசி திருவிழா, நேற்று துவங்கியது.

மதுரை மாவட்டம், வெள்ளலூர், 60 கிராமங்களை உள்ளடக்கிய பகுதி. இதை ஐந்து மாகாணங்களாக பிரித்து, "வெள்ளலூர் நாடு என, அழைக்கின்றனர்.

இங்குள்ள ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழா, புரட்டாசிதோறும் கொண்டாடப்படும்.விழாவில் ஏழு சிறுமிகளை தேர்வு செய்து, அம்மனாக கருதி கொண்டாடுவர்.

நேற்று காலை, மூண்டவாசி, வேங்கபுலி உட்பட, 11 கரைகளை சேர்ந்த, 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் முன்னிலையில், அம்மனாக வழிப்பட கூடிய ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். 11 கரையை சேர்ந்த, 100 சிறுமிகள் இதற்காக கோவில் முன் பெற்றோருடன் கூடினர்.

அம்மனின் குழந்தைகளாக தேர்வு பெற்ற ஏழு சிறுமிகளும், 15 நாட்கள் இரவில் கோவிலில் தங்கி, பகலில், 60 கிராமத்தினருக்கும் ஆசிர்வாதம் வழங்குவர்.

இதை தொடர்ந்து, 15வது நாளில், பெண்கள், மது கலயம் மற்றும் சிலைகளை சுமந்தும், ஆண்கள், தங்கள் உடலில் வைக்கோல் பிரியை சுற்றியும், நேர்த்திக் கடன் செலுத்துவர்.விழா நடக்கும்,

15 நாட்களிலும், 60 கிராமங்கள் மற்றும் இங்கிருந்து வெளியூர், வெளிநாடு சென்றவர்கள் விரதம் இருப்பர்.

மாமிச உணவு, தாளித்த உணவு வகை சாப்பிடுவதில்லை.

விரத நாட்களில் இப்பகுதி ஓட்டல்களிலும் இவ்வகை உணவுகள் சமைப்பதில்லை.

பச்சை மரங்கள் வெட்டுதல், கட்டடம் கட்டுதல், மண்ணை தோண்டுதல் போன்ற பணிகளும் நடப்பதில்லை.

Show commentsOpen link

comments | | Read More...

வக்கீலை கைது செய்ய முயன்ற சப்–இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு try to high court campus lawyer arrest sub inspector seal in jail

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீலை கைது செய்ய முயன்ற சப்–இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு try to high court campus lawyer arrest sub inspector seal in jail
Tamil NewsToday,

சென்னை, செப். 18–

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் வசித்து வரும் நரம்பியல் டாக்டர் சுப்பையா என்பவருக்கும், பொன்சாமி என்ற ஆசிரியருக்கும் இடையே குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 14–ந்தேதி ராஜா அண்ணாமலை புரத்தில் தனது ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டிருந்த டாக்டர் சுப்பையா இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கப்பட்டார்.

இது தொடர்பாக ஆசிரியர் பொன்சாமி, அவரது தாயார் அன்னப்பழம், மனைவி மேரி புஷ்பா, மகன் வக்கீல் பெய்சில், உறவினரான வக்கீல் வில்லியம் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இவர்களை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையில் செம்மஞ்சேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் இடம் பெற்றுள்ளார். இவர் நேற்று மாலை வக்கீல் பெய்சிலை கைது செய்வதற்காக ஐகோர்ட்டுக்கு காரில் சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த பெய்சிலை கைது செய்து காரில் ஏற்றுவதற்கு அவர் முயன்றார். இதற்கு வக்கீல் பெய்சில் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மற்ற வக்கீல்களும் திரண்டனர்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளால் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் தாக்கப்பட்டார். அவரது சட்டை கிழிந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் இணை கமிஷனர் ஸ்ரீதர், துணை கமிஷனர் நிர்மல் குமார், உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர்கள் செல்லப்பா, ராஜேஷ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

ஏராளமான போலீசாரும் ஐகோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டனர். சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணனை சுற்றி போலீசார் நின்று கொண்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த வக்கீல்கள், சப்–இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இதனால் பதட்டமான சூழல் நிலவியது.

பின்னர் இச்சம்பவம் பற்றி ஐகோர்ட்டு நீதிபதிகள் சுதாகர், சத்தியநாராயணன், கிருபாகரன், அரிபரந்தாமன், ராமநாதன், ரவிசந்திர பாபு ஆகியோர் தங்களது சேம்பரில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், ஐகோர்ட்டு பதிவாளரிடம் ஒரு புகார் செய்தார். அதில் கோர்ட்டு வளாகத்தில் புகுந்து அத்துமீறி நடந்து கொண்ட சப்–இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். அதே நேரத்தில் வக்கீல் பெய்சிலும், ஐகோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் வெளியாட்களுடன் வந்து சப்–இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தன்னை காரில் கடத்திச் செல்ல முயன்றதாக குறிப்பிட்டிருந்தார்.

இதன் பேரில், கடத்தல் முயற்சி, மிரட்டல் விடுத்தல், அத்துமீறி நுழைதல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் சங்கரநாராயணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை 8 மணி அளவில் சைதாப்பேட்டையில் உள்ள ஜார்ஜ் டவுன் 8–வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு வீட்டில் சங்கரநாராயணனை போலீசார் ஆஜர்படுத்தினர். அடுத்த மாதம் 1–ந்தேதி வரை அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து சங்கர நாராயணன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணனின் சொந்த ஊர் தூத்துக்குடி. இவர் கடந்த 2011–ம் ஆண்டு நேரடியாக சப்–இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

...
Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger