News Update :
Powered by Blogger.

புத்தூர் ஆபரேசன்: படுகாயம் அடைந்த ஆய்வாளர் லட்சுமணனுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆறுதல் CM Jayalalithaa Consoling injured inspector in hospital

Penulis : Tamil on Wednesday 9 October 2013 | 17:13

Wednesday 9 October 2013

புத்தூர் ஆபரேசன்: படுகாயம் அடைந்த ஆய்வாளர் லட்சுமணனுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆறுதல் CM Jayalalithaa Consoling injured inspector in hospital

Tamil NewsToday,

சென்னை, அக். 9-

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்தனர். அவர்களை கைது செய்ய தனிப்படையினர் புத்தூர் விரைந்து 5.10.2013 அன்று மேற்படி தலைமறைவு எதிரிகள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். காவல் துறையினரின் தீவிர முயற்சியின் பலனாக எதிரிகள் பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் லட்சுமணன் எதிரிகளால் கொடூரமான ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் லட்சுமணனின் துணிச்சலைப் பாராட்டி தமிழக அரசின் சார்பாக ரொக்கப் பரிசாக 15 லட்சம் ரூபாயும், அவருடைய மருத்துவச் செலவு அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்வதோடு, ஒரு படி பதவி உயர்வும் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா 8.10.2013 அன்று அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் லட்சுமணனை இன்று முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், ஆய்வாளர் லட்சுமணனின் வீரதீரச் செயலைப் பாராட்டி, தமிழக மக்களின் நன்றியை தெரிவிக்கும் வகையில், 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்து அதற்கான காசோலையினை அவரது மனைவி மதுபென் அவர்களிடம் வழங்கினார்.

மருத்துவமனையில் லட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்ததோடு இயல்பு நிலைக்கு விரைந்து திரும்பிடத் தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

...
Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger