News Update :
Powered by Blogger.

செல்வராகவன் இயக்கும் ''பொன்னியின் செல்வன்''?

Penulis : karthik on Wednesday, 25 July 2012 | 23:59

Wednesday, 25 July 2012





இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு, தமிழில் முன்னணி நடிகர்களான விக்ரம், ஆர்யா மற்றும் ஜீவா போன்றோரை ஒரே படத்தில் இணைந்து நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார் ச� ��ல்வராகவன். தனது அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பை ரகசியமாக வைத்துக் கொள்வது தான் செல்வராகவனின் வழக்கம்.

ஆனால் முதல் முறையாக தனது அடுத்தபடம் பற்றி ட்வீட் செய்திருக்கிறார் செல்வராகவன். மிகவும் பிரபலமான நாவலான பொன்னியின் செல்வனை தான் படமாக்க ஆசைப்படுவதாக செல்வராகவன் கூறியுள்ளார். அதில் 'இராஜ இராஜ சோழனாக' விக்ரமும், 'ஆதித்த கரிகாலனாக' � �ர்யாவும், 'வல்லவரையன் வந்திய தேவனாக' ஜீவாவும் நடித்தால் நன்றாக இருக்கும் என செல்வராகவன் கூறியுள்ளாராம். அதே போல் குந்தவையாக காஜல் அகர்வாலும், நந்தினியாக நயன்தாராவும் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என செல்வராகவன் கூறியுள்ளாராம். செல்வராகவனின் இந்த கற்பனை நிஜமாக்குவாரா என்பதை பொருத்திருந்த� ��ன் பார்க்க வேண்டும்.







comments | | Read More...

பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி பலி: பொதுமக்கள் பேருந்துக்கு தீவைப்பு





சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஜியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி. இன்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி பேருந்தில் தாம்பரம் பரசுராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றாள். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் பெரிய ஓட்டை இருந்துள்ளது. அதில் பலகை வைத்து தற்காலிகமாக அடைத்து வைத்திருந்தனர்.
 
இந்நிலையில் முடிச்சூர் சாலையில் வந்தபோது பஸ ் லேசாக குலுங்கியது. அப்போது ஓட்டை மீதிருந்த பலகை விலக, சிறுமி சுருதி அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து இறந்தார். இதைப் பார்த்த மற்ற மாணவிகள் கூச்சலிட்டனர்.  சிறுமி கீழே விழுந்து இறந்ததையறிந்த டிரைவர் சிறிது தூரம் பேருந்தை ஓட்டிச் சென்று சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
 
பேருந்தில் இருந்த மற்ற மாணவிகள் கீழே இறங்க தொடர்ந்து கூச்சலிட, அங்கு ஏராளமானோர் திரண்டனர். விபத்தில் மாணவி இறந்ததை அறிந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை அடித்து நொறுக்கினர். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர்கள் பஸ்சுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.







comments | | Read More...

ஒபாமா அரசில் மேலும் ஒரு அமெரிக்க இந்தியர் நியமனம்





அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது தலைமையிலான அரசில் புதிய நிர்வாக அதிகாரிகளை நியமித்துள்ளார். அதில் ஒருவர் அமெரிக்க இந்தியரான ராணி ராமசாமி. இவருக்கு கலைகளுக்கான தேசிய கவுன்சிலில் முக்கிய உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஒபாமா கூறும்போ� ��ு: 
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் நிறைவேற்றும் திறன் கொண்ட தனிநபர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள துறையில் சிறப்பாக செயலாற்றுவர் என்று எதிர்ப்பார்க்கிறேன். வரும் நாட்களில் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என கூறினார். 

தேர்ந்தெடுக்கப்பட்ட ராண ி ராமசாமி ராகமாலா நடன அமைப்பினை நிறுவி நடத்தி வருகிறார். பரதநாட்டிய கலைஞரான இவர் நடனம் கற்றுக் கொடுப்பதோடு நடன இயக்குநராகவும் இருக்கிறார். 

அமெரிக்காவின் பல்வேறு அமைப்புகளினால் இவரது கலை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர் அமெரிக்க நடன விழா, மும்பையில் உள்ள தேசிய நடன மையம் ஆகியவற்றில் பங்கேற்று தனது முத்திரையை பதித்துள� �ளார். 

மேலும் 2011-ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர் என்கிற விருதையும் பெற்ற பெருமைக்குரிய இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.










comments | | Read More...

விவாகரத்தான, அழகான, எதற்கும் தயாராக உள்ள ஆண் வேண்டும் - சோனாவின் அறிவிப்பு





மேரேஜா.. சீச்சீ... எனக்கு ஆண்களைப் பிடிக்கவே பிடிக்காது. ஆண்களோடு வாழவே முடியாது, என்றெல்லாம் தத்துவம் பொழிந்து வந்த சோனா, இப்போது திருமணம் செய்ய ஆசையாக இருப்பதாகக் கூறிவருகிறார்.


சோனா 'கோ', 'குரு என் ஆளு', 'பத்து பத்து', 'குசேலசன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 'கனிமொழி' படத்தை தயாரிக்கவும் செய்தார்.
தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டு உள்ளார்.

ஆரம்பத்தில் ஆண்களைப் பிடிக்காது என்று கூறிவந்தாலும், ஆண்களுடன் எல்லா பார்ட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு கலாட்டா செய்து வந்தார்.

இப்போது, தனது டுவிட்டரில், "விவாகரத்தான, அழகான, புத்திசாலியான ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. என்னை நன்றாக புரிந்து கொள்பவராகவும், எதையும் ஸ்போர்டிவாக எடுத்துக் கொள்பவரா� ��வும் அவர் இருக்க வேண்டும்.. சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகப் போகிறேன், " என தெரிவித்துள்ளார்.

சோனா தயார்.... யாராவது இருக்கீங்களா?







comments | | Read More...

அமெரிக்காவில் வசிக்கும் 4 இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி விருது





அமெரிக்கா அரசாங்கம் அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளை ஆண்டு தோறும் தேர்வு செய்து ஜனாதிபதி விருது வழங்கி கவுரவிக்கிறத ு. அதன்படி இந்த ஆண்டு விருது பெறும் 96 விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் பட்டியலை நேற்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார்.
 
இந்த விருது பெறுவோர் பட்டியலில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான ஸ்ரீதேவி வ� ��துலசர்மா, பவான் சின்கா, பராக் ஏ.பதக், பிஜு பாரிக்கதான் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். ஸ்ரீதேவி விதுலசர்மா, பவான் சின்கா ஆகியோர் துணை பேராசிரியராக இருக்கிறார்கள். பராக் ஏ.பதக் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டிலும், பிஜு பாரிக்கதான் ஹார்வார்டு மருத்துவ கல்லூரியிலும் முக்கிய பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள்.







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger