நுழைவுத் தேர்வில் உங்களுக்கு ஒரு கேள்வியும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, எதற்கும் பதிலளிக்காமல் முட்டையே வாங்கினாலும் கூட பரவாயில்லை, அட, கேள்வித்தாளை வாங்கி அதை அப்படியே பெயரை மட்டும் எழுதித் திருப்பிக� �� கொடுத்தாலும் கூட பரவாயில்லை, உங்களுக்கு கண்டிப்பாக பிஇ சீட் உண்டு. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா.. ஆனால் ஆந்திராவில் இது நிஜமான ஒன்று.
ஆந்திர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் இப்படி முட்டை மார்க் வாங்குவோருக்கும் கூட சீட் கொடுக்கிறார்களாம்.
இந்த ஆண்டு நடந்த நுழைவுத் தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 78 பேர் கலந்து கொண்டு எழுதினர். இவர்களில் 22 பேர் ஒரு கேள்விக்குக் கூட பதிலளிக்கவில்லை. அனைத்துமே தவறான பதில்கள்தான். இதனால் அவர்களுக்கு ஒரு மார்க் கூட கிடைக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், அடிப்படைத் தகுதியான பிளஸ்டூவில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண் களை இவர்கள் பெற்றுள்ளதே. அதில் இவர்கள் தேவையான மதிப்பெண்களை வைத்திருப்பதால் நுழைவுத் தேர்வில் ஒரு மார்க் கூட வாங்காவிட்டாலும் பரவாயில்லை, சீட் கிடைக்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 22 பேரில் 9 பேருக்கு பொறியியல் படிப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 13 பேருக்கு கால்நடை மருத்துவப் படிப்பு கிடைத்துள்ளது.
நுழைவுத் தேர்வில் முட்டை மார்க் வாங்கும் தலித், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களால் எம்.பி.பி.எஸ் படிப்பில் மட்டுமே சேர முடியாது. மற்றபடி பொறியியல், விவசாயம், பல் மருத்துவம், கால்நடை, தோட்டக்கலைத்துறை ஆகிய படிப்புகளில் சேர வாய்ப்பளிக்கப்படும்.
ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்ழகம்தான் ஆண்டு தோறும், பொறியியல், மருத்துவ, விவசாயப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான ரிசல்ட் கடந்த வாரம் வெளியானது.
மொத்தம் தேர்வு எழுதிய 90,917 பேரில் 83,686 பேர் தேர்வாகியுள்ளனர்.
நாட்டிலேயே அதிக அளவிலான பொறியியல் கல்லூரிகள் உள்ளது ஆந்திராவில்தான். அங்கு 671கல்லூரிகள் குவிந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அங்கு மாணவர் சீட� �களை விட கல்லூரிகள் குண்டக்க மண்டக்க இருப்பதால் ஆண்டுதோறும் பல்லாயிரம் சீட்கள் காலியாகவே கிடக்கின்றன. இந்த ஆண்டு 1 லட்சம் சீட்கள் வரை காலியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நுழைவுத் தேர்வில் மார்க்கே வாங்காமல் சீட் தருவது குறித்து மாநில ஆளுநர் நரசிம்மன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நுழைவு த் தேர்வில் ஒரு மார்க் கூட பெறாதவருக்கு தொழில்கல்வியில் இடம் தருவது என்பது ஏற்க முடியாத ஒன்றாகும். இதை சரி செய்ய வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் என்று ஏதாவது இருக்க வேண்டும். நுழைவுத் தேர்விலேயே முட்டை மதிப்பெண் பெறும் ஒரு மாணவரால் எப்படி பொறியியல் படிப்பு போன்றவற்றை முடிக்க முடியும் என்று தெரியவில்லை. மேலும் அவர்களை அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் எப்படி நடத்� ��ுவார்கள். இது மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு மன உளைச்சலையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்த வழி வகுத்து விடும் என்றார்.
கடந்த ஆண்டும் இப்படித்தான் 26 பேர் மார்க் ஏதும் வாங்காமலேயே அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேருக்கு பொறியியல் படிப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.