விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பு: தீர்ப்பாயம் முன்பு வைகோ ஆஜர் விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பு: தீர்ப்பாயம் முன்பு வைகோ ஆஜர்
சென்னை, செப். 28-
இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படுவதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.
ஆனாலும், விடுலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து வைகோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் தீர்ப்பாயம் சென்னையில் கூடுவதாகவும், ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் அதில் நேரில் ஆஜராகி தங்கள் ஆட்சேபங்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் தீர்ப்பாய கூட்டம் சென்னை எம்.ஆர்.பி.நகரில் இமேஜ் அரங்கத்தில் இன்று தொடங்கியது. இன்று காலை வைகோ நேரில் ஆஜர் ஆனார்.
Post a Comment