News Update :
Powered by Blogger.

மங்களூருவில் கன மழை

Penulis : karthik on Monday, 27 August 2012 | 09:24

Monday, 27 August 2012

மங்களூருவில் கன மழை

கருநாடக மாநிலம் மங்களூருவில் கன மழை பொழிந்து வருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

comments | | Read More...

கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி

கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பாரதீய � �னதாவில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சி தொடங்கிய குஜராத் முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் பட்டேலும் நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். இவற்றுக்கு பதிலடி கொடுக்க நரேந்திர மோடி திட்ட மிட்டுள்ளார். மீடியாக்கள் மூலம் பதிலடி கொடுத்து சண்டை போட விரும்பாத நரேந்திர மோடி இணைய தளம் தொடங்கி அதன் மூலம் எதிர்க்கட்சிகள் பிரசாரத்தை முறியடிக்க முடிவு செய ்துள்ளார். 

இந்த இணைய தளத்துக்கு "நமோ பாரத்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பாளர்களாக நரேந்திரமோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமான மனிஷ் பர்தியா, பரிந்து பகத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த இணைய தளத்தில் நரேந்திர மோடி அரசின் சாதனைகளும் இடம் பெற்று இருக்கும். மனிஷ் பர்தியா ஏற்கனவே நரேந்திர மோடியின் பேச்சுக்கள், சாதனைகள் அடங்கிய ஏராளமான சி.டி.க்கள் தயாரித்து வைத்துள்ளார். இவையும் புதிய இணைய தளத்துக்கு பயன்படுத்தப்படும். அவ்வப் போது கிளப்பி விடப்படும் புகார்கள் குற்றச்சாட்டுகளுக்கு நரே� �்திர மோடியின் பதில் நேரடியாக இடம் பெறும். இந்த இணைய தளம் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் வீடுகளுக்கும் கேபிளில் ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.



comments | | Read More...

நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி

நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி

நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக்கூட்டம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக்குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார ்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் திடீரென சுஜிபாலா அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு விருப்பம் இல்லாதநிலையில்தான் சுஜிபாலா தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது உடல்நிலை தேறியுள்ள சுஜிபாலா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger