அஜித் நடித்துக்கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் ஹீரோயின் உலக அழகியான பார்வதி ஓமனக்குட்டன் இந்த படம் அவருக்கு தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை அளிக்கும் என நம்புகிறார். பார்வதி ஓமனக்குட்டன் அளித்துள்ள பேட்டியில்
அறிமுகமே அஜித்துடன் இந்த வாய்ப்பு கிடைத்தது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
மிகப்பெரிய பாக்யம் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்டுடன் அதுவும் மாஸ் ஹீரோவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததுக்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் எனது முதல் படமே திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன்
அஜித் பற்றிய உங்கள் கருத்து?
மிகவும் எளிமையானவர் அஜித். லொக்கேஷனில் ஆர்ட்டிஸ்ட், டெக்னிஷியன், முதல் கொண்ட� �� ப்ரொடக்ஷன் பாய் வரை எல்லோரிடமும் சகஜமாக பழகுவார். கேமரா முன் நாம் ஏதாவது தவறாக செய்தால் பக்குவமாக எப்படி நடிக்க வேண்டும் என்று அறிவுரை கொடுப்பார். அவரோடு ஜோடி சேரும் முன்பு நான் அவர் மனைவியின் தீவிர ரசிகை. இதை நான் சொன்ன போது அவரும்
அப்போது ஷாலி� �ியின் ரசிகராக இருந்தார் என்று தெரியவந்தது. ரசிகராக இருந்து வாழ்க்கைத் துணையாக மாறியதில் அவருக்கு நான் வாழ்த்து சொன்னேன்.
'பில்லா-2' படத்தின் கதை என்ன? உங்கள் கதாபாத்திரம் என்ன?
கதை பற்றி சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். கதையை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அஜித்துக்கு ஜோடியாக படத்தின் கதையை திசைதிருப்பும் கதாபாத்திரத்தில் தான் ஜேஸ்மின் நடிக்கிறார். பில்லா-2, ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மேல் இருக்கும் என்பது மட்டும் உறுதியாக சொல்லுகிறேன்.
ஒரு நடிகையை நிலைநாட்டுவது கவர்ச்சி தான். நீங்கள் கவர்ச்சிக்கு ஏதாவது எல்லை வகுத்துள்ளீர்களா?
பார்வதி ஓமனக்குட்டன் உலக அழகி என்பதால் தாராளமாக கவர்ச்சி காட்டுவார் என்ற எதிர்பார்ப்புடன் என்னை அணுகாதீர்கள். கதாபாத்திரத்திற்கு தேவையான அளவு கவர்ச்சியை கொடுப்பேன். நடிப்பதற்கு வந்த பிறகு இதிலிருந்து பின்வாங்கமாட்டேன். அப்படி செய்வது நடிகைக்கு அழகல்ல.
சினிமாவில் சாதிக்க நினைப்பது?
மிகச் சிறந்த நடிகை என்ற பெயரை வாங்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். எவ்வளவு கடினமான கதாபாத்திரம் என்றாலும் பார்வதி ஓமனக்குட்டன் வெலுத்துகட்டுவார் என்று எல்லோரும் பெருமிதப்பட வேண்டும். நான் சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கை எனக்கு உண்டு. சிறந்த நடிகையாவதற்கா� �� அயறாது உழைக்கவும் தயாராக உள்ளேன்" என்று கூறினார்.