Monday, 17 September 2012
உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம் உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
திண்டுக்கல், செப். 18-
உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டருக்கு ரூ. 3 லட்சம் அபராதமும், விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த திருட்டுக்கும்பலை பிடிக்க போலீசார் முயன்றபோது, துப்பாக்கியை காட்டி அக்கும்பல் தப்பியது. இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் சப்-கோர்ட்டு, வழக்கில் ஆஜராகாத தேனà �¿ மேலக்கூடலூரை சேர்ந்த கருப்பையா மகன் முருகன் என்பவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து அவரை பிடிக்க திண்டுக்கல் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட முருகனுக்கு பதிலாக வேறொரு வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை முருகன் எனக் கூறி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அவருக்கு தண்டனையும் வி�® �ிக்கப்பட்டது. சிறையிலிருந்த போலி நபர், கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவில் தனது பெயர் கம்பம் சத்யா, தனக்கும், துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வேறு ஒரு வழக்கில் கைதான என்னை போலீசார், குற்றவாளியாக சேர்த்து, தண்டனை வாங்கி தந்துள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி வெங்கிடுசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை à ��ிசாரித்த நீதிபதி உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு, ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தார். இத்தொகையை பாதிக்கப்பட்டவருக்கு கலெக்டர் வழங்கவேண்டும் என்றும், மேலும் தவறு செய்த சப்-இன்ஸ்பெக்டர் முருகனிடமிருந்து அபராத தொகையை வசூலிக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தற்போது ரெயில்வே இன்ஸ் பெக்டராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து உண்மை குற்றவாளிக்கு பதிலாக போலி நபரை ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டர் முருகன் மீது, போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.