News Update :
Home » » கோவையில் 3 பெண்களிடம் நகை பறிப்பு: சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில வாலிபர் 2 பேர் சிக்கினர்

கோவையில் 3 பெண்களிடம் நகை பறிப்பு: சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில வாலிபர் 2 பேர் சிக்கினர்

Penulis : karthik on Friday, 28 September 2012 | 07:56


கோவையில் 3 பெண்களிடம் நகை பறிப்பு: சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில வாலிபர் 2 பேர் சிக்கினர் கோவையில் 3 பெண்களிடம் நகை பறிப்பு: சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில வாலிபர் 2 பேர் சிக்கினர்

கோவை, செப். 28-
 கோவை மாநகரம் முழுவதையும் நேற்று ஒரு சிவப்பு நிற மோட்டார் சைக்கிள் பரபரப்பாக்கியது. காரணம் அந்த சிறப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் பீளமேடு பகுதியில் 3 பெண்களிடம் 18 பவுன் நகை பறித்து சென்றனர். மர்ம மனிதர்கள் சிவப்பு நிற டீசர்ட் அணிந்திருந்ததாகவும் காதில் கடுக்கன் அணிந்திருந்ததாகவும் நீளமான தலைமுடி வைத்திருந்ததாகவும் நகையை பà ��ிகொடுத்த பெண்கள் கூறினார்கள். இதைத் தொடர்ந்து மாநகரம் முழுவதும் போலீசாரை கமிஷனர் விஸ்வநாதன் உஷார்படுத்தினார். அதன்படி துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில் போலீசார் நகை பறித்து சென்ற மர்ம மனிதர்கள் 2 பேரையும் பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த அனைவரையும் தடுத்து நிறுத்தி அதிரடி விசாரணை நடத்தினார்கள். ஆனால் நேற்று �® �ரவு வரை கொள்ளையர்கள் போலீஸ் பிடியில் சிக்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் 2 பேர் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த மர்ம மனிதர்கள் நிற்காமல் சைக்கிளில் தப்பினர். இதைத் தொடர்ந்து சுற்று வட்டார பகுதியில் நின்ற போலீசார் அனைவரும் உஷார்படுத்தப்பட்டனர். இந்த நேரத்தில் மோ�® �்டார் சைக்கிளில் தப்பிய 2 மர்ம மனிதர்களும் சிங்காநல்லூருக்கு வந்தனர். அங்கு நின்ற போலீசார் அவர்களை மறித்தனர். அப்போதும் அந்த நபர்கள் நிற்காமல் தப்பிச்செல்ல முயன்றனர். அங்கு நின்ற போலீஸ் ஏட்டு அந்த 2 நபர்களையும் பிடிக்க முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளோடு 2 மர்ம மனிதர்களும் தடுமாறி கீழே விழுந்தனர். அதன் பின்னரும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினர். அவ ர்களை துரத்திச்சென்று போலீசார் பிடித்தனர். அவர்கள் 2 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சச்சின்குமார் (20), ஜெயராம் (24) என்பது தெரிய வந்தது. இவர்களில் ஒருவன் காதில் கடுக்கன் அணிந்திருந்தான். எனவே பெண்களிடம் நகை பறித்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது 2 பேரும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள லாட்ஜ ில் தங்கி இருப்பதும், நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரியவந்தது. வடமாநிலத்தில் இருண்டு இரண்டிரண்டு பேராக இங்கு வந்து நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஒவ்வொரு நேரமும் வேறு வேறு நபர்கள் இங்கு வந்து மோட்டார் சைக்கிளில் சென்று கைவரிசை காட்டி விட்டு மோட்டார் சைக்கிளை ஏதாவது ஒரு ஸ்டேன்டில் நிறுத்தி விட்டு சொந்த ஊருக்கு செல்வதை வழக்க மாக வைத்துள்ளனர். ஆனால் இந்த முறை 2 பேர் போலீசில் சிக்கிக்கொண்டனர். அவர்களிடம் நேற்று பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது நகை பறித்தை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும், அதில் ஒரு நகை கவரிங் என்பதால் அந்த நகையை தூக்கி எரிந்துவிட்டோம் என்றும் அவர்கள் கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் கூறியது உண்மை தானா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை ந�® �ந்து வருகிறது.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger