News Update :
Powered by Blogger.

பில்லா 2ல் நயனா?? நயன்தாரா தரப்பு மறுப்பு

Penulis : karthik on Tuesday 28 February 2012 | 21:39

Tuesday 28 February 2012



அது என்னவோ தெ‌ரியவில்லை நயன்தாரா என்றாலே நோ, நாட் பாஸிபிள், அப்படி ஒண்ணும் இல்லையே, பிறகு பார்ப்போம், பிளாஸ்டிக் சர்ஜ‌ரி என்று நெகடிவாகவே வருகிறது. ஸாரி… இதுவும் அப்படியொரு எதிர்மறை செய்திதான்.
பில்லா படம் எல்லா வகையிலும் நயன்தாராவுக்கு திருப்புமுனை தந்த படம். அந்தப் படத்திற்குப் பிறகுதான் அகராதியில் கிளாமர் என்பதை நயன்தாரா என்று மாற்றி எழுதினார்கள். டூ பீஸ் என்பதும் நயன் அதனை போட்டு வந்த பிறகே பிரபலமானது (ஹி..ஹி… கொஞ்சம் ஓவர்தான்).

பில்லா 2 படத்தை இப்போது எடுத்து வருகிறார்கள். நயன்தாராவும் இதில் ஒரு சின்ன வேடத்தில் தோன்றுகிறார் என யாரோ புண்ணியவான் கொளுத்திப் போட்டிருக்கிறார். அ‌‌ஜீத் படம், நயன்தாரா நடிக்கிறார்… மொட்டை வெயிலில் பாஸ்பரஸாக பற்றிக் கொண்டது விஷயம்.

ஆனால் நயன்தாராவின் ராசிப்படி இந்த செய்தியை நயன்தாரா தரப்பு மறுத்திருக்கிறது. பில்லா 2-வில் நடிக்க நயன்தாராவை கேட்கவேயில்லையாம்.

பந்தி கடைசியில் பாயாசம் மாதி‌ரி ஒரு பாஸிடிவ் செய்தி. தமிழ், தெலுங்கு மொழிகளில் தலா ஒரு படம் விரைவில் நடிக்கவுள்ளார் நயன்தாரா.
comments | | Read More...

சினேகா பூமிகா இணைந்து மிரட்ட இருக்கும் “யார்”



தமிழ் சினிமாவுக்கு இப்போது த்ரில்லர் காலம் போலும். காஞ்சனா, அம்புலி போன்ற படங்களை தொடர்ந்து அடுத்து மிரட்ட வரும் த்ரில்லர் படம் யார். கடந்த 2010ம் ஆண்டு தெலுங்கில், ரவி இயக்கத்தில், பூமிகா, சினேகா நடிப்பில் வெளிவந்த படம் அமரவாதி. த்ரில்லர் படமான, இந்தப்படம் இப்போது டப்பிங் செய்யப்பட்டு, தமிழ் சினிமாவிற்கு ஏற்றபடி சில மாற்றங்கள் செய்து 10நாட்கள் ரீ-சூட்டிங் நடத்தி விரைவில் வெளியிட உள்ளனர். தமிழில் இப்படத்தை வெளியிடப்போகும் தயாரிப்பாளர் சதீஷ் கூறுகையில், யார் படம் வெளிவந்த பிறகு, தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய டிரெண்ட் செட்டாகும்
comments | | Read More...

தமிழ் மக்களின் பேராதரவுடன் தொடரும் நீதிக்கான நடை பயணம்!

 

புலத்தில் வாழும் தமிழ் உறவுகளின் பேராதரவுடன் ஜெனீவாவை நோக்கி இன்று 24ஆவது நாளாகவும் நீதிக்கான நடை பயணம் நகர்கின்றது.இன்று Neuchetel மாநிலம் வரை 32 கிலோமீற்றர் தூரம் நடை பயணம் தொடர்ந்தது. இவர்களது வருகையை சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் எழுச்சியுடன் எதிர்பார்த்து வரவேற்கின்றனர்.

இன்று சுவிஸ் நாட்டின் பிரதான தொலைக்காட்சிகளில் ஒன்றான Canalalpha இவர்களை சந்தித்து நடை பயணத்திற்கான காரணத்தை கேட்டறிந்ததுடன் இவர்கள் கைகளில் ஏந்தி வந்த தேசியக்கொடி பற்றி அதனுடைய தார்ப்பரியம் பற்றியும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

இதுபற்றி நடை பயணத்தை தொடர்கின்ற பரமேஸ்வரன் அதற்கான விளக்கத்தினை தெளிவாக எடுத்துக் கூறும் போது, பிரித்தானிய நாட்டில் இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போது இது தமிழ் மக்களை ஒருங்கிணைங்கின்ற தமிழ் தேசிய இனத்தின் அடையாளக்கொடி என்றும் வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தலாம் என்பதை சுட்டிக்காட்டினார்.

ஒரு கொலை செய்தவனுக்கு சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனை என்றால் ஆயிரம் ஆயிரமாய் தமிழர்களை கொன்றொழித்து தமிழர் தாயகத்தை சுடுகாடாக்கிய சிங்கள அரசுக்கு சர்வதேசமே நீ என்ன தண்டனை வழங்கப்போகின்றாய்.

மார்ச் 5ம் திகதி ஐ.நா முன்றலில் உலகத் தமிழினமே குழுமி நின்று கேள்வியெழுப்புவோம் திரண்டுவாருங்கள்.

comments | | Read More...

மாணவி, ராணுவ வீரரின் மனைவி என 3 நாளில் 5 பேர் கற்பழிப்பு

 

2 மைனர் பெண்கள் உள்பட 5 பெண்கள், கடந்த 3 நாட்களில், டில்லியில் கற்பழிக்கப்பட்ட சம்பவம், அங்கு பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, டில்லி போலீசார் தெரிவித்துள்ளதாவது, டில்லியில் கடந்த 3 நாட்களில் மட்டும் 2 மைனர் பெண்கள் (அதில் ஒருவர் 1ம் வகுப்பு படித்து வரும் சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது), கல்லூரி மாணவி, மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மற்றும் ராணுவ வீரரின் மனைவி உள்ளிட்ட 5 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்வங்கள் தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடி வருவதாகவும், இதுகுறித்த விசாரணையை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய மகிளிர் ஆணைய கருத்தரங்கில் பேசிய அந்த ஆணையத்தின் தலைவி மமதா சர்மா, ஒரு பெண்ணை செக்ஸியாக இருக்கிறார் என்று மற்றவர்கள் வர்ணிப்பது தவறு இல்லை. அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.சில இளைஞர்கள் பெண்களை பார்த்து செக்ஸியாக இருக்கிறாய் என்று சொல்கின்றனர். இதில் எதுவும் தவறு இல்லையே, இதனை நாம் எதிர்மறையாக எடுத்து கொள்ள கூடாது. அழகானது, கவர்ச்சியானது என்றுதானே அர்த்தம், ஆனால் நாம் இதனை நாம் எதிர்மறையாக எடுத்து கொண்டால் தேவையற்ற பிரச்னைகள் வரும். பாசிட்டிவாக எடுத்து கொண்டால் இதனை தவிர்ப்பது முடியும். செக்ஸி என்பது கொச்சையான வார்த்தை அல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய மகளிர் ஆணைய தலைவர் மம்தா சர்மா, அதே இவ்வாறு கூறியுள்ள நிலையில், அங்கு நிகழ்ந்துள்ள கற்பழிப்பு சம்பவங்கள் அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

comments | | Read More...

பிரபுசாலமனின் அடுத்த படத்தில் ஆர்யா

 


`மைனா' படம் மூலம் பிரபலமான பிரபு சாலமன் தற்போது `கும்கி' படத்தை இயக்கி வருகிறார். இது முடிந்ததும் ஆர்யாவை வைத்து படம் எடுக்கிறார். இது ஆக்ஷன் கதையாம். இதர நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
comments | | Read More...

தமிழிற்கு வரும் ஒஸ்கார் நாயகி

 


ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் உள்ள கோலிவுட்டில் நடிப்பதில் பெருமையாக உள்ளது என்று ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த தன்வி கணேஷ் லோன்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்டூடண்ட் ஸ்டூடியோ காம் தயாரிக்கும் காதல் தீவு படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் சிறுவயது நாயகியாக நடித்த தன்வி லோன்கர் இதில் நாயகியாக நடிக்கிறார். அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக வந்த ராம்சரண் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை அரும்பு மீசை குறும்பு பார்வை படத்தின் இயக்குனர் வெற்றி வீரன் இயக்குகிறார்.

இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி விருகம்பாக்கத்தில் உள்ள நேஷனல் தியேட்டரில் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட தன்வி லோன்கருக்கு நடிகர்கள் சத்யராஜ், பிரசன்னா, நடிகை தன்ஷிகா ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினர்.

பின்னர் தன்வி லோன்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நான் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவள். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். அந்த படத்தின் நாயகி ப்ரீடா பின்டோ ஆஸ்கர் விருது விழாவுக்கு என்னை அழைத்துச் சென்றார். அப்போது உலகின் பெரிய நடிகர்-நடிகைகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தை அடுத்து டீன் ஏஜ் என்ற கன்னட படத்தில் நடித்தேன். அந்த படத்தை பார்த்து தான் தற்போது எனக்கு காதல் தீவு என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் மாணவியாக நடிக்கிறேன். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

நான் வடநாட்டு பெண் என்றாலும் எனக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அங்கு வாரிசு நடிகர்-நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் நாயகி வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல.

சினிமா பின்னணி இருந்தால் தான் பாலிவுட்டில் நுழைய முடியும். ஆனால் கோலிவுட்டில் அப்படியல்ல. நான் தமிழ் பட உலகம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உலகப் புகழ் பெற்ற ரஜினிகாந்தும், தமிழில் இருந்து இந்திக்கு வந்து புகழ் கொடி நாட்டிய கமல் ஹாசனும் இங்கே தான் இருக்கின்றனர். அப்பேர்பட்ட கோலிவுட்டில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன்.

இங்கு திறமையை மதிக்கிறார்கள். அசின், ஜெனிலியா போன்ற நடிகைகள் இங்கிருந்து பாலிவுட்டுக்கு வந்து பிரபலமாகியுள்ளனர். நான் விரைவில் தமிழில் நம்பர் 1 இடத்தை பிடிப்பேன். அதற்காக தமிழ் கற்றுக்கொள்ளப் போகிறேன் என்றார்.
comments | | Read More...

மீண்டும் சேலத்தில் தலைதூக்யுள்ள அழகிகளின் குத்தாட்டம்!

 
சில வருடங்களுக்கு முன்பு கோவில் திருவிழா காலங்களில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், புராண நடகம் என்று பொழுதுபோக்குடன் அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது. சமீபகாலமாக அறிவியல் முன்னேற்றம், நவநாகரீகம் என்ற போலியான முகமூடி அணிந்து நமது இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்தி செல்லும் அம்சங்கள் பெருகி வருகின்றன.
குறிப்பாக செல்போன் பயன்படுத்தும் இளைஞர்கள் பெரும்பாலானோர் வலைத்தளங்களில் உலாவரும் ஆபாச படங்களுக்கும், மனதை திசைத்திருப்பும் குருந்தகவல்களுக்கும் பலியாகி வருவது வருந்தத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சேலம் மாவட்ட கலெக்டரால் தடை செய்திருந்த அழகளிகளின் குத்தாட்டம் தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கி இருப்பது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழாக் காலங்களில் இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி அதிர வைக்கும் ஒளி, ஒலி அமைப்புடன் இரவு 10 மணிக்கு மேல் தொடங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தலைநகர் சென்னையிலிருந்தும் வர வழைக்கப்பட்ட நடன அழகிகளுடன் உள்ளூர் மற்றும் நடன குழுவை சேர்ந்த இளைஞர்கள் ஆடத் தொடங்குவார்கள் முதலில் பக்தி பரவசத்துடன் தொடங்கும் நடன நிகழ்ச்சி நேரம் செல்லச் செல்ல இளைஞர்களை சூடேற்றும் வகையில் இருக்கும்
நடு இரவு நேரத்தில் அதற்காகவே தனித்துவமாக தேர்வு செய்யப்பட்ட முக்கல் முனகல் பாடல்கள் இசைக்கத்தொடங்கும். பின்னர் மேடையில் அரை குறை ஆடையுடன் "தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடுடா" என்றும்" மே மாதம் 98-ல் மேஜரானே" என்று அங்கங்களை குலுக்கி நடனமாடும் அழகிகளின் குத்தாட்டம் களைகட்டும்.
இதன் உச்சக்கட்டமாக "நிலா காயுது" என்ற பாடலுக்கு அழகிகள் மேடையிலேயே அங்கங்கள் தெரிய சோப்பு போட்டு குளிப்பதுதான் நிகழ்ச்சியின் `ஹைலைட்'. இதை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் கூட்டம் ஆரவாரத்தில் கைத் தட்டி மகிழ்ச்சியை வெளிபடுத்துவார்கள்.
சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது பிரபலமாக நடைபெறும் இந்த குத்தாட்ட நிகழ்ச்சியை காண்பதற்காக சுற்றுப்புற பகுதி கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் ஏராளமாக திரளுகிறார்கள். இது போன்ற பல நிகழ்ச்சிகளில் இளைஞர்களுக்குள் கோஷ்டி மோதலும், கைகலப்பும் ஏற்பட்டு காவல் நிலையம் சென்ற சம்பவங்கள் ஏராளம்.
வெளிமாநில அழகிகளுடன் ஒரு பாடல்களுக்கு சேர்ந்து நடனம் ஆட உள்ளூர் இளைஞர்களிடம் குறிப்பிட்ட தொகை வாங்கப்படுவதாகவும் இவ்வாறு நடன நிகழ்ச்சி என்ற போர்வையில் அடையாளம் தெரியாத பல ஆண்கள் உள்ளூரில் வலம் வருவது பொதுமக்களின் பாதுகாப்பிற்க்கு சவால் விடும் சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பாக அமைந்து உள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இது போன்ற நடன நிகழ்ச்சிகளை தடை செய்வது தங்கள் வாழ் வாதாரத்தை பாதிக்கிறது என்று கூறினாலும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தையும், கலாச்சார சீரழிவையும் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இதை சீர்செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger