News Update :
Powered by Blogger.

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம், கொழுப்பு சத்துள்ள ஆவின் பால் விலையும் உயர்கிறது!

Penulis : karthik on Friday, 18 November 2011 | 22:44

Friday, 18 November 2011

 
 
ஆவின் நிறுவனத்தின் கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற, மெஜந்தா நிற, ஆரஞ்சு நிற பாக்கெட் பால்களின் விலையும் உயரவுள்ளது. அதே போல நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்படவுள்ளது.
 
தமிழகத்தில் சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை (நீல நிற பாக்கெட்) லிட்டருக்கு ரூ.6.25 உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து இந்த பாலின் விலை ரூ.17.75ல் இருந்து ரூ. 24 ஆக உயர்ந்தது.
 
மொத்தத்தில் ஆவின் நிறுவனம் 4 வகையான பாலை விற்பனை செய்து வருகிறது. 6 சதவீத கொழுப்புச் சத்து உள்ள பால் (ஆரஞ்சு நிற பாக்கெட்), 4.5 சதவீத கொழுப்புச் சத்து உள்ள நிலைப்படுத்திய (பச்சை நிற பாக்கெட்), 3 சதவீதம் கொழுப்புச் சத்து உள்ள சமன்படுத்திய பால் (நீல நிற பாக்கெட்), 1.5 சதவீதம் மட்டுமே கொழுப்புச் சத்து கொண்ட இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா நிற பாக்கெட்) ஆகியவையே ஆவின் விற்பனை செய்யும் பால் பாக்கெட் வகைகள் ஆகும்.
 
இதில் 3 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட சமன்படுத்திய பாலின் (நீல நிற பாக்கெட்) விலையை மட்டுமே நேற்று அரசு உயர்த்தி அறிவித்தது. மற்ற பால் வகைகளின் விலை இன்று உயருகிறது.
 
இவற்றின் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.
 
நெய், வெண்ணெய் விலையும்...:
 
அதே போல ஆவின் தயாரிப்புகளான நெய், வெண்ணை, பால்கோவா, ஐஸ்க்ரீம், குலோப் ஜாமூன் போன்றவற்றின் விலையும் உயரவுள்ளது.



comments | | Read More...

WHY THIS கொலைவெறி டி ?

 
 


தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ' 3 '. ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, தனுஷ் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். அனிருத் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தனுஷ் எழுதி பாடியுள்ள 'WHY THIS KOLAVERI DI ' பாடல் வெளியாகும் முன்பே இணையத்தில் வெளியாகி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உடனே படக்குழு அந்த ஒரு பாடல் மட்டும் அடங்கிய சி.டியை வெளியிட்டது. வெளியாகி 2 நாட்களே ஆன நிலையில் அப்பாடல் வரிகள் குறித்து இளைஞர்கள் வலைதளங்களில் கருத்து பரிமாற்றம் செய்து வருகிறார்கள். இப்பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே டிவிட்டர் இணையத்தில் TRENDING-ல் வந்து இருக்கிறது.

இதுகுறித்து தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " SOUP பாடல் என்றால் காதல் தோல்வி பாடல் என்று அர்த்தம். SOUP BOYS என்றால் காதல் தோல்வி அடைந்த பாய்ஸ் என்று அர்த்தம் " என்று கூறியுள்ளார்.

அப்பாடல் முழுவதும் ஆங்கிலத்திலேயே எழுதி பாடி இருக்கிறார் தனுஷ். அப்பாடல் வரிகள் இங்கே :

yo boys i am singing song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
rhythm correct
why this kolaveri kolaveri kolaveri di
maintain this
why this kolaveri........... aaa di

distance la moon-u moon-u
moon-u color-u white-u
white background night-u night-u
night-u color-u black-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

white skin-u girl-u girl-u
girl-u heart-u black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama notes eduthuko
apdiye kaila snacks eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4

whaa wat a change over maama
ok maama now tune change-u

kaila glass only english..
hand la glass glass la scotch
eyes-u full-aa tear-u
empty life-u girl-u come-u
life reverse gear-u
lovvu lovvu oh my lovvu
you showed me bow-u
cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u

this song for soup boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

அப்பாடல் உருவான விதம் வீடியோ வடிவில் :







comments | | Read More...

'டெல்லி பெல்லி' தமிழில் !

 
 
இந்தி சினிமா உலகில் வித்யாசமான படங்களை தயாரிப்பதில் ஆர்வம் உள்ளவர் அமீர்கான். அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள காமெடி படம் 'டெல்லி பெல்லி'. இப்படம் இந்தி திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது.
 
'டெல்லி பெல்லி' படத்தினை விநியோகம் செய்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையும் யு.டிவி நிறுவனத்திடம் தான் இருக்கிறது. ஆகவே தமிழில் அப்படத்தினை யு.டிவி தயாரிக்க இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
 
தற்போது அப்படத்தின் தமிழ் பதிப்பினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் கண்ணன். இவர் 'JAB WE MET' இந்தி படத்தினை தமிழில் 'கண்டேன் காதலை' என்ற பெயரில் வெற்றிகரமாக ரீமேக் செய்ததால் அவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்தார்களாம்.
 
படத்தின் வசனங்களை 'சச்சின்' படத்தினை இயக்கிய ஜான் எழுத இருக்கிறாராம். 'டெல்லி பெல்லி' படத்தில் சில இடங்களில் வசனங்கள் ஆபாசமாக இருக்கும். ஆகையால் தமிழில் எப்படி வசனங்கள் வைக்கலாம் என்று இருவரும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்களாம்.



comments | | Read More...

பேத்தி அழகை வர்ணிக்கும் அமிதாப் பச்சன்

 
 
 
ஐஸ்வர்யாவைப் போல அழகான கண்களோடு குழந்தை இருப்பதாக தனது பேத்தியின் அழகை, அமிதாப் பச்சன் வர்ணித்துள்ளார்.
 
பாலிவுட் முன்னணி நடிகை ஐஸ்வர்யாராய்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையோடு இரவு முழுவதும் விளையாடிக்கொண்டிருப்பேன் என்று, ஐஸ்வர்யாவின் கணவரான நடிகர் அபிஷேக் பச்சன் கூறியிருந்தார்.
 
 
இந்தநிலையில், அவரது தந்தையும் ஐஸ்வர்யாவின் மாமனாருமான நடிகர் அமிதாப்பச்சன் தன்னுடைய வலைப்பதிவில் பேத்தி பற்றி விரிவாக எழுதியுள்ளார். கவித்துவமான வரிகளோடு அமைந்துள்ள அந்த பதிவில், குழந்தையின் கண்கள் தாய் ஐஸ்வர்யாவின் கண்களைப்போல வெளிர் நிறத்தில் ஒளிர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
குழந்தையின் மேல் உதட்டில் இருந்து மென்மையான புன்னகை பிறப்பதாக அவர் எழுதியுள்ளார். தான் தந்தையானபோது குழந்தை அபிஷேக்கை கையில் வைத்திருந்த நெகிழ்ச்சியான தருணத்தையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். பிரசவத்தின் போது மருமகள் ஐஸ்வர்யா காட்டிய மனஉறுதி மற்றும் தைரியத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.



comments | | Read More...

விமர்சனத்துக்கு 'வேட்டை' முடிவுக்கட்டும்!

 
 
 
லிங்குசாமி படம் என்றால் விறுவிறப்புக்கு பஞ்சம் இருக்காது. தற்போது மாதவன், ஆர்யா வைத்து வேட்டை படத்தை முடித்துள்ளார் லிங்குசாமி. படம் நன்றாக வந்திருப்பதாகவும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனவும் சந்தோஷத்துடன் கூறியிருக்கிறார் லிங்குசாமி. 'லிங்குசாமி படம் ஒரு வரியில் சொல்லிவிடலாம்' என நிலவும் விமர்சனத்துக்கு, தன்னுடைய வேட்டை படம் முடிவுக்கட்டும் என்கிறார். வேட்தை படத்தில் ஆர்யா, மாதவன் இரண்டு பேரும் சகோதர்களா நடிச்சிருக்காங்க. இரண்டு பேரும் போட்டி போட்டு நடிப்பில் அசத்திருக்கும் இந்த படத்தின் கதை மனசை தொடும் அளவிற்கு இருக்கும் என லிங்குசாமி உறுதியாக கூறினார். இதனையடுத்து விரைவில் வேட்டை திரைக்கு வரும் என லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
 

 


comments | | Read More...

'மாலை நேர மழைத்துளி'யில் விஜய்க்கு ஜோடியாக காஜல்!

 
 
 
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்திற்கு ஏஞ்சலா ஜான்சனை நாயகி ஆக்கலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள்.
 
விஜய் - ஏஞ்சலா ஜான்சனை வைத்து ஒரு போட்டோ ஷுட் நடத்தினார் சந்தோஷ் சிவன். இந்நிலையில் இப்படத்தில் இருந்து தேதிகள் பிரச்னை காரணமாக விலகி விட்டாராம் ஏஞ்சலா ஜான்சன்.
 
இதனால் வேறு ஒரு நாயகியை தேடி வந்தார்கள். இந்தியில் முன்னனி நாயகியாக இருக்கும் சோனம் கபூரை நாயகி ஆக்கலாம் என்று முடிவு செய்து அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வலம் வந்தன.
 
இந்நிலையில் விஜய் படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். டிசம்பர் 1ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
 
தற்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருகிறவர் காஜல். தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக மாற்றான், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடன் ஒரு படம் மற்றும் ராம் சரண் தேஜா உடன் ஒரு படம் என நடித்து வருபவர் விஜய் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
 
'மாலை நேர மழைத்துளி' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தினை இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.



comments | | Read More...

நடிகை போலீஸ் கமிஷனரிடம் புகார்

 
 
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (20) என்ற இளம்பெண் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
 
 
அந்த புகார் மனுவில் தனது தாயார் மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். தன்னை சினிமாவில் நடிக்க வைக்க தனது தாயார் வற்புறுத்துகிறார் என்றும், தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை என்றும், தனது தாயார் வற்புறுத்தி தொல்லை கொடுக்கிறார் என்றும், தனது தாயாரை வரவழைத்து இது தொடர்பாக உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
 
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். பிரியதர்ஷினியின் தாயாரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைத்து, பிரியதர்ஷினி முன்னிலையில் கவுன்சிலிங் முறையில் பெண் போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் ஒருவர் இது தொடர்பாக விசாரணை நடத்துவார் என்று கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 
இது பற்றி பிரியதர்ஷினியிடம் கேட்ட போது, நான் மாட்டுத்தாவணி படத்தில் மீத்தா என்ற பெயரில் கதாநாயகி வேடத்தில் நடித்துள்ளேன்.
 
 
அந்த படம் இன்னும் வெளிவரவில்லை, போலீசார் விசாரணையை முடித்தபிறகுதான் இதுபற்றி நான் பேசமுடியும், இப்போதைக்கு அது பற்றி நான் எதுவும் பேசமுடியாது என்று சொல்லிவிட்டார். இவர் மவுனமான நேரம் படத்திலும் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

இன்று முதல் அமலாகும் ஆவின் பால் விலை உயர்வு எவ்வளவு?

 
 
ஆவின் பால் விலை இன்று (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்படுகிறது. ஆனால், விலை உயர்வு எவ்வளவு? என்பது தெரியாமல் அதிகாரிகள், ஏஜெண்டுகள் மத்தியில் குழப்பம் நிலவியது.
 
 
ஆவின் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதால், ஆவின் பால் விலையை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனம் தற்போது அதிக கொழுப்பு சத்து மிகுந்த பால், கொழுப்பு சத்து குறைந்த பால் என நீலம், பச்சை, ஆரஞ்சு, மெஜந்தா என 4 வகையான நிறம் கொண்ட பாக்கெட்டுகளில் பாலை தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறது.
 
 
 
அதன்படி 3 சதவீதம் கொழுப்பு நிறைந்த சமன்படுத்திய பால் (நீலநிறம்) அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் ரூ. 17.75-ல் இருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் இந்த வகை பால் லிட்டருக்கு ரூ.27.25-க்கு விற்பனையாகி வருகிறது.
 
 
4.5 சதவீத கொழுப்பு சத்து நிறைந்த பச்சை நிற (லிட்டர்) பாக்கெட் ரூ.22-லிருந்து ரூ.28.25 ஆக உயருகிறது. அதிக கொழுப்பு சத்து நிறைந்த ஆரஞ்சு நிற பாக்கெட் ரூ.24-லிருந்து ரூ.30.25 ஆக உயர்ந்தது. இரு முறை சமன்படுத்திய 1.5 கொழுப்பு சத்து நிறைந்த மெஜந்தா நிற பாக்கெட் ரூ.18.50-லிருந்து ரூ.24.75 ஆக உயர்ந்தது.
 
 
சில்லறை கடைகளில் பச்சை நிற பாக்கெட் (லிட்டர்) ரூ.31 ஆகவும், 1/2 லிட்டர் ரூ.15.50 ஆகவும், டேங்கர் பால் ரூ.24-ல் இருந்து ரூ.31-க்கும் இன்று (சனிக்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுவதாக பால் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
 
 
பால் விலையுடன் அதனை சார்ந்த பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. வெண்ணெய் ஒரு கிலோ ரூ.100-லிருந்து ரூ.150 ஆக உயர்ந்தது. நெய் 200 கிராம் ரூ.55-லிருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் ஆவின் பால் பொருட்களான பால்கோவா, குலோப்ஜாமூன், மைசூர்பாகு, ஐஸ்கிரீம், நறுமண பால் வகைகள் போன்றவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது.
 
 
 
ஆனால், பால் விலை உயர்வு குறித்து ஆவின் நிர்வாகம் நேற்று இரவு வரை எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இதனால், அதிகாரிகள், ஏஜெண்டுகள் மத்தியில் குழப்பம் நிலவியது. குழப்பத்திற்கு மத்தியிலேயே பால் விலை இன்று (சனிக்கிழமை) உயர்த்தப்படுகிறது.
 
 
கடந்த 1.12.2009-க்கு பிறகு தற்போது தான் பால் மற்றும் பால் தயாரிப்பு பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

ஸ்ருதி, அக்ஷரா வாழ்வில் தலையிட மாட்டேன்: தாய் சரிகா

 
 
 
சித்தார்த்-ஸ்ருதி இணைந்து நடித்த "ஒ மை பிரண்ட்" தெலுங்கு படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தாய் சரிகாவுடன் ஸ்ருதி வந்தார்.
 
சரிகா தற்போது மும்பையில் வசிக்கிறார். அவருடன் இரண்டாவது மகள் அக்ஷரா இருக்கிறார். ஸ்ருதி சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்வது சரிகாவை சந்தோஷப்படுத்தி உள்ளது.
 
அவர் அளித்த பேட்டி வருமாறு:-
 
சினிமாவை தவிர வெளிஉலகம் எனக்கு தெரியாது. சிறு வயதில் இருந்தே நடிப்பு, நடிப்பு என்றுதான் இருந்தேன். படப்பிடிப்பு அரங்குகள்தான் எனக்கு வகுப்பறை. அங்கு என் சீனியர் நடிகர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
 
இப்போது நிறைய குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் நடிக்கின்றனர். அவர்கள் நடிப்பு மட்டுமின்றி விளையாட்டு, படிப்பு என வேறு திறமைகளிலும் பளிச்சிடுகின்றனர். இவர்களைப்போல் சிறு வயதில் நான் இல்லை. அப்போது திரைப்பட விழாக்களும் கிடையாது.
 
இப்போது நிலைமைகள் மாறி உள்ளது. ஸ்ருதி சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அக்ஷராவுக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. கேமராவுக்கு பின்னால் இருந்து பணிகள் செய்யவே விருப்பம் உள்ளது.
 
ஸ்ருதியும் அக்ஷராவும் வாழ்க்கையில் சுயமாக முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்யலாம். எல்லா பெற்றோர்களுமே குழந்தைகளை சுதந்திரமாக விடவேண்டும். அவர்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளவும் சொந்தமாக முடிவுகள் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.
 
ஸ்ருதியும் அக்ஷராவும் சில விஷயங்களில் முடிவுகள் எடுக்கும் முன் என்னிடம் கலந்து பேசுவது உண்டு. ஆலோசனையும் கேட்பார்கள். ஆனால் நான் அவர்களை நிர்ப்பந்திப்பது கிடையாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிட மாட்டேன்.



comments | | Read More...

ரெயில் டிக்கெட் முன்பதிவு தட்கல் முறையில் மாற்றம்: 21-ந் தேதி முதல் அமல்

 
 
 
ரெயில் டிக்கெட் தட்கல் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தட்கல் முன்பதிவு ஒரு நாளுக்கு முன்பு தான் செய்ய முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை ரெயில்வே அறிவித்தது.
 
21-ந் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
* மாற்றம் செய்யப்பட்ட தட்கல் டிக்கெட் எடுக்கும் முறை வருகிற 21-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 
* ஒரு விண்ணப்பத்தில் 6 நபர்களை பதிவு செய்யும் முறைக்கு பதிலாக, இனி ஒரு விண்ணப்பத்திற்கு 4 நபர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தட்கல் டிக்கெட் கொடுக்கப்படும்.
 
* ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அடையாள அட்டை நகல் ஒன்றில் சுய கையொப்பமிட்டு தட்கல் முன்பதிவு விண்ணப்பத்துடன் இணைத்து அளிக்க வேண்டும்.
 
* டிக்கெட் எடுப்பவர் பயணம் செய்யாவிட்டால், அந்த டிக்கெட்டில் யாரும் பயணம் செய்ய முடியாது. ஏற்றுக்கொள்ளப்படும் அடையாள அட்டைகள் எவை? வாக்காளர் அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு போட்டோவுடன் வழங்கிய அடையாள அட்டை, பாஸ்போர்ட். ஓட்டுநர் உரிமம், வருமானவரித்துறை வழங்கிய பான்கார்டு, பள்ளி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பாஸ்புக், புகைப்படத்துடன் கூடிய லேமினேட் செய்யப்பட்ட கிரடிட் கார்டு.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger