நைரேபி, செப்.29-
சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது. இவர்கள் அங்குள்ள கிஸ்மாயு என்ற துறைமுக நகரை பிடித்து வைத்திருந்தனர்.
இந்த நகரை கென்யா மற்றும் சோமாலியா ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி மீட்டார்கள். இதை கென்யா ராணுவ செய்தி தொடர்பாளர் கிரூஸ் ஒகுனா நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இதுவே தீவிரவாதிகளின் கடைசி புகலிடமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
Post a Comment