கோவையில் கல்லூரி பேராசிரியர் தூக்கு போட்டு சாவு கோவையில் கல்லூரி பேராசிரியர் தூக்கு போட்டு சாவு
குனியமுத்தூர், செப். 28-
குடி குடியை கெடுக்கும் என்பார்கள். அது குனியமுத்தூரில் நடந்த கல்லூரி பேராசிரியரின் தற்கொலையால் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. குனியமுத்தூர் சொர்ணாம்பிகா கார்டன் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 38). இவரது மனைவி சற்குணா (34). 2 பேரும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினர். இவர்களுக்கு தர்ஷினி (6) என்ற மகள் உள்ளார். செல்லத்துரை குடிப்பழக்கம் உடையவர். கல்லூரிக�¯ �கு செல்லும்போது மது குடிப்பதில்லை. ஆனால் வீட்டில் இருக்கும்போது மது குடிப்பது வழக்கம். ஒரு சில நாட்களில் அதிகமாகவும் மது குடிப்பாராம். மது குடித்தால் வீட்டில் தனது அறையில் படுத்துக் கொள்வார்.
கடந்த சில நாட்களாக செல்லத்துரை கல்லூரிக்கு செல்லவில்லை. அந்த நாட்களில் அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இன்று அவரது மகள் தர்ஷினிக்கு பிறந்த நாளாகும். இதற்காக தர்ஷினிக்கு ஆடை எடுக்க சற்குணா முடிவு செய்தார்.
நேற்று காலை செல்லத்துரை வீட்டில் இருந்தார். சற்குணா கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடிந்ததும் தனது மகளுடன் கடைகளுக்கு சென்று பிறந்த நாள் ஆடை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். இரவு 9 மணி அளவில் அவர் அங்கு வந்தார். செல்லத்துரையின் அறை கதவு சாத்தி இருந்தது. எப்போதும் அந்த அறைக்கதவை அப்படித்தான் போட்டிருப்பார் என்பதால் சற்குணா பெரிதுபடுத்தவில்லை. ஆனால் வெகு நேரமாà �• எந்த சத்தமும் இல்லாததால் கூப்பிட்டு பார்த்தார். அப்போது எந்த பதிலும் செல்லத்துரையிடம் இருந்து வரவில்லை.
எனவே சந்தேகம் அடைந்த சற்குணா அந்த அறையின் கதவை திறந்து பார்த்தார். அப்போது அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மின் விசிறியில் செல்லத்துரை தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு சத்தம் போட்டார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.
இது தொடர்பாக குனியமுத்தூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
மின் விசிறியில் சேலையால் செல்லத்துரை தூக்கு போட்டுள்ளார். அவரது உடல் பாரம் தாங்காமல் சேலை அறுந்து கீழே செல்லத்துரை விழுந்து கிடந்தார். அவரது உடல் வீங்கி இருந்தது. எனவே அவர் நேற்று காலையே தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடிப்பழக்கத்தை தவிர செல்லத்துரைக்கு வேறு எந்த பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் கல்லூரி பேராசிரியரான செல்லத்துரையை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு அவருக்கு என்ன மனக்கஷ்டம் நேர்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Post a Comment