புதுடெல்லி,செப்.29-
சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேசன், சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட ரூ.24 ஆயிரம் கோடியை, முதலீட்டாளருக்கு திரும்ப வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சகாரா நிறுவனம் 3 மாதத்திற்குள் தனது முதலீட்டாளர்களுக்கு ரூ.24 ஆயிரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும் என் றும் இதனை பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.அகர்வால் என்பவரையும் நியமித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சகாரா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியன், நாங்கள் முதலீட்டாளருக்கு உரிய காலத்தில் பணத்தை திரும்ப வழங்குவோம். இதில் பின்வாங்கும் கேள்விக்கே இடமில்லை' என்று கூறினார். பின்னர் வழக்கு விசாரணையை அக்டோபர் 19&ந் தேதிக்கு நீதிபத�® ¿ தள்ளி வைத்தார்.
Post a Comment