News Update :
Powered by Blogger.

காப்பீட்டு திட்டத்தில் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை:சென்னை அரசு பொது மருத்துவமனை முதலிடம்

Penulis : karthik on Sunday, 16 September 2012 | 23:36

Sunday, 16 September 2012

காப்பீட்டு திட்டத்தில் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை:சென்னை அரசு பொது மருத்துவமனை முதலிடம் காப்பீட்டு திட்டத்தில் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை:சென்னை அரசு பொது மருத்துவமனை முதலிடம்
காப்பீட்டு திட்டத்தில் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை:சென்னை அரசு பொது மருத்துவமனை முதலிடம்

சென்னை, செப்.17-

முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி தொடங்கப்பட்டது. ஏழை-எளிய மக்களுககு உயிர்காக்கும் உயர் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் 4 வருடத்துக்கு ரூ.4 லட்சம் வரை இத்திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம்.

ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு கீழ் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள். இருதயம், நுரையீரல், புற்றுநோய், சிறுநீரகம், எலும்பு முறிவு, நரம்பு, ரத்த நோய்கள், குடல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறலாம்.

750 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தமிழகம் முழுவதும் உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு முந்தைய மருத்துவ சோதனை தொடங்கி, வீட்டிற்கு சென்று மருத்துவம் பெறும் வரையிலான செலவுகள் அனைத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

தமிழக முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் அதிகமான நோயாளிகள் பயன்பெற்றது சென்னை அரசு பொது மருத்துவமனையாகும். பல்வேறு மருத்துவ துறையின் கீழ் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் என இதுவரை 10 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சென்னை அரசு ஆஸ்பத்திரியே தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ள எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு ஆஸ்பத்திரி, கண் மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனைகளிலும் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக ்கது.

10 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு பதிவு செய்ததில் 7 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றனர். 1,500 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிர் காக்கும் சிகிச்சை அளித்ததன் மூலமாக அரசு ஆஸ்பத்திரிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது. மீதமுள்ள 1500 பேர் சிகிச்சைக்கு தயாராக இருக்கிறார்கள்.

2-வது இடத்தில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு 12 ஆயிரம் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை அரசு ஆஸ்பத்திரி துறை தலைவர்கள் மூத்த டாக்டர்கள், உதவி பேராசிரியர்கள், மற்றும் ஒருங்கிணைந்த டாக்டர் குழுவினரின் கூட்டு முயற்சியால் இந்த சாதனையை செய்ய முடிந்தது.

7 மாதத்தில் 10 ஆயிரம் குடும்பங்கள் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என்று டீன் கனகசபை தெரிவித்தார். சாதனை புரிந்த டாக்டர்கள், முதல்வரை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் நன்றி தெரிவிக்கும் பாராட்டு நிகழ்ச்சி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நாளை நடக்கிறது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் கலந்து கொண்டு பாராட்டுகிறார்.
comments | | Read More...

டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்: கேரளாவில் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்

டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்: கேரளாவில் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்: கேரளாவில் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்
டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்: கேரளாவில் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்

திருவனந்தபுரம், செப். 17-

மத்திய அரசு டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வுக்கு அனைத்து கட்சிகளும் லாரி உரிமையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அடுத்தக்கட்டமாக கேரளாவில் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளன. டீசல் விலை உயர்ந்து உள்ளதால் லாரி வாடகையை 30 சதவீதம் உயர்த்தி தரக்கூறி கேரளாவில் லாரி மற்றும் மினி லாரி உரிமையாளர்கள் இந்த பேராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இதனால் இன்று லாரி, மினி லாரிகள் கேரளாவில் ஓடவில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 20-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

நேட்டோ படையின் வான்வழி தாக்குதல்: 8 ஆப்கானிஸ்தான் பெண்கள் பலி

நேட்டோ படையின் வான்வழி தாக்குதல்: 8 ஆப்கானிஸ்தான் பெண்கள் பலி நேட்டோ படையின் வான்வழி தாக்குதல்: 8 ஆப்கானிஸ்தான் பெண்கள் பலி
நேட்டோ படையின் வான்வழி தாக்குதல்: 8 ஆப்கானிஸ்தான் பெண்கள் பலி

காபூல், செப், 17 -
 ஆப்கானில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் அவர்களின் மறைவிடங்களை கண்டு பிடித்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆப்கானின் கிழக்கு பகுதியில் உள்ள லாமன் என்னும் இடத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்திய விமானம் தாக்குதலில் நேற்று அப்பாவி பெண்கள் எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந் த தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாய் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். தவறுதலாக நடந்த இந்த தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவித்து அந்த சமுதாய மக்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் என்று பன்னாட்டு பாதுகாப்பு உதவி படையின் அதிகாரி ஒருவர் கூறினார். நேற்று முன்னதாக நடந்த ஒரு தாக்குதலில் அமெரிக்க பட� �யினர் 4 பேர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

மூன்று மாதமாக வீட்டில் பூட்டிவைக்கப்பட்ட பெண்: டெல்லியில் போலீஸ் மீட்பு

மூன்று மாதமாக வீட்டில் பூட்டிவைக்கப்பட்ட பெண்: டெல்லியில் போலீஸ் மீட்பு மூன்று மாதமாக வீட்டில் பூட்டிவைக்கப்பட்ட பெண்: டெல்லியில் போலீஸ் மீட்பு
மூன்று மாதமாக வீட்டில் பூட்டிவைக்கப்பட்ட பெண்: டெல்லியில் போலீஸ் மீட்பு

புதுடெல்லி, செப், 17 -
 டெல்லியில் ஜெட்பூர் என்னுமிடத்தில் மூன்று பிள்ளைகளுக்கு தாயான கவிதா (32 வயது). தனது கணவர் தீபக் என்பவருடன் வசித்து வந்தார். இவர் கடந்த மூன்று மாதங்களாக தனது பெற்றோர்களுடன் பேசமால் இருந்து இருக்கிறார். பலமுறை பேச முயற்சித்தும் அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் தங்களது மகள் வீட்டின் பக்கத்து வீட்டிற� ��கு போன் செய்து தனது மகளை பார்த்து வரச் சொல்லியிருக்கின்றனர். அப்போது அவர்கள் நாங்களும் கவிதாவை பார்த்து இரண்டு மதங்களுக்கு மேலாக ஆகிவிட்டதாக என்று கூறி அவரது வீட்டிற்கு சென்று பார்த்து இருக்கிறார்கள். ஆனால் அங்கேயும் கவிதா இல்லை என்று தெரிய வர அதை அவரது பெற்றோர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த கவிதாவின் பெற்றோர்கள் போலீசார் துணைய� �டன் வீட்டிற்கு வந்து கவிதாவை தேடினர். அப்போது ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த கவிதாவை போலீசார் மீட்டுள்ளனர். மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்ட கவிதா எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து டெல்லி காவல் துறையினர் அவரது கணவர் தீபக்கிடம் விசார� �ை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
comments | | Read More...

குளச்சலில் விசைப்படகு கல் வீசி உடைப்பு; அதிகாரியை மீனவர்கள் சிறைபிடித்தனர்

குளச்சலில் விசைப்படகு கல் வீசி உடைப்பு; அதிகாரியை மீனவர்கள் சிறைபிடித்தனர் குளச்சலில் விசைப்படகு கல் வீசி உடைப்பு; அதிகாரியை மீனவர்கள் சிறைபிடித்தனர்
குளச்சலில் விசைப்படகு கல் வீசி உடைப்பு; அதிகாரியை மீனவர்கள் சிறைபிடித்தனர்

குளச்சல், செப்.16

குளச்சலைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், சில மீனவர்களும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இன்று காலை அவர்கள் குளச்சல் துறைமுகம் நோக்கி கரை திரும்பிக்கொண்டு இருந்தனர்.

அப்போது கடியப்பட்டணத்தைச் சேர்ந்த வள்ளம் மீனவர்கள் சிலர், ஜெகன்ராஜின் விசைப்படகு தடையை மீறி 25 மைல் கல்லுக்குள் உட்பட்ட பகுதியில் மீன் பிடிப்பதாக மீன் வளத்துறை உதவி இயக்குனர் ரூபர்ட் ஜோதியிடம் புகார் செய்தனர்.

இதையடுத்து ரூபர்ட் ஜோதி, கடலோர பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஆகியோர் விசைப்படகு தடையை மீறி மீன் பிடிக்கிறதா? என்பதை பார்ப்பதற்காக ஒரு படகில் சென்றனர்.

அதற்குள் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த வள்ளம் மீனவர்கள் ஜெகன்ராஜீன் விசைப்படகை கல் வீசி தாக்கினர். இதில் விசைப்படகின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

இதுபற்றி குளச்சல் விசைப்படகு மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கடற்கரையில் திரண்டனர். அப்போது கரைக்கு வந்த ரூபர்ட் ஜோதியை அவர்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விசைப்படகை கல்வீசி தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

அப்போது ரூபர்ட் ஜோதி, சைமன்காலனியில் உள்ள மீன் வளத்துறைக்கு வாருங்கள். அங்கு பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறினார். ஆனால் அங்கேயே தீர்வு காணவேண்டும் என விசைப்படகு மீனவர்கள் சொன்னார்கள்.

தகவல் அறிந்த குளச்சல் காணிக்கை மாதா ஆலய பங்குத்தந்தை பெலிக்ஸ், மீனவர்களுடன் பேச்சுவார்தை நடத்தி அவர்களை அமைதிப்படுத்தினார். பின்னர் மீனவர்கள் அனைவரும் மீன்வளத்துறை அலுவலகம் சென்றனர். அங்கு அவர்களுடன் மீன் வளத்துறை உதவி இயக்குனர் ரூபர்ட் ஜோதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
comments | | Read More...

எழும்பூரில் வாகன சோதனை: லஞ்சப் பணத்துடன் சிக்கிய சப் இன்ஸ்பெக்டர்

எழும்பூரில் வாகன சோதனை: லஞ்சப் பணத்துடன் சிக்கிய சப் இன்ஸ்பெக்டர் எழும்பூரில் வாகன சோதனை: லஞ்சப் பணத்துடன் சிக்கிய சப் இன்ஸ்பெக்டர்
எழும்பூரில் வாகன சோதனை: லஞ்சப் பணத்துடன் சிக்கிய சப் இன்ஸ்பெக்டர்

சென்னை, செப். 16-

சென்னையில் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை தடுக்க இணை கமிஷனர் ரவிக்குமார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வாகன சோதனையில் ஈடுபடும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் அபராத தொகையை தவிர கூடுதலாக பணம் வைத்திருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி அவர்களுக்கு பணம் தேவைப்பட்டால் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வைத்துக்கொள்ளலாம்.

கடந்த சில மாதங்களாக, கூடுதலாக பணம் வைத்திருந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வாகன சோதனையின்போது ரூ.3 ஆயிரம் லஞ்சப் பணத்துடன் எழும்பூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சிக்கினார். போக்குவரத்து போலீஸ் துறையில் செயல்பட்டு வரும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது கையும் களவுமாக அவர் சிக்கினார்.

ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனத்தில் வந்த ஒருவரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக சப்- இன்ஸ்பெக்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுபற்றி துறை ரீதியிலான விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
comments | | Read More...

மின்வாரிய நிதி நிலையை சீர்செய்ய ரூ.1000 கோடி முன்பணம்: ஜெயலலிதா உத்தரவு

மின்வாரிய நிதி நிலையை சீர்செய்ய ரூ.1000 கோடி முன்பணம்: ஜெயலலிதா உத்தரவு மின்வாரிய நிதி நிலையை சீர்செய்ய ரூ.1000 கோடி முன்பணம்: ஜெயலலிதா உத்தரவு
மின்வாரிய நிதி நிலையை சீர்செய்ய ரூ.1000 கோடி முன்பணம்: ஜெயலலிதா உத்தரவு

சென்னை, செப். 16-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அதே வேளையில், பொதுநலன் பாதுகாக்கப்படவும், மக்களுக்கு தரமான சேவை நியாயமான விலையில் கிடைப்பது உறுதி செய்யப்படவும் ஏற்படுத்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் திறம்பட செயலாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இந்த வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்தும், புதிய மின் திட்டங்களின் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அவை மின் உற்பத்தியைத் துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரவினம் மற்றும் செலவினங்களுக்கிடையே நிகர இடைவெளி ஏற்பட்டது.

இதன் விளைவாக, இந்த நிதியாண்டின் துவக்கத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தொடர் இழப்பு 54,500 கோடி ரூபாயும், வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் 46,500 கோடி ரூபாயும் என இருந்தது.

இவையன்றி, மின் உற்பத்தியாளர் மற்றும் இதர ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது. எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது தமிழ் நாடு மின்சார வாரியம் இவ்வாறு அளவுக்கு மீறிய கடன் சுமைக்கு ஆளாகி, வாங்கிய கடனையும், வட்டியையும் திரும்பச் செலுத்துவதற்கே கடன் வாங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் அதாவது, டெப்ட்டிராப் நிலையில் இருந்தது. தமிழ் நாடு மின்சார வாரியத்தை இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீட்கும் வகையில், 2011-2012-ஆம் நிதியாண்டில் இதுவரை வழங்கப்படா த உயர் அளவாக மானியத் தொகை, பங்கு மூலதனம் மற்றும் வழிவகை முன் பணம் என மொத்தம் 7913.45 கோடி ரூபாயை எனது தலைமையிலான அரசு வழங்கியது.

நடப்பு 2012-2013ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக 3020 கோடி ரூபாயையும், புதிய மின் திட்டங்களுக்கான பங்கு மூலதன உதவியாக 1500 கோடி ரூபாயையும் எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்து 14.9.2012 அன்று எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், எரிச� ��்தித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் முடிவில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலையை சீர்செய்யும் பொருட்டு, கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

(1) 2012-2013ஆம் ஆண்டில் இதுவரை 3020 கோடியே 25 லட்சம் ரூபாய் மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உடனடித் தேவைக்காக தற்போது முன்பணமாக 1,000 கோடி ரூபாயை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

(2) மத்திய அரசின் நிறுவனங்களாகிய மின் ஆற்றல் நிதி நிறுவனம் மற்றும் ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் ஆகிய நிறுவனங் களிடமிருந்து தலா 5,000 கோடி ரூபாய் உதவித்தொகையைக் கடனாகப் பெறும் வகையில் அந்நிறுவனங்களுக்கு மின்சார வாரியம் சார்பில் தமிழக அரசு கடன் உத்தரவாதம் அளிக்கும்.

(3) மின்சார வாரியங்களின் "நிதி சீரமைப்புத் திட்டம்" தொடர்பாக "சதுர்வேதி" குழுவின் அறிக்கையின் மீது மத்திய அரசின் மின்துறை மற்றும் நிதித்துறை அதிகாரிகள் நிதி நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்படி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் குறுகிய மற்றும் நடுத்தர கால கடன் வகைகளில் 50 சதவீதத்தை, அதாவது, 9,529 கோடி ரூபாயை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்.

(4) நடப்பு நிதியாண்டில் மின்சார வாரியத்தில் ஏற்படக்கூடிய வருவாய் இழப்புத் தொகையில் 30 சதவீதத்தை, அதாவது, 1294 கோடி ரூபாயையும் தமிழக அரசு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலை சீரடைய வழிவகை ஏற்படும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger