News Update :
Powered by Blogger.

முதல்வர் ஜெ.,க்கு மக்கள் சபாஷ்! கூடங்குளத்திற்கு அனுமதி அளித்தார்: 6மாத இருள் முடிந்து ஒளி

Penulis : karthik on Monday, 19 March 2012 | 22:56

Monday, 19 March 2012

கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள, தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்திருக்கிறார். கடந்த ஆறு மாத கால இழுபறிக்கு தீர்வாக, தமிழகத்தில் ஒளி பிறக்க வழி கிடைத்துள்ளதால், தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. கூடங்குளத்தை முடக்க முயன்ற எதிர்ப்பாளர்கள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. கூடங்குளம் பகுதியில் சிலரது எதிர்ப்பு காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நேற்று முன்தினம் முடிந்ததும், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இவ்விஷயம் விவாதிக்கப்பட்டது. பின், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட ஐந்து பக்க அறிக்கை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில், 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம், இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே, 1988ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு, 2001ம் ஆண்டு, இதற்கான பணிகள், இந்திய அணு மின் நிலையத்தால் துவக்கப்பட்டது.முதல் அணு மின் நிலையப் பணிகள், 99.5 சதவீதமும், இரண்டாவது அணு மின் நிலையப் பணிகள், 93 சதவீதமும் முடிவடைந்த நிலையில், அணு மின் நிலையப் பாதுகாப்பு குறித்து சில ஐயப்பாடுகளை எழுப்பி, அதை மூட வலியுறுத்தி, இடிந்தகரையில் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதை அறிந்ததும், கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை, அணு மின் நிலையப் பணிகளைத் தொடர வேண்டாம் என்று தெரிவித்து, பிரதமருக்கு கடிதம் எழுதினேன்; அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.குழு அறிக்கை: அந்த அடிப்படையில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழகக் குழு, பிரதமரை டில்லியில் சந்தித்த போது, பிரதமர் விரிவாக ஆராய ஏற்பாடுகள் செய்வதாகத்தெரிவித்தார். பின், மத்திய அரசால், 15 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அணு மின் நிலைய எதிர்ப்புக் குழுவினர் மூன்று பேருடனும், மாநில அரசின் பிரதிநிதிகளான நெல்லை மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., ஆகியோருடனும் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியது.வல்லுனர் குழு அளித்த அறிக்கையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு உலைகள் சர்வதேச தரத்திலான பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், தமிழக அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்தது. இக்குழுவும் பல்வேறு ஆய்வுகளை கூடங்குளத்தில் நடத்திய பின் தனது அறிக்கையை, பிப்ரவரி 28ம் தேதி அளித்தது.இந்தப் பின்னணியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கை, மாநில அரசின் வல்லுனர் குழு அறிக்கை மற்றும் அணு மின் திட்டத்துக்கு எதிரானவர்களின் மனு விரிவாக ஆராயப்பட்டு, நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படக் கூடிய வாய்ப்பு இல்லை என்று தெரியவந்தது.எவ்வாறான நிலையிலும் அணு மின் நிலையம் பாதுகாப்பானது தான் என்பதும், அணு மின் நிலையம் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் தெரியவந்தது. இதனடிப்படையில், மீனவர் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாது என்ற அடிப்படையிலும், அப்பகுதி மக்களிடையே நிலவும் ஐயப்பாடுகளுக்கு வல்லுனர் குழு பதில் அளித்துள்ளதை கருத்தில் கொண்டும், கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, அமைச்சரவை முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிதி ஒதுக்கீடு: மேலும், கூடங்குளம் பகுதியில் சிறப்பு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட


வேண்டும் என்பதால், அங்கு வசிக்கும் மீனவர்களது விசைப் படகுகளை சரி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சேமித்து வைக்க, குளிர் பதனீட்டு நிலையம் அமைத்தல், அப்பகுதி மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்துதல், சாலை வசதிகள்போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காக, 500 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும் அமைச்சரவை தீர்மானித்தது.கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தை திறக்க நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்படும். அணு மின் நிலையப் பணிகளை மீண்டும் உடனே மேற்கொள்வது என்ற தமிழக அரசின் முடிவுக்கு, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மக்கள் வரவேற்பு: இந்த அறிவிப்பு வெளியானதும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில் துறையினர், இருளில் தவித்த மக்கள் பலரும், அரசின் தெளிவான முடிவுக்கு மனம் திறந்து பாராட்டு தெரிவித்தனர்; மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம், கூடங்குளம் எதிர்ப்பாளர் உதயகுமார், இடிந்தகரையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருக்கிறார். மேலும், இப்பகுதியில் போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில், 7,000 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். வேண்டும் என்பதால், அங்கு வசிக்கும் மீனவர்களது விசைப் படகுகளை சரி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சேமித்து வைக்க, குளிர் பதனீட்டு நிலையம் அமைத்தல், அப்பகுதி மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்துதல், சாலை வசதிகள்போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காக, 500 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும் அமைச்சரவை தீர்மானித்தது.கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தை திறக்க நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்படும். அணு மின் நிலையப் பணிகளை மீண்டும் உடனே மேற்கொள்வது என்ற தமிழக அரசின் முடிவுக்கு, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மக்கள் வரவேற்பு: இந்த அறிவிப்பு வெளியானதும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில் துறையினர், இருளில் தவித்த மக்கள் பலரும், அரசின் தெளிவான முடிவுக்கு மனம் திறந்து பாராட்டு தெரிவித்தனர்; மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம், கூடங்குளம் எதிர்ப்பாளர் உதயகுமார், இடிந்தகரையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருக்கிறார். மேலும், இப்பகுதியில் போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில், 7,000 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.
comments | | Read More...

போராட்ட கூடாரம் அகற்றம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ; போலீஸ் வாகனம்மீது மீது கல்வீச்சு; பதட்டம்

கூடங்குளம் அணுமின்நிலையம் திறக்கலாம் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை அடுத்து அங்கு பணிகள் ஜரூராக துவங்கியுள்ளது. தமிழக மற்றும் மத்திய பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுனாமிநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்புபடை போலீஸ் வாகனத்தின் மீது ஒரு மர்ம கும்பல் கல்வீசியது. இதனையடுத்து அங்கு சிறிய பதட்டம் ஏற்பட்டது.

இன்று காலையில் இருந்து அணுமின் நிலையத்திற்கு பணிக்கு செல்லும் நபர்கள் பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 3 ஷிப்டுகளுக்கு மொத்தம் 900 பேர் இன்று பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்ய விஞ்ஞானிகள் பலரும் இன்று நிம்மதியாக பணிக்கு சென்றனர். இவர்கள் நீண்ட காலமாக வெளிநாட்டில் இருந்து வந்து பணியில் ஈடுபடாமல் இருந்து வந்தனர். இதனால் நாடு திரும்பி விடலாம் என்ற நிலையில் தமிழக அரசின் முடிவு பெரும் மகிழ்ச்சியை தந்திருப்பதாக தெரிவித்தனர்.


இதற்கிடையில் போராட்டக்காரர்கள் அணுமின்நிலையத்திற்கு அருகில் அமைத்திருந்த ஓலை கூடாரத்தை போலீசார் அகற்றினர். போராட்டக்காரர்கள் பிரச்னையை கவனத்தில் கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அøம்சரவை தீர்மானம் நிறைவேற்றபட்பட்ட நாள் முதல் இந்த கூடாரத்தில் தான் போராட்டக்õரர்கள் கூடி இருந்து அணு உலைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


அணுஉலையை போராட்டக்காரர்கள் யாரும்நெருங்க முடியாத அளவிற்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து அதிவேக சிறப்பு படை ஆர்.ஏ.எப்., மத்திய போலீசார் இன்று கூடங்குளம் அணுமின்நிலையம் பாதுகாப்புபணிக்கு வந்தனர். இந்த படையினர் அணுமின் நிலையம் அருகே குவிக்கப்பட்டுள்ளனர்.


தமிழக அரசுக்கு ரஷ்ய விஞ்ஞானிகள் பாராட்டு : ""இந்தநாள் எங்களுக்கு மிகச்சிறப்பு வாய்ந்தநாள்'', என, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பணிக்குச் சென்ற ரஷ்ய விஞ்ஞானி மமினெவ் அலெக்சாண்டர் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின்நிலைய பணிக்காக, அணுமின்நிலைய பஸ்களில் ரஷ்ய விஞ்ஞானிகள் 90 பேர் உள்ளேசென்றனர். மூத்த விஞ்ஞானியும், அணுஉலை வடிவமைப்பு நிபுணருமான மமினெவ் அலெக்சாண்டர் கூறியதாவது: ""இந்தநாள் எங்களுக்கு மிகச்சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாள் விரைவில் வரும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். இது,அறிவியல், அணுஉலை தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி. இங்கு மின்உற்பத்தி துவங்கப்படுமென சரியான முடிவு எடுத்ததற்காக, தமிழக அரசு மற்றும் மக்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


இங்குள்ள இரு அணுஉலைகளிலும்,கூடிய விரைவில் மின்உற்பத்தியை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, நாங்கள் கடுமையாக உழைக்கவுள்ளோம்'', என்றார். மற்றொரு மூத்தவிஞ்ஞானி கிரிகோரி கூறுகையில்,""இங்கு கூடிய விரைவில் மின்உற்பத்தியை துவக்கி, இந்திய மக்களுக்காக மகிழ்ச்சியுடன் உழைக்க தயாராகவுள்ளோம்'', என்றார்.

comments | | Read More...

ரூ.550 கோடி ஊழல் புகார்: தயாநிதி மாறனின் நிதி ஆவணங்கள் மத்திய அமலாக்கப்பிரிவில் தாக்கல்

 
 
 
ஸ்பெக்ட்ரம் லைசென்சு ஒதுக்கீடு தொடர்பான மேக்சிஸ்-ஏர்செல் ஒப்பந்தத்தில் ரூ.555 கோடி ஊழல் நடந்ததாக, தொலைத்தொடர்பு துறை முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் மற்றும் அவருடைய சகோதரரும், சன் டி.வி. நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் இருவருக்கும் மத்திய அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது.
 
அதன்பேரில், தயாநிதி மாறன் தொடர்புடைய பண பரிமாற்றம், முதலீடுகள் மற்றும் இதர வர்த்தகம் தொடர்புடைய நிதி ஆவணங்கள் நேற்று டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல், கலாநிதி மாறன் சார்பிலும் நிதி ஆவணங்கள் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு துறை மந்திரியாக பணிபுரிந்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் மத்திய மந்திரி பதவியில் இருந்து தயாநிதி மாறன் விலகினார். இந்த குற்றச்சாட்டை தயாநிதி மாறன் மறுத்து வருகிறார். இந்த வழக்கில் தயாநிதி மாறனுடன் தொடர்புடைய மேலும் சிலருடைய வாக்குமூலங்களையும் அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ.யும் இந்த முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.



comments | | Read More...

இன்றைய முக்கிய செய்திகள்



 கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்க நடவடிக்கை - ஜெயலலிதா அறிவிப்பு
தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று பகல் 12.30 மணிக்கு

 இலங்கைக்கு எதிரான தீர்மானம் இந்தியா ஆதரிக்கும் - பிரதமர் மன்மோகன்சிங்
ஐ.நா. மனித உரிமைகள் கமிஷனில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில்

 பிரதமரின் பதில் மழுப்பலானது: ஜெயலலிதா
ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள
 மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி
ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரான்சு, நார்வே
 சென்னை துறைமுகத்தில் டிரெய்லர் லாரிகள் ஸ்டிரைக்
வெளிநாடுகளில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கப்பல்களில் வரும் கன்டெய்னர்களை கொண்டு செல்ல டிரெய்லர்
 கேஸ், டீசல் விலை உயர்த்தப்படும்: பிரணாப் முகர்ஜி
நாடாளுமன்றத்தின் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு சமையல் எரிவாயு (எல்பிஜி) மற்றும்
 இயற்பியலைத் தொடர்ந்து கணக்கு, விலங்கியல் தேர்விலும் சென்டம் குறையும்
பிளஸ் 2 கணக்கு, தேர்வில் நேற்று வழங்கிய கேள்வித்தாளில் அதிக கேள்விகளுக்கு படம்
 ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கே முதலிடம்
கடந்த 5 ஆண்டுகளில் உலக அளவில் அதிக ஆயுதங்கள் இறக்குமதி செய்ததில் ஆசியா
 ஐன்ஸ்டீனின் கைப்பிரதிகள் ஆன்லைனில் வெளியாகிறது
நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ‌கையெழுத்து பிரதிகள் மற்றும்
 மனைவியின் காதலனிடம் ரூ.3½ கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் விவாகரத்து கோரி கோர்ட்டை அணுகுவது வழக்கம்.
 மெக்சிகோவில் 10 பேரின் துண்டித்த தலைகள் வீதியில் கிடந்தன
மெக்சிகோ நாட்டின் தலைநகருக்கு சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் டெல்லோபான்
 `சென்செக்ஸ்' 193 புள்ளிகள் வீழ்ச்சி
நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமை
 அழகை பாதுகாக்க ரூ.72 லட்சம் செலவிடும் பிரபல ஆலிவுட் நடிகை
பிரபல ஆலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன். 43 வயதாகும் இவர் தற்போதும் கூட
 கவர்ச்சி `போஸ்' கொடுத்த ஆசிரியை - பெற்றோர்கள் கண்டனம்
இத்தாலி நாட்டில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் மிஷிலா
 காதல் ஜோடிகளுக்காக `ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' விசேஷ காட்சி
'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படத்தை 50 காதல் ஜோடிகள் பார்த்தார்கள். இதுபற்றி அந்த
 சினேகா நடிக்கும் 'ஹரிதாஸ்'
சினேகா நடிப்பில் உருவாகும் 'ஹரிதாஸ்', தியாகராஜ பாகவதர் நடித்த படத்தின் ரீமேக் இல்லை
 ஐ.பி.எல் சீசன்-5: பிரபுதேவா, ப்ரியங்கா சோப்ராவின் ஆட்டத்துடன் தொடக்கம்
இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் போட்டிகள் இந்தாண்டு ஏப்ரல்
 ஜப்பான் திரைப்பட விழாவில் `தெய்வத்திருமகள்' படத்துக்கு 2 விருதுகள்
விக்ரம் நடித்து, விஜய் அழகப்பன் டைரக்ஷனில் வெளிவந்த படம், `தெய்வத்திருமகள். 5 வயது
 முதியோர் இல்லம் கட்டும் ஹன்சிகா?
ஹன்சிகா சின்ன வயதில் இருந்தே ஓவியம் வரையும் பழக்கம் உடையவராம். இதுவரை சுமார்
 நடிகர் ஆர்யாவின் வீ்ட்டில் குத்துவிளக்கேற்றிய நயன்தாரா
ஆர்யாவுக்கு சென்னை அண்ணாநகரில் ஏற்கனவே சொந்தமாக வீடு இருக்கிறது. அதில், அவர் தனது
 பெப்சிக்கு பதிலாக புதிய தொழிலாளர் அமைப்பு - தயாரிப்பாளர் சங்கம் முடிவு
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்குப் (பெப்சி) பதிலாக புதிய அமைப்பை உருவாக்க தமிழ்த்
 நில மோசடியில் தொடர்பா? - ஜெனிலியா மறுப்பு
ரூ.250 கோடி நில மோசடியில் தனக்கு சம்பந்தமில்லை என்கிறார் ஜெனிலியா.ஐதராபாத்தை சேர்ந்த ரியல்
 பிரபுதேவாவின் பெயரை அழிக்க பிளாஸ்டிக் சர்ஜரி - நயன்தாரா முடிவ
பிரபுதேவாவுடன் காதல் முறிந்த நிலையில், கையில் பச்சை குத்திய அவரது பெயரை அழித்துவிட
 ஒருதலையாக காதலித்து ஏமாந்தது போதும் - சிம்பு
ஒருதலையாக காதலித்து ஏமாந்தது போதும். அடுத்த வருடம் எனது திருமணம் நடக்கும். அதற்காக
--



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger