News Update :
Powered by Blogger.

அணுகுண்டை விட மோசமானது...

Penulis : karthik on Monday, 7 May 2012 | 22:49

Monday, 7 May 2012




அணுகுண்டை விட மோசமானது பிளாஸ்டிக் பைகள் என்று கருத்து  தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம்,இதனை ஒழிக்க மத்திய ,மாநில அரசின்  நடவடிக்கைகள் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.

பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கோரி ஷியாம் திவான் என்ற வழக்கறிஞர்   பொது நலன் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"நாட்டில் பிளாஸ்டிக் பைகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.நாடு  முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாடுகளின் வயிற்றை அறுவை சிகிச்சை  செய்து 30 முதல் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் எடுக்கப்படுவதாக கால்நடை  மருத்துவமனை அறுவை சிகிச்சை குறித்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.இதனால்  பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி,எஸ்.ஜே.  முகோபாத்யாய் ஆகியோரடங்கிய அமர்வு,எதிர்காலத்தில் அணு குண்டுகள் ஏற்படுத்தும்  அழிவை விட, பிளாஸ்டிக் பைகள் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் அடிப்பகுதியில்  அடைத்துக் கொண்டு ஏற்படுத்தும் அழிவு மிகப் பயங்கரமானதாக உள்ளது என்று கூறியது.

மேலும் இந்தியாவில் உடனடியாக பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட  வேண்டும் என்றும்,இல்லையென்றால் இந்த நிலையை கட்டுப்படுத்த முடியாது என்றும்  கூறிய நீ திபதிகள்,இது குறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்  அனுப்பவும் உத்தரவிட்டனர்.



comments | | Read More...

லாலு மூளையை இழந்துவிட்டார்: நிதீஷ் குமார்



டெல்லியில் கடந்த 5ம் தேதி தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பாக நடந்த முதல்வர்கள் மாநாட்டில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், பீகார் முதல்வர் நிதீஷ் குமா ரும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதற்கு ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்தார். நிதீஷின் மதச்சார்பின்மை முகமூடி கிழிந்து விட்டதாகவும் லாலு குற்றம் சாட்டினார். 

இது பற்றி பாட்னாவில் பேசிய நிதிஷ், 'முதல்வர்கள் மாநாட்டின்போது யாராவ� �ு கைகொடுத்தால் அந்த சூழ்நிலையில் எப்படி தவிர்க்க முடியும்? மோடி எனக்கு வாழ்த்து தெரிவித்து கை கொடுத் தார். பதிலுக்கு கைகுலுக்கினேன். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் லாலு பிரசாத் விரக்தி அடைந்துள்ளார். அதனால்தான் இப்படி பேசுகிறார். மூளையை இழந்தவரிடம் இருந்துதான் இது போன்ற கருத்துக்கள் வரும்' என்றார். 

மேலும் பேசிய நிதீஷ், 'ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்ன நிலை எடுப்பது என்பது பற்றி இன்னும் ஆலோசிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் நெருங்கும்போது கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள்' என்றும் கூறினார். 

பீகார் சட்டமேலவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உட்பட 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதீஷ் குமார் நேற்று எம்.எல்.சியாகப் பதவியேற்றுக் கொண்டார்.





comments | | Read More...

ஐ.பி.எல் : அரை இறுதி வாய்ப்பு யாருக்கு ஒரு அலசல்




இதுவரை நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் 4 முறையும் அரை இறுதிக்கு தகுதி பெற்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகு ம். 2 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது நடைபெற்று வரும் 5-வது ஐ.பி.எல். போட்டியில் அரை இறுதியில் நுழைய தடுமாறி வருகிறது.

இந்தப்போட்டியில் விளையாடும் 9 அணிகளும் 16 ஆட்டத்தில் விளையாட வேண்டும். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ஆட்டத்தில் விளையாடி விட்டது. இதில் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 ஆட்டத்தில் தோற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. இதனால் 11 புள்ளிகளுடன் உள்ள து. சென்னை அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன. இதில் 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் உறுதியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

3 போட்டியில் வென்றால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்துதான் தெரியும். நேற்றுடன் 50 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 22 'லீக்' ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. தற்போதுள்ள புள்ளி விவர கணக்குப்படி டெல்லி டேர்டெவில்ஸ் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 10 ஆட்டத்தில் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் 6 ஆட்டங்கள் அந்த அணிக்கு உள்ளது. கொல்கத்தாவை இன்று சந்திக்� �ிறது.

டெக்கான், சென்னை, பஞ்சாப் (2 முறை), பெங்களூர் அணிகளுடன் மோத வேண்டும். இந்த 6 ஆட்டத்தில் ஒன்றில் வென்றாலே அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11 ஆட்டத்தில் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்று 12-வது இடத்தில் உள்ளது. ஒர ு ஆட்டம் முடிவு இல்லை. அந்த அணிக்கு இன்னும் 4 ஆட்டம் உள்ளது. இதில் 2 ஆட்டத்தில் வென்றால் தகுதி பெறும்.

ஒரு ஆட்டத்தில் வென்றாலும் தகுதி பெறுவதில் சிக்கல் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் 11 ஆட்டத்தில் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளன. அந்த அணிக்கு � ��ன்னும் 5 ஆட்டங்கள் உள்ளன. இதில் இரண்டில் வென்றால் தகுதி பெறும். மும்பை அணி கொல்கத்தா, பெங்களூர் அணிகளுடன் தலா 2 முறையும், ராஜஸ்தானுடன் ஒரு முறையும் மோத வேண்டும்.

டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய 3 அணிகளும் அரை இறுதியில் நுழைவதில் சிரமம் இருக்� ��ாது. அந்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளன. அரை இறுதிக்கு தகுதி பெறும் 4-வது அணி எது என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ரா ஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 4 அணிகளுக்குள் போட்டி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் (10-ந்தேதி-ஜெய்ப்பூர்), டெல்லி டேர்டெவில்ஸ் (12-ந்தே தி-சென்னை), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (14-ந்தேதி-கொல்கத்தா), பஞ்சாப் (17-ந்தேதி- தர்மசாலா) ஆகிய அணிகளுடன் மோத உள்ளது.

இந்த 4 ஆட்டத்திலும் வென்றால் தகுதி பெற்றுவிடும். ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் வாய்ப்பு இருக்கும். அதே நேரத்தில் சென்னைக்கு போட்டியாக இருக்கும் மற்ற அணிகள் தோற்க வேண்டும். பெங்களூர் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 5 ஆட்டம் உள்ளது. மும்பை அணியுடன் 2 முறையும், புனே, டெல்லி, டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளுடன் மோத வேண்டி உள்ளது.

தற்போதைய கணக்குப்படி சென்னையைவிட பெங்களூர் நல்ல நிலையிலேயே இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஒரே நிலையில் உள்ளன. இரு அணிகளும் தலா 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் உள்ளன. இரு அணிகளுக்கும் இன்னும் 5 ஆட்டம் எஞ்சியுள்ளன. புனே வாரியர்ஸ் 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. எஞ்சிய 4 ஆட்டத்திலும் வென்றாலும் வாய்ப்பு குறைவே. 4 ஆ ட்டத்திலும் வெற்றி பெறுவது கடினம்.

டெக்கான் சார்ஜர்ஸ் 2 வெற்றி, 8 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இன்னும் 5 ஆட்டம் உள்ளது. 5 போட்டியிலும் வெற்றி பெற்றாலும் எந்த பலனும் இல்லை. இனி நடைபெற இரு� �்கும் போட்டிகளில் எதிர்பாராத முடிவுகள் ஏற்பட்டால்தான் நிலைமை மாறும்.



comments | | Read More...

ஜூன் 6ல் வெள்ளி கிரகம் வெறும் கண்ணால் பார்க்க கூடாது : விஞ்ஞானிகள் எச்சரிக்கை




வரும் ஜூன் 6ஆம் தேதி வெள்ளி கிரகம், சூரிய தட்டு வழியே கடக்கும் அபூர்வ நிகழ்வு நடக்கிறது. அப்போது யாரும் வெறும் கண்ணால் சூரியனை பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளி கோளானது சூரிய தட்டின் வழியே ஒரு புள்ளி போன்று நகர்ந்து செல்லும் வெள்ளி இடைநகர்தல் நிகழ்வு வரும் ஜூன் 6ம் தேதி வானில் நிகழ்கிறது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பி ல் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரப்புதலுக்கான தேசியக்குழுவின் உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியது: ஜூன் 6ஆம் தேதி வெள்ளி கோள் சூரிய தட்டு வழியே ஒரு புள்ளி போன்று கடந்து செல்கிறது. இதனை இந்திய நேரப்படி காலை 5.30 மணி முதல் 10 மணி வரை தொலைநோக்கிகள் மூலம் காணலாம். இது ஒரு அற்புத நிகழ்வு.  வெறும் கண்ணால் பார்க்க கூடாது. பாதுகாப்பான முறைய ில் இந்த அரிய நிகழ்வை அனைவரும் காண வேண்டும்.  இதுபோல் 1641ஆம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை 7 முறை மட்டுமே தெரிந்துள்ளது. இதன் பிறகு டிச.2017ல் தான் இது நிகழும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெள்ளிக்கோளின் இடை நகர்வு நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொலைநோக்கி மூலமாக பார்க்க ஏற்பாடு செய்து வருகிறது என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.



comments | | Read More...

வெள்ளை மாளிகையில் விருந்து ஒபாமா அழைப்பு; ரகுமான் பூரிப்பு




வெள்ளை மாளிகைக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்தது குறித்து ஏ.ஆர்.ரகுமான் பூரிப்புடன் கூறினார்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்தது. அதையேற்று கடந்த சனிக்கிழமை அமெரிக்கா சென்றார் ரகுமான். பலத்த கரகோஷத்துக்கு இடையே டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:
அமெரிக்க அதிபரும் அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டு என்னை வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லி கடிதம் அனுப்பி இருந்தனர். இதை கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. இந்தநேரத்தில் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தி தந்தவர்கள� � நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். எனது தந்தை, தாயார் என் வாழ்க்கையை ஒழுக்க நெறிகளுடன் செம்மையாக அமைத்து தந்தனர். திரையுலகில் 'ரோஜா' படம் மூலம் எனக்கு முதன்முதலாக வாய்ப்பளித்தவர் மணிரத்னம். இஸ்லாமிய ஞானிகள் என்னை நானே உணர்ந்துகொள்ள வழிகாட்டினார்கள். இந்திய ரசிகர்கள் என்னையும், எனது இசையையும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரவணைத்துக்கொண்டனர். அதேபோன்று ஹாலிவுட்டிலும் என� ��னை ஏற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன்.
இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.



comments | | Read More...

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சர்கோசி தோல்வி: புதிய அதிபராக ஹோலண்ட் தேர்வு




பிரான்சில், அதிபர் தேர்� ��லுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு கடந்த மாதம் 28-ந்தேதி நடந்தது. அதில் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரான்காய்ஸ் ஹோலண்ட் 28.6 சதவீதம் ஓட்டு பெற்றார். ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட நிக்கோலஸ் சர்கோசி 26.2 சதவீதம், அதாவது 2 சதவீதம் வாக்குகள் குறைவாகப் பெற்று பின்தங்கினார். மற்றவர்கள் இவர்களைவிட குறைவான வாக்குகளை பெற்றனர்.   
 
இதையடுத்து 2ம் � ��ட்ட தேர்தல் நேற்று நடந்தது. பிரான்ஸ் நாட்டு சட்டப்படி தேர்தலில் 20 சதவீதத்துக்கும் மேல் பெறுபவர்கள் 2-வது கட்ட தேர்தலில் போட்டியிட முடியும். அதன்படி 2ம் கட்ட தேர்தலில் இவர்கள் இருவர் மட்டுமே களத்தில் இருந்தனர். முதல்கட்ட தேர்தலில் அதிபர் சர்கோசி பின்தங்கியதால், 2ம் கட்ட தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிபெற, அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  
 
ஓட்டு பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிவரை நடந்தது. இதையடுத்து 2 மணி நேரம் கழித்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நிகோலாஸ் சார்கோஸிக்கு 48 சதவீத வாக்குகளும், ஹோலண்டுக்கு 52 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இதனால் சோசலிச கட்சியின் பிரான்காய்ஸ் ஹோலண்ட் வெற்றி பெற்றார்.
 
பிரான்சின் அடுத்த அதிபராக ஹோலண்ட் பதவியேற்க உள்ளார். கடும் போட்டி நிறைந்திருந்த இத்தேர்தலில், சிறிய வித்தியாசத்தில் சார்கோஸி தோல்வி அடைந்திருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய பொருளாதார நெருக்கட� ��, வேலையில்லா பிரச்சினை, ஆப்கானிஸ்தான் போர்முனையில் பிரான்ஸ் ராணுவம் தொடர்ந்து நிலை கொண்டிருப்பது போன்றவை இத்தேர்தலில் எதிரொலித்துள்ளதாகத் தெரிகிறது.
 
சார்கோஸி மீதான வெறுப்புணர்வினாலேயே மக்கள் ஹோலண்டுக்கு வாக்களித்துள்ளதாகவும், ஹோலண்ட் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை, அவருடைய அடுத்த ஐந்து வருட பதவிக்காலத்த� ��ல் நிறைவேற்றுவதென்பது மிக கடினமானது எனவும் சில அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



comments | | Read More...

நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா(வீடியோ )




மதுரை ஆதீனம் மடத்திற்கு அகில பாரத இந்து மகா சபா தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ், பொதுச் செயலாளர் இந்திரா திவாரி, தமிழ் மாநிலத் தலைவ ர் பாலசுப்ரமணியம் அடங்கிய குழு இன்று வந்தது.

அவர்கள் மதுரை ஆதீனம் அருணகிரி நாதரையும், இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தாவையும் சந்தித்துப் பேசினர்.

 பின்னர் இந்தக் குழுவினர் நிருபர்களிடம் பேசுகையில்,

நித்யானந்தர் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இந்து மதத்தை நல்ல முறையில் பரப்பி வருகிறார். இந்து மதம் தழைத்தோங்க பல்வேறு முயற்சிகளும் எடுத்து வருகிறார். அவரால் உலகில் உள்ள இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்.

அவர் நீடூழி வாழ்ந்து இந்து மதத்திற்கு இன்னமும் பல சாதனைகள் புரிய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்து மதத்தைப் பொறுத்தவரை யாராவது ஒருவர் நல்ல காரியம் செய்தால் சிலர் எதிர்ப்பது வாடிக்கைதான். அதுபோல நித்யானந்தரின் நடவடிக்கைகளை அவர் இந்து மதத்திற்கு ஆற்றி வரும் தொண்டுகளை பொறுக்க முடியாத சிலர் அவருக்கு எதிர்ப்பு� �் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் இந்து மத விரோதிகள்.

நித்யானந்தரின் தொண்டு தொடர எங்கள் அமைப்பு முழு ஆதரவு கொடுக்கும். நித்யானந்தர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் சிறு சிறு பிரச்சனைகள்தான். அவருக்கு உள்ள சக்தியில் இதெல்லாம் சாதாரண விஷயம்.

மதுரை ஆதீனத்தை பிரச்சனையாக்க முயற்சிக்கும் மற்ற ஆதீனங்களின் செயல்களை வண்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களை இந்து மத விரோதிகளாக நாங்கள் பார்க்கிறோம் என்றனர்.





comments | | Read More...

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு எதிராக பொது வேட்பாளர்- தே.மு.தி.க.-கம்யூனிஸ்டு ஆலோசனை




புதுக்கோட்டை தொகுதிக்க ு ஜூன் மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
அந்த கட்சி தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த தேர்தலில் அ.தி. மு.க. கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற இந்திய கம் யூனிஸ்டு இந்த முறை போட்டியிடவில்லை. சட்டசபை தேர்தலில் 3 ஆயிரத்து 101 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க.வும் போட்டியிடாது என்று அந்த கட்சி தலைவர் கருணாநிதி அறிவித்து விட்டார்
 
 பா.ம.க., விடுதலை சிறுத்தை கட்சிகளும் போட்டியிடவில்லை. ம.தி. மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தங்கள் நிலைப்பாடு என்ன என்பத� � இதுவரை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 
புதுக்கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட வேண்டும்Ó என்று பெரும்பாலான நிர்வாக� �கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தங்கள் கட்சி வேட்பாளருக்கு மற்ற கட்சிகளின் ஆதரவை கேட்கலாம் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளருக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆதரவு அளித்தது. எனவே புதுக்கோட்டை தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு தே.மு.தி.க. ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
< div style="border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Latha; font-size: 0.9em !important; line-height: 23px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"> 
தே.மு.தி.க. போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒருவேளை போட்டியிட விரும்பினால் மார்க்சிஸ்டு விட்டுக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. யார் போட்டியிட்டாலும் அது பொது வேட்பாளராகத்தான் இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. தே.மு.தி.க. போட்டியிட்டால் தி.மு.க., பா.ம.க. ஆதரவை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற முடியும்.
 
எனவே மார்க்சிஸ்டு வேட்பாளர் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க.வுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதில ் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுதியாக உள்ளது. எனவே அந்த கட்சி வேட்பாளரே பொது வேட்பாளராக நிற்க அதிக வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. புதுக்கோட்டையில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று இணைந்து புதுக்கோட்டை இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது. அப்படி பொது வேட்பாளரை நிறுத்தினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.



comments | | Read More...

மேலும் தாமதமாகும் கமல், அஜீத், சூர்யாவின் படங்கள்!




தமிழ் சினிமாவில் கோடை காலம் மிக முக்கிய சீஸன். நாட்டில் மழை பெய்கிறதோ இல்லையோ... திரையரங்கில் வசூல் மழை இருக்க� ��ம்.

எனவே இந்த கோடையைக் குறிவைத்து முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் தயாராவது வழக்கம்.

இந்த ஆண்டு கோடை ரிலீஸில் முக்கியப் படமாக எதிர்ப்பார்க்கப்பட்டது கமல் ஹாஸனின் விஸ்வரூபம். ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

பாடல்கள் சேர்க்கப்படாத, படத்தின் ஒரு பிரதியை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பிவிட்டார் கமல்ஹாஸன் என்று தெரிகிறது. ஆனால் தியேட்டர் ரிலீஸ் இன்னும் தள்ளிப் போகிறது.

படத்தின் விளம்பரம், வர்த்தகம் தொடர்பான வேலைகளை இனிமேல்தான் கமல் துவங்கவிருப்பதால், படம் வெளியாவது தாமதமாகிறது.

இந்த கோடையில் இன்னொரு முக்கிய வெளியீடு அஜீத்தின் பில்லா 2. பெப்சி தொழிலாளர் பிரச்சினை காரணமாக, மே மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம், ஜூன் அல்லது ஜூலைக்கு தள்ளிப் போயுள்ளது.

சூர்யாவின் மாற்றான் திரைப்படம் மே மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் இதையும் தாமதப்படுத்தியுள்ளது பெப்சி தொழிலாளர் பிரச்சினை. ரஷ்யா, சீனா என வித்தியாசமான லொகேஷன்களில் பா ர்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் நல்ல எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

கார்த்தி நடிக்கும் சகுனி ஏப்ரலில் வரவிருந்தது. இந்த மாதம் வெளியாகிவிடும் எனத் தெரிகிறது.

பெரிய படங்கள் வராதது, வழக்கு எண் 18/9 போன்ற சிறிய, ஆனால் நல்ல படங்கள் பக்கம் ரசிக� �்களை அதிகம் போக வைத்துள்ளது. அந்த வகையில் இந்த தாமதத்திலும் ஒரு நல்லது நடந்துள்ளது!



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger