Monday, 2 July 2012
'சகுனி' படத்தில் ராகுல் காந்தியை விமர்சித்து இருப்பதாக காங்கிரசார் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கார்த்தி, சந்தானம் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.ஈரோட்டில் 'சகுனி' படம் திரையிடப்பட்டுள்ள அபிராமி தியேட்டரில் ரசிகர்களை சந்திக்க வந்த கார்த்தியிடம் காங்கிரசார் எதிர்ப்பு பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து கார்த்தி கூறியத ாவது:-சகுனி படத்தில் அரசியல் உள்ளது. ஆனால் நான் அரசியல்வாதி கிடையாது. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. சகுனி படத்தில் ராகுல் காந்தியை நாங்கள் விமர்சிக்கவில்லை. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது.ராகுல் காந்தியின் குடும்பத்துக்கு நல்ல மரியாதை இருக்கிறது. கதைபடி அரசியல்வாதியாக நடித்துள்ளேன். அவ்வளவு தான். திருட்டு வி.சி.டியால் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்� ��ர் உரிமையாளர் களுக்கும் நஷ்டம் ஏற்படு கிறது. இப்போதும் 100 சதவீதம் திருட்டு வி.சி.டி. உள்ளது.தியேட்டருக்கு வந்து மக்கள் படம் பார்க்க ஆசைபடுகிறார்கள். ஆனால் ரூ.20-க்கு சுலபமாக திருட்டு வி.சி.டி கிடைத்தால் என்ன செய்வார்கள்? இதனை தடுக்க கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்த வேண்டும். திருட்டு வி.சி.டி. என்பது அடுத்தவன் சொத்தை அபகரிப்பதற்கு சமம். நடிகர்களுக்கு தகுதியை மீறிய சம்பளம் யாரும் தருவதில்லை.சகுனி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுத்தை படத்தின் ஒட்டு மொத்த வசூலை சகுனி படம் 3 நாளில் முறியடித்து விட்டது. எனது படத்தை குழந்தைகள், பெண்கள் விரும்பி பார்க்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் அதிகமாக பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.தற்போது நான் 'அலெக்ஸ் பாண்டியன்', 'பிரியாணி', 'ஆல் இன் ஆல் அழகுரா� ��ா' போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறேன். கமர்சியல் படத்தையும் தாண்டி பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் மாதிரியான கதைகள் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.சூர்யாவுக்கு நான் எந்த விதத்திலும் போட்டி கிடையாது. அவர் பாணியும், என் பாணியும் வேறு வேறு.இவ்வாறு கார்த்தி கூறினார்.