News Update :
Powered by Blogger.

பைலட்டை திருமணம் செய்யவுள்ளார் நடிகை உதயதாரா

Penulis : karthik on Monday, 20 February 2012 | 22:53

Monday, 20 February 2012

 


நடிகை உதயதாரா, ஜூபன் சோப் என்ற விமான பைலட்டை திருமணம் செய்ய இருக்கிறார். தீ நகர், கண்ணும் கண்ணும், உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை உதயதாரா. தமிழ் தவிர மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் வேட்டையாடு, பிரம்மபுத்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. துபாயை சேர்ந்த விமான பைலட் ஜூபன் ஜோசப் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மார்ச் மாதமும், அதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் திருமணமும் நடக்க இருக்கிறது. திருமணம் கேரளாவில் நடக்க உள்ளது.
comments | | Read More...

நயன்தாரா குத்திய பச்சை இப்போது குத்துதாம்

 


பிரபுதேவாவை பிரிந்துவிட்ட நயன்தாரா, அவரின் நினைவுகளையும் முற்றிலுமாக அழிக்க நினைக்கிறார், இதனால் தனது கையில் பச்சையாக குத்தியுள்ள பிரபு என்ற பிரபுதேவாவின் பெயரை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழிக்கவுள்ளார். பிரபுதேவாவின் மீதுள்ள தீவிர லவ்வால், அவருக்காக நடிப்புக்கு முழுக்கு போட்டு, மதம் எல்லாம் மாறினார். போதாகுறைக்கு பிரபுதேவாவின் பெயரையே கையில் பச்சை குத்திக்கொண்டார். அப்படியெல்லாம் பிரபுதேவா மீது லவ்வோ லவ்வாக இருந்த நயன்தாரா, இப்போது அவரை பிரிந்து விட்டார்.

பிரபுதேவாவை பிரிந்த நயன்தாரா மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்திலும், தமிழில் அஜீத்துடன் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் பிரபுதேவாவை முழுமையாக பிரிந்து விட்ட நயன்தாரா அவரது நினைவுகள் மற்றும் அடையாளங்களை கூட முழுவதுமாக அழித்து விட வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக தனது கையில் பச்சையாக குத்திக் கொண்டுள்ள பிரபுதேவாவின் பெயரை அழிக்க எண்ணியுள்ளார். இதுதொடர்பாக மருத்துவர்களிடம் அவர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இதனை நீக்கி விடலாம் என்றும், அதேசமயம் கையின் அழகும் கெடாது என்று கூற இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவெடுத்து இருக்கிறார் நயன்தாரா.
comments | | Read More...

ஜெ. சவாலை ஏற்றார் விஜயகாந்த்..களத்தில் குதித்தது தேமுதிக

 
 
 
திராணி இருந்தால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுங்கள் பார்ப்போம் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதாவின் சவாலை ஏற்று சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இருப்பினும் திமுகவின் ஆதரவை நாடுமா என்பது தெரியவில்லை.
 
தேமுதிக சார்பில் சங்கரன்கோவிலில் முத்துக்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சங்கரன்கோவிலில் மார்ச் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பே அதிமுக தனது வேட்பாளராக என்ஜீனியர் முத்துச்செல்வியை அறிவித்தது.
 
பின்னர் திமுக தனது வேட்பாளராக ஜவகர் சூரியகுமாரை அறிவித்தது. அதேபோல மதிமுகவும் தனது வேட்பாளராக டாக்டர் சதன்திருமலைக்குமாரை அறிவித்தது.
 
இந்த நிலையில் தேமுதிகவின் நிலை தெரியாமல் இருந்து வந்தது. நாளை கூடும் அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் இன்றே தனது கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டார் விஜயகாந்த்.
 
தேமுதிக சார்பில் முத்துக்குமார் போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
நடைபெற இருக்கின்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழகத்தின் துணை செயலாளர் மு. முத்துக்குமார், பி.இ,எம்பிஏ வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
 
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ. பயின்றவர். எம்பிஏ பட்டப் படிப்பு அழகப்பா பல்கலை கழகத்தின் தொலை தூர கல்வி மூலம் முடித்துள்ளார். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டவர். இவர் சங்கரன்கோவில் நகரத்தில் வசிக்கின்றார்.
 
கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், கழக ஆதரவு அணிகளை சேர்ந்தவர்களும் அயராது தேர்தல் பணியாற்றி வெற்றி தேடி தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். சங்கரன்கோவில் தொகுதியை சேர்ந்த வாக்காளர் பெருமக்களும், பொதுமக்களும் தங்கள் மேலான ஆதரவை தர வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
 
இந்தப் போட்டியைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் தற்போது நான்குமுனை போட்டி உருவாகியுள்ளது. அதேசமயம், பொது வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பு மங்கியுள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் தேமுதிக, திமுக இடையே உடன்பாடு ஏற்பட்டால் இவர்களில் யாராவது ஒருவர் விலகிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
 
நாளை சென்னையில் நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயகாந்த் எப்படிப் பேசப் போகிறார், என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.



comments | | Read More...

சகுனி வரும் வேளை தெரியுமா!

 
 
ஏப்ரல் 14-ம் தேதியை என்னவென்று கொண்டாடுவதென்று தமிழர்கள் குழப்பத்திலிருந்தாலும், ஏதோ ஒரு விசேஷ தினமாக கொண்டாடிவிட்டுப் போகட்டும், நம்ம வியாபாரத்தைப் பார்க்கலாம் என்ற நினைப்பில் புதுப்படங்களை ரிலீஸ் செய்யும் வேலையில் மும்முரமாகியுள்ளனர் தமிழ் சினிமாக்காரர்கள்.

அவர்களைப் பொறுத்தவரை அய்யா ஆட்சியிலிருந்தால் ஏப்ரல் 14 சித்திரை திருநாள். அம்மா வந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு என்பதில் தெளிவாக உள்ளனர்!

இந்த சித்திரை முதல் தினத்தில் வெளியாகும் படங்களில் முந்திக் கொண்டுள்ளது கார்த்தி நடிக்கும் சகுனி.



இந்தப் படத்தில் கார்த்தி அரசியல்வாதியாக நடித்துள்ளார். கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, அரசியல் ஆட்டத்தில் எப்படியெல்லாம் விளையாடுகிறார், எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றுகிறார் என்பதுதான் கதை.

கார்த்திக்கு இந்தப் படத்தில் ஜோடி பரணிதா. ஆனால் உண்மையான ஜோடி சந்தானம் எனும் அளவுக்கு காமெடியில் பின்னிப் பெடலெடுத்துள்ளார்களாம்.

ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. மார்ச்சில் பாடல் வெளியீடு, ஏப்ரல் 14-ல் பட வெளியீடு என பக்கா திட்டமிடலுடன் படத்தைத் தயார் செய்துள்ளார் இயக்குநர் சங்கர் தயாள்.
comments | | Read More...

முதன்முறையாக மூன்று வேடங்களில் விஷால்

 


லிங்குசாமியின் சண்டக்கோழி படம் மூலம் மாஸ் ஹீரோவாக ஆனவர் நடிகர் விஷால். தொடர்ந்து அதிரடி ஹிட் படங்களாக கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்ட விஷால், முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்க போகிறார். நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி தான் இந்த படத்தை இயக்க போகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் குறித்து விஷால் கூறியுள்ளதாவது, முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்க உள்ளேன். சுந்தர்.சி இயக்கும் இப்படம், அவரது முந்தைய படங்களை போன்று பக்கா கமர்ஷியல் படமாக, அதேசமயம் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்றார்.

தற்போது விஷால், த்ரிஷாவுடன் சமரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அடுத்தகட்ட சூட்டிங் பாங்காக்கில் நடக்கிறது, அதனைத்தொடர்ந்து இறுதிகட்ட படப்பிடிப்பு மார்ச்சில் நடக்கிறது. இப்படத்தை முடித்த பின்னர் சுந்தர்.சி.யின் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. விரைவில் இப்படம் குறித்த முழு விபரமும் வெளியாகும்.

இதனிடையே மீண்டும் லிங்குசாமியின் இயக்கத்தில், சண்டக்கோழி பார்ட்-2 படம் உருவாக இருப்பதாகவும், அதில் ஹீரோவாக விஷாலே நடிக்கப்போவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
comments | | Read More...

அசின் எடுத்த அதிரடி முடிவு

 

தயாரிப்பு நிறுவனங்கள் சம்மதித்தால் மட்டுமே, தான் நடிக்கும் திரைப்படங்களின் விபரங்கள் பற்றி கூறுவதாக நாயகி அசின் தெரிவித்துள்ளார்.

கொலிவுட்டில் முன்னணி நாயகர்களுடன் நடித்த அசின், பாலிவுட்டின் நட்சத்திர நாயகர்களான "கான்களோடு" நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்திப்பட நிறுவனங்கள் அனுமதித்தால் மட்டுமே படங்களை பற்றி பேசுவதாக அசின் முடிவெடுத்துள்ளார்.

பாலிவுட்டில் சேதன் பகத்தின் "2 ஸ்டேட்ஸ்" படத்தில் ரன்பீர் கபூருடன் நடிக்கும் அசின்,வசூல் நாயகன் ஷாருக்கானுடன் இணைகிறார். அதுமட்டுமின்றி சஜித்தின் இந்திப்படத்திலும் நடிக்கிறார்.

நான் இந்திப்படங்களில் ஆர்வமாக நடித்து வருகிறேன். படநிறுவனங்கள் அனுமதித்தால் மட்டுமே நான் நடிக்கும் படங்களை பற்றி என்னால் பேசமுடியும்.

நான் ஷாருக் கானுடன் இணைந்து நடிக்கும் படம் பற்றி சமீபத்தில் பட உலகில் ஆர்வமாக கேட்டுள்ளார்கள்.

படத்தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டால் மட்டுமே நான் படத்தை பற்றி பேசுவேன் என்று அசின் உறுதியாக கூறியுள்ளார்.

comments | | Read More...

நடிகைகளுக்கான கிரிக்கெட் போட்டி!

 

சினிமா நடிகர்கள் பங்கு கொண்ட 'செலிபிரெட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்)' கோப்பையை இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி 12 ம்தேதி கைப்பற்றி, சென்னை ரைனோஸ் அணி சாதனை படைத்தது.

வெற்றி பெற்ற சென்னை ரைனோஸ் அணி வீரர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனான நடிகர் விஷால் பேசியதாவது;

"நாங்க எல்லோரும் நடிகர்களா இல்லாம சிசிஎல் கிரிக்கெட் வீரர்களா உங்களை இங்க சந்திக்கிறோம். சிசிஎல் கப்பை ரெண்டாவது முறையா ஜெயிச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இதுக்கு என்னோட டீம் பிளேயர்ஸ்தான் காரணம். அவங்களுக்கு எனது நன்றிகள்.

எல்லோரும் ஸ்கூல்ல, காலேஜ்ல கிரிகெட் விளையாடி இருப்போம். ஆனா புரபெஷனலா விளையாட ஆரம்பிச்ச பிறகு நாங்க நடிகர்களா இருப்பதை மறந்து வீரர்களா மாறிடோம். இந்தியாவில் உள்ள அத்தனை சினிமா உலகத்தினரையும் ஒரே பிளாட்பார்மில் கொண்டு வந்தது

சிசிஎல்தான். விஷ்ணுவுக்கு அடிபட்டதை பார்த்துவிட்டு நிறைய பேர் எங்ககிட்ட வந்து 'இதெல்லாம் உங்களுக்கு தேவையா?'ன்னு கேட்டாங்க. ஆனா ரசிகர்களின் மத்தியில் விளையாடிய எங்களுக்குத்தான் தெரியும் அது எவ்வளவு பெருமையான விஷயம்னு… நடிப்பைத் தவிர எங்களிடம் கிரிக்கெட் திறமையும் இருக்குன்னு காட்ட வச்சதே இந்த சிசிஎல்தான்.

கிரிக்கெட் விளையாடிய ஒருமாதம் முழுக்க நாங்கள் நடிகர்கள் என்பதை மறந்து வீரர்களாகவே மாறி விட்டோம்" என்றார்.

நடிகைகளுக்கான 'சிசிஎல்' வருமா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, அப்படி 'விமென் சிசிஎல்' ஆரம்பிச்சா என் டீம் ஆட்களை கழட்டி விட்டுட்டு அவங்களோட சேர்ந்திடுவேன். அது தெரியல. அப்படி நடந்தலும் நடக்கலாம். கிரிக்கெட் மட்டுமல்ல பிற போட்டிகளுக்கும் இது போன்று முக்கியத்துவம் தர இருக்கிறோம். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

comments | | Read More...

முதன் முதலாக சந்தானத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு!

 
 
தெலுங்கில் வசூல் சாதனை படைத்த மகதீரா படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் ராஜ்மௌலி தெலுங்கு மற்றும் தமிழில் இயக்கும் படம் "நான் ஈ". இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஹீரோ படத்தின் ஆரம்பத்திலேயே கொல்லப்படுகிறார். மகதீரா படத்தைப் போல் ஹீரோ வில்லனை மறுபிறவியில் பிறவியெடுத்து அழிக்கிறார். மறுபிறவியில் "ஈ"-ஆக பிறவியெடுத்து வில்லனை அழிக்கும் போது தான் சந்தானத்தின் நடிப்பு ஆரம்பிக்கிறது.
ஹீரோயின் சமந்தா மறுபிறவியில் சந்தானத்தை ஹீரோவாக நினைத்து விரட்டி விரட்டி காதலிக்கிறார். வழக்கம் போல இல்லாமல் ஐந்து பக்க டையலாக் கொடுத்து சந்தானத்தின் நடிப்புத் திறமையை காட்ட வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குனர்.
இது பற்றி பேட்டியளித்த சந்தானம், நான் நடிக்கிற படங்களில் ஒரு காட்சிக்கு கிட்டத்தட்ட 15பக்க வசனத்தை பேசிவிடுவேன். ஆனால் இந்த படம் முழுக்க எனக்கு மொத்தம் 5 பக்க டையலாக் தான். இந்த படத்தில் நான் அதிகம் பேசுவது இல்லை. எல்லாமே உடல் அசைவுகளும் முக பாவனைகளும் தான். இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் தான் முதல் முறையாக நடிப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்றார்.
comments | | Read More...

விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன்...!

 
 
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். பல வெற்றி படங்களை இயக்கிய டைரக்டர் சுந்தர்.சி, திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார். அதில் கொஞ்ச காலம் தாக்குபிடித்த அவர், இப்போது மீண்டும் டைரக்ஷ்ன் துறைக்கே வந்துவிட்டார். தற்போது விமல், சிவா, அஞ்சலி ஆகியோரை வைத்து "மசாலா காபி" என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படமும் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஷாலை வைத்து ஒரு முழுநீள கமர்ஷியல் படத்தை எடுக்க இருக்கிறார். படத்தில் விஷாலுக்கு மூன்று வேடம். விஷால் முதன்முறையாக மூன்று வேடத்தில் நடிக்க இருப்பது இதுவே முதல்முறை.
 
இந்நிலையில் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து சுந்தர்.சி ‌கூறுகையில், இந்தபடத்திற்கு ஒரு ஹீரோயின் மட்டுமே தேர்வு செய்துள்ளோம். ஆனால் படத்தில் விஷாலுக்கு மூன்று வேடம், அதனால் இன்னொரு ஹீரோயினுக்காக ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் முடிவாகிவிடும் என்றார்.
 
இதனிடையே இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் சுந்தர்.சி இயக்க திட்டமிட்டு இருப்பதாலும், ஸ்ருதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரொம்ப பிரபலம் என்பதால் அவரை இந்தபடத்திற்கு தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது.



comments | | Read More...

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை வழக்கு ஒத்திவைப்பு

 

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நியாயப்படுத்தி, மத்திய அரசு சமர்ப்பித்த பதில் மனுவை, தமிழ்நாடு அரசும் பின்பற்றுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கத்தின் மீதான தடையை இந்திய மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடித்து வருகிறது. இறுதியாக, 2010ம் ஆண்டு மே மாதம், இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்து, அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. எனினும், இந்தத் தடை விதிக்கப்பட்டதற்கு போதிய காரணங்கள் உள்ளதா, இல்லையா என்பதை முடிவு செய்ய, தீர்ப்பாயம் ஒன்றையும் மத்திய அரசு அமைத்தது. இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீர்ப்பாயத்தில் ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் மனுக்களைச் சமர்ப்பித்தனர். ஆனால் விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடை செல்லுபடியாகும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த மனுவிற்கு, மத்திய அரசு தரப்பில் பதில் மனு சமர்பிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்தி, இந்த பதில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றத்தில் வைகோ முன்னிலையானார். இதன்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பதில் மனுவில், மத்திய அரசு சமர்ப்பித்த பதில் மனுவை பின்பற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த விசாரணை ஏப்ரல் 9ம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

comments | | Read More...

நட்சத்திர விடுதியில் பொழுதைக்கழித்த பிரபல இளம் நடிகரும் நடிகையும்…

 

கோலிவுட்டில் புது காதல் ஜோடியாக வலம் வருகின்றனர் பரத், சஞ்சனா. பிரபுதேவா, நயன்தாரா காதல் விவகாரம் முற்றுப்பெறாத நிலையில் புதிதாக ஒரு காதல் ஜோடி விஷயம் வெளியாகி உள்ளது. 'பாய்ஸ்', 'எம் மகன்' உள்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பரத், கன்னட நடிகை சஞ்சனா ஜோடி காதல் வலையில் விழுந்திருக்கிறது.

சமீபத்தில் காதலர் தினத்தன்று பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பரத், சஞ்சனா ஜோடி ஜாலியாக பொழுதை கழித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சஞ்சனாவிடம் கேட்டபோது,''என்னுடைய சொந்த வாழ்க்கையை பகிரங்கபடுத்த விரும்பவில்லை. எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்னையில் நான் இழுக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

விராத் கோஹ்லி, ஸ்ரீசாந்த் ஆகியோருடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இதையடுத்து அவர்களுடனான நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். யாராவது ஒருவருடன் நான் காணப்பட்டால் உடனே அவருடன் நான் டேட்டிங் செய்வதாக கூறுவது சரியல்ல. பரத் எனது நெருங்கிய நண்பர். இந்த நட்பு பாதிக்காது என்று நம்புகிறேன்.

சினிமாவில் இவரைத் தவிர வேறு பாய்பிரண்ட் யாரும் எனக்கு கிடையாது'' என்றார். இதுபற்றி பரத் கூறும்போது,''சஞ்சனா எனக்கு நண்பர். அவருடன் காதலர் தினத்தன்று விருந்து சாப்பிட்டதாக கூறுவது தவறு. அன்றைய தினம் என் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தேன். என் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். இப்படி இருக்கும்போது சஞ்சனாவுடன் நான் எப்படி பொழுதை கழித்திருக்க முடியும்'' என்றார்.


comments | | Read More...

மணமகளின் தங்கையை கர்ப்பமாக்கிய லண்டன் மாப்பிள்ளை!

 

லண்டனிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை தனது மனைவியின் தங்கையைக் கர்ப்பவதியாக்கி விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த நவம்பர் மாதம் லண்டனில் இருந்து வந்து வலிகாமம் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்துள்ளார் யாழ்.இணுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞன்.

அத்துடன் பதிவுத் திருமணம் செய்துவிட்டு 3 வாரங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த மேற்படி இளைஞன் அடிக்கடி தான் பதிவுத் திருமணம் செய்த பெண் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார்.

தற்போது அந்த இளைஞன் லண்டன் சென்றுள்ள நிலையில், குறிப்பிட்ட மணப் பெண்ணின் தங்கையை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது அப் பெண் 4 மாதக் கர்ப்பிணி எனத் தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணப் பெண்ணின் பெற்றோர் தங்கையை தீவிர விசாரணைக்குட்படுத்திய போது லண்டன் மாப்பிள்ளையின் திருவிளையாடல் அம்பலத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பில் மாப்பிள்ளையிடம் விசாரணை செய்தபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டது மட்டுமன்றி, இருவரையும் தான் திருமணம் செய்வதாகத் தெரிவித்துள்ளார் மன்மதராசா.

இதேவேளை குறிப்பிட்ட லண்டன் மாப்பிள்ளை மீண்டும் லண்டன் செல்லும் முன் வீட்டாரில் சிலரையும் தனது சகோதரியையும் இலங்கையின் பல இடங்களைச் சுற்றிக் காண்பிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.

இந் நிலையில் நுவரெலியாவில் வைத்து அனைவரும் சாப்பிடச் சென்றபோது தன்னைப் பலாத்காரம் செய்ததாக மணமகளின் தங்கை தெரிவித்தள்ளார்.

இதேநேரம் இச் சம்பவத்தை அடுத்து மணமகள் லண்டன் மாப்பிள்ளையை விவாகரத்து எடுக்க முற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

comments | | Read More...

யாழில் லண்டன் மாப்பிள்ளையின் மன்மதலீலையால் மணமகளின் தங்கை கர்ப்பம்!!

 
 
லண்டனிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை தனது மனைவியின் தங்கையைக் கர்ப்பவதியாக்கி விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
 
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
 
கடந்த நவம்பர் மாதம் லண்டனில் இருந்து வந்து வலிகாமம் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்துள்ளார் யாழ்.இணுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞன்.
 
அத்துடன் பதிவுத் திருமணம் செய்துவிட்டு 3 வாரங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த மேற்படி இளைஞன் அடிக்கடி தான் பதிவுத் திருமணம் செய்த பெண் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார்.
 
தற்போது அந்த இளைஞன் லண்டன் சென்றுள்ள நிலையில், குறிப்பிட்ட மணப் பெண்ணின் தங்கையை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது அப் பெண் 4 மாதக் கர்ப்பிணி எனத் தெரிய வந்துள்ளது.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த மணப் பெண்ணின் பெற்றோர் தங்கையை தீவிர விசாரணைக்குட்படுத்திய போது லண்டன் மாப்பிள்ளையின் திருவிளையாடல் அம்பலத்துக்கு வந்துள்ளது.
 
இது தொடர்பில் மாப்பிள்ளையிடம் விசாரணை செய்தபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டது மட்டுமன்றி, இருவரையும் தான் திருமணம் செய்வதாகத் தெரிவித்துள்ளார் மன்மதராசா.
 
இதேவேளை குறிப்பிட்ட லண்டன் மாப்பிள்ளை மீண்டும் லண்டன் செல்லும் முன் வீட்டாரில் சிலரையும் தனது சகோதரியையும் இலங்கையின் பல இடங்களைச் சுற்றிக் காண்பிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
 
இந் நிலையில் நுவரெலியாவில் வைத்து அனைவரும் சாப்பிடச் சென்றபோது தன்னைப் பலாத்காரம் செய்ததாக மணமகளின் தங்கை தெரிவித்தள்ளார்.
 
இதேநேரம் இச் சம்பவத்தை அடுத்து மணமகள் லண்டன் மாப்பிள்ளையை விவாகரத்து எடுக்க முற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
comments | | Read More...

அசின் எடுத்த அதிரடி முடிவு

 

தயாரிப்பு நிறுவனங்கள் சம்மதித்தால் மட்டுமே, தான் நடிக்கும் திரைப்படங்களின் விபரங்கள் பற்றி கூறுவதாக நாயகி அசின் தெரிவித்துள்ளார்.கொலிவுட்டில் முன்னணி நாயகர்களுடன் நடித்த அசின், பாலிவுட்டின் நட்சத்திர நாயகர்களான "கான்களோடு" நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்

இந்திப்பட நிறுவனங்கள் அனுமதித்தால் மட்டுமே படங்களை பற்றி பேசுவதாக அசின் முடிவெடுத்துள்ளார்.

பாலிவுட்டில் சேதன் பகத்தின் "2 ஸ்டேட்ஸ்" படத்தில் ரன்பீர் கபூருடன் நடிக்கும் அசின், வசூல் நாயகன் ஷாருக்கானுடன் இணைகிறார். அதுமட்டுமின்றி சஜித்தின் இந்திப்படத்திலும் நடிக்கிறார்.

நான் இந்திப்படங்களில் ஆர்வமாக நடித்து வருகிறேன். படநிறுவனங்கள் அனுமதித்தால் மட்டுமே நான் நடிக்கும் படங்களை பற்றி என்னால் பேசமுடியும்.

நான் ஷாருக் கானுடன் இணைந்து நடிக்கும் படம் பற்றி சமீபத்தில் பட உலகில் ஆர்வமாக கேட்டுள்ளார்கள்.

படத்தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டால் மட்டுமே நான் படத்தை பற்றி பேசுவேன் என்று அசின் உறுதியாக கூறியுள்ளார்.

comments | | Read More...

ஆண்களுக்கு மட்டும் – ஒரு பெண் ஆணிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறாள்?


இது நான் சமீபத்தில் படித்தது. ஒரு பெண் ஆணிடம் என்னென்னவெல்லாம் எதிர்பார்க்கிறாள் என்பதை பற்றி. இந்த லிஸ்டை பார்த்தாலே தெரிந்துவிடும் நம் மொத்த வாழ்க்கையில் கணவன் மனைவி உறவுப்பற்றிய ஒரு தெளிவு கிடைத்துவிடும்

ஒரு இளம்பெண் இளைஞனிடம் எதிர்பார்ப்பது

1. அழகாக
2. கம்பீரமாக
3. நல்ல வசதியுடன்
4. சொல்வதை பொருமையாக கேட்கணும்
5. கட்டான உடல் அழகு
6. நல்ல உடையணிய வேண்டும்
7. சின்ன சின்ன விஷயங்களை பாராட்ட வேண்டும்
8. ரொம்ப ரொமாண்டிக்காக இருக்கணும்

அதே பெண் 35 வயதுக்கு பிறகு என்ன எதிர்பார்ப்பாள்

1. பார்க்க சுமாரான தோற்றம்
2. ஓரளவு வசதி
3. கூட பேசிக்கொண்டு இருக்க வேண்டும்
4. வீட்டு சமையலை ரசித்து சாப்பிட வேண்டும்
5. வேலைகளில் கூட உதவி செய்ய வேண்டும்
6. ரங்கநாதன் தெரு…. எங்கே போனாலும் கூட முகம் சுளிக்காமல் வர வேண்டும்
7. எப்பவாவது திடீர்னு காலேஜ் பசங்க மாதிரி டிரஸ் போடணும் ( மத்தவங்க சிரிச்சாலும் கண்டுக்கபடாது)
8. நான் எந்த மொக்க ஜோக் சொன்னாலும் சிரிக்கணும்.

ஒரு பெண் 40 வயதுக்கு பிறகு ஆணிடம் எதிர்பார்ப்பது

1. ரொம்ப பார்க்கிறதுக்கு பக்கி மாதிரி இருக்க கூடாது.
2. நான் பேசினால் என்ன பேசிக்கிட்டு இருக்க என்று கேட்கணும் தூங்க கூடாது
3. ஒழுங்கா வேலைக்கு போகணும்
4. தொப்பையை மறைக்கிற மாதிரி சட்டை போடணும் ( ஷார்ட் சட்டையெல்லாம் மறந்து விடணும்)
5. வாரத்துக்கு ஒரு முறையாவது ஷேவ் செய்யணும்

50 வயதுக்கு மேல் பெண் எதிர்பார்ப்பது

1. பொது இடத்தில் எல்லார் முன்னாடியும் கண்ட இடங்களில் சொறிய கூடாது
2. அடிக்கடி கடன் வாங்க கூடாது
3. நேரம் கிடைக்கறப்பல்லாம் தூங்க கூடாது
4. ஒரே மொக்க ஜோக்கையெ பல முறை சொல்லி படுத்தகூடாது
5. எப்பவாவது ஒரு வாரமாவது ஷேவ் செய்ய வேண்டும்

60 வயதுக்கு மேல் எதிர்பார்ப்பது

1. சின்ன குழந்தைகளை பயமுறுத்த கூடாது
2. பாத்ரூம் எங்க இருக்குன்னு ஞாபகம் வச்சுக்கணும்.
3. குறட்டை சத்தம் மிக கம்மியாக இருக்கணும்
4. எப்பவும் வெறும் உடம்போடு இருக்க கூடாது
5. பல் செட்டு எங்க வைத்தோம் என்று ஞாபகம் இருக்கணும்
6. ஈசியா ஜீரணமாகிற உணவுதான் பிடிக்கணும்( பிரியாணி ஈசியா ஜீரணம் ஆகிடும்தானே)
7. கிழமை, தேதி எல்லாம் ஞாபகம் இருக்கணும்.

70 வயதுக்கு மேல் ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது

1. நல்ல உயிரோடு இருக்கணும்
2. டாய்லட், பாத்ரூம் ஒழுங்கா போய்க்கணும்

80 வயதுக்கு மேல் எதிர்பார்ப்பது

________________________________ ( ஒண்ணுமேயி்ல்லங்க அதான்)

சொன்னது எல்லாத்துக்கும் மேல பெண்ணும் சரி ஆணும் சரி எல்லா வயதிலும் எதிர்பார்ப்பது பரஸ்பர அன்பும் ஆதரவும் ஆதரவும்தான். எனவே கடைசிவரை காதலியுங்கள் (உங்கள் மனைவியை மட்டும்)

comments | | Read More...

“தேசத்தின் பேரன்னை” பார்வதி அம்மாள் அவர்களின் நினைவு நாள் .

 

"தேசத்தின் பேரன்னை" பார்வதி அம்மாள் அவர்களின் நினைவு நாள் இன்றாகும் அவரின் நினைவுகளை சுமந்து சில பதிவுகள். மறு பிரசுரம்.

கவிதுளிகள் சங்கிலியன்

பூத்தகொடி சிறப்பு

கவிதுளிகள்

கவிதுளிகள் வித்தியாசகர்

அன்னைக்கு பழநெடுமாறன் இரங்கல்

அன்னைக்கு காசிஆனந்தனின் இரங்கல்

பாடல்*1
பாடல் : வீரத்தாயே

பாடல்*2
பாடல் : அண்ணன் இருந்தா

பாடல்*3
பாடல் : தாய் என்ற சொல்லுக்கு

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger