2 பெண் குழந்தைகள் குளத்தில் வீசி கொலை: தப்பி ஓடிய தந்தை கைது 2 பெண் குழந்தைகள் குளத்தில் வீசி கொலை: தப்பி ஓடிய தந்தை கைது
கொழிஞ்சாம்பாறை, செப். 28-
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்பிலி. இவர்களது மகள்கள் ஆபித்ராவேணி (வயது 6), கிருஷ்ணவேணி (2 1/2). ஆபித்ராவேணி அத்திக்காடு அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அம்பிலி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைகளும் அவருடனேயே தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் ஆஸ்பத்திரிக்கு சென்ற சுரேந்திரன் மனைவியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் மகள்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு புறப்பட்டார். செல்லும் வழியில் திடீரென்று 2 குழந்தைகளையும் அங்குள்ள ராமசாமி கோவில் குளத்தில் வீசி விட்டார்.
பின்னர் தனது நண்பருடன் செல்போனில் தொடர்பு கொண்டு எனது 2 மகள்களையும் கோவில் குளத்தில் வீசி கொன்று விட்டேன். தற்போது குருவாயூரில் இருக்கிறேன் என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதற்கிடையே கோவில் குளத்தில் 2 குழந்தைகள் பிணம் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் அத்திக்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு அத்திக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் சுரேந்திரனை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது குருவாயூரில் இருப்பது உறுதியானது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சுரேந்திரனை கைது செய்தனர்.
விசாரணையில் குடும்பத்தகராறில் குழந்தைகளை குளத்தில் வீசி கொன்று விட்டதாக கூறியிருக்கிறார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
Post a Comment