பாகிஸ்தானில் பலத்த மழைக்கு 400 பேர் பலி: 45 லட்சம் பேர் பாதிப்பு பாகிஸ்தானில் பலத்த மழைக்கு 400 பேர் பலி: 45 லட்சம் பேர் பாதிப்பு
கராச்சி, செப். 29-
பாகிஸ்தானில் கடந்த 2 வாரங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் இடைவிடாது மழை பெய்கிறது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழைக்கு இதுவரை 400 பேர் பலியாகி உள்ளனர். 45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2 லட்சம் பேர் முற்றிலும் வீடுகளை இழந்து உள்ளனர். அவர்கள் ஆங்காங்கே அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கபட்டு உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலைமை மோசமாகி வருகிறது.
2010-ம் ஆண்டு பெய்த பலத்த மழைக்கு 1800 பேர் பலியானார்கள். அதே போன்ற நிலை இப்போதும் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு சர்வதேச நாடுகள் பல உதவ முன் வந்துள்ளன. ஆனால் பாகிஸ்தான் அதை ஏற்க மறுத்து விட்டது.
Post a Comment