Thursday, 1 March 2012
'அவர் ஏற்கனவே தமிழ்ல நடிச்ச ரெண்டு படமுமே அட்டர்ஃப்ளாப்.ஆனாலும் அவர்தான் இப்ப அதிகம் சம்பளம் வாங்குற நம்பர் ஒன் நடிகை?' மாஸ்கோவின் காவிரி' மற்றும் 'பாணா காத்தாடி' ஆகிய இரு படங்களுக்குப்பின் தெலுங்கு இண்டஸ்ட்ரிக்குப் போய் மீண்டும், கவுதம், மற்றும் மணிரத்னம் படங்கள் மூலம் தமிழுக்கு திரும்பியிருக்கும் சமந்தாதான் மேற்கண்ட புதிருக்கு சொந்தக்காரர் என்பது யாரும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
மணியின்'கடல்' கவுதமின் 'நீதானே என் பொன் வசந்தம்' ஆகிய இரு படங்களுமே ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மும்மொழிப் படங்களாகத் தயாராகி வருவதில்,பாப்பா ரொம்ப ஹேப்பாவாக இருக்கிறார்.
இந்த 2012-ம் வருடத்தில் மட்டும் ரிலீஸாகிற வகையில் இதுவரை மட்டுமே எட்டுப்படங்களைக் கையில் வைத்திருக்கும் சமந்தா, மணிரத்னம் படம் குறித்து தனக்கு ஏற்பட்டிருக்கும் மனச்சங்கடம் குறித்து யாருடம் பேசுவது என்று தெரியாமல் முழித்துக்கொடிருக்கிறாராம்.
அது என்ன என்று தெரிந்துகொள்ள நீங்கள், ஒருமுறையாவது, 'கடல்' படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடிக்கும் லட்சுமி மஞ்சுவின் பேட்டியைப் படிக்க வேண்டும். மஞ்சு தான் அளிக்கும் எல்லா பேட்டிகளிலுமே,'நான் தான் மணி சார் பட ஹீரோயின். கதையில் கவுதமுக்கு ஜோடி நான் தான்' என்று சொல்லி வருகிறார்.
அப்ப 'கடல்' ல என்னோட ரோல் என்னங்க? -இதுதான் சமந்தா கேட்க விரும்பும் கேள்வி.
இதுக்கு சரியான பதிலை மணி சார் வட்டாரத்துல விசாரிச்சி சமந்தாவுக்கு சொன்னீங்கன்னா, அண்ணா உங்க ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது.