டினு வர்மா இயக்கத்தில், அர்ஜூன் நடித்து வரும் காட்டுபுலி படத்தில், ஓவர் லிப் - டூ - லிப் காட்சிகள் இருந்ததால் 14 கட் கொடுத்துள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள். பிரபல பாலிவுட் சண்டை இயக்குநர் டினு வர்மா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இயக்கி வரும் படம் காட்டுபுலி. இப்படத்தில் நாயகனாக அர்ஜூனும், அவருக்கு ஜோடியாக பியங்கா தேசாயும் நடித்துள்ளனர். கூடவே இவர்களுடன் ராஜ் நீஸ் – சாயாலி பகத், அமீத்- ஹன்யா, ஜாஹன் – ஜெனிபர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சமூகத்தைப் பாதுகாக்கும் முக்கியமான மூன்று துறைகளில் ஒன்றான மருத்துவத்துறையில் நுழையும் புல்லுருவிகளால், சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுகிறது என்று அலசியிருக்கிறார் இயக்குனர் டினு வர்மா.
முழுக்கமுழுக்க நரமாமிசம் உண்பவர்கள், மனிதர்களை வேட்டையாடும் காட்சிகள் போன்றவை திரைப்பட ரசிகர்களுக்கு திகிலுடன் கூடிய புது அனுபவமாக இருக்கும். தனது மனைவி குழந்தையுடன் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் டாக்டர் அர்ஜூனுக்கு உதவி செய்ய வரும் மூன்று ஜோடிகள், அதனைத் தொடர்ந்து ஏற்படும் பரபரப்பான சம்பவங்கள், கொலைகள், அதிலிருந்து எப்படி அனைவரையும் அர்ஜூன் காப்பாற்றுகிறார் என்பதே காட்டுப் புலியின் விறுவிறுப்பான கதை.
படத்தில் நிறைய திகில் காட்சிகளை வைத்திருக்கும் டைரக்டர் கூடவே நிறைய கிளுகிளு காட்சிகளையும் அதிகமாக வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஜாஹன் – ஜெனிபர் ஜோடிக்களுக்கு இடையே வரும் லிப் டூ லிப் முத்துக்காட்சியை பார்த்த சென்சார் போர்டு 14 கட் கொடுத்திருக்கிறது. அந்தளவிற்கு படத்தில் கிறங்கடிக்கும் காட்சிகள் இருந்திருக்கிறது. சென்சார் போர்ட்டின் இந்த நடவடிக்கை டைரக்டருக்கு ஒருவிதம் வருத்தம் அளித்தாலும், அனைத்து தரப்பினரும் படத்தைப் பார்த்து ரசிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
டினு வர்மா தனது, கிபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து இருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
Post a Comment