துருக்கி தீவிரவாத அமைப்பு மீது அரசு படையினர் தாக்குதல்: 500 பேர் பலி

அங்காரா, செப். 18 -
துருக்கி நாட்டில் தனிநாடு கேட்டு தெற்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பி.கே.கே. என்னும் குர்திஸ்தான் தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிராக பல தாக்குதலை நடத்தி போராடி வருகிறது. துருக்கி அரசுப் படையினர் இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தாக்குதலை நடத்தினர். கடந்த மாதம் நடந்த இந்த தொடர் தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்ல ப்பட்டனர் என்று அந்நாட்டு பிரதமர் எர்டோகன் அறிவித்துள்ளார். ஈராக் எல்லைப்பகுதியில் செயல்பட்டு வரும் இவர்கள் நடத்தும் தாக்குதலில் அரசுப்படையினர், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. 1984ம் ஆண்டுமுதல் இவர்களிடையே நடந்த வரும் சண்டையில் 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
Post a Comment