News Update :
Home » » டெல்லியில் மானிய விலையில் மேலும் 3 கியாஸ் சிலிண்டர்கள்: முதல் மந்திரி ஷீலாதீட்சித்

டெல்லியில் மானிய விலையில் மேலும் 3 கியாஸ் சிலிண்டர்கள்: முதல் மந்திரி ஷீலாதீட்சித்

Penulis : karthik on Monday 17 September 2012 | 22:37


டெல்லியில் மானிய விலையில் மேலும் 3 கியாஸ் சிலிண்டர்கள்: முதல் மந்திரி ஷீலாதீட்சித் டெல்லியில் மானிய விலையில் மேலும் 3 கியாஸ் சிலிண்டர்கள்: முதல் மந்திரி ஷீலாதீட்சித்

புதுடெல்லி, செப். 18- சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளைக்கு மத்திய அரசு சமீபத்தில் கட்டுப்பாடு விதித்தது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் தேவைப்படும் கூடுதல் சிலிண்டர்களை அன்றைய சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி à ��ள்ளது. இந்த நிலையில் டெல்லியில் கூடுதலாக 3 சிலிண்டர்களை மானிய விலையில் வழங்க டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் டெல்லியில் வசிப்பவர்கள் ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெற முடியும். மண்எண்ணை இல்லாத டெல்லியை உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு கூடுதலாக 3 சமையல் கியாஸ் சிலிண்டர்களை மானிய விலையில் வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டà ��ல்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்- மந்திரி ஷீலா தீட்சித் கூறியதாவது:- டெல்லியில் உள்ள ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 3 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். இத்திட்டத்தின்படி ஒரு சிலிண்டருக்கு மாநில அரசு சுமார் ரூ.350 மானியமாக வழங்கும். இந்த திட்டத்தின் மூலம் வறுமை கோர்ட்டுக்கு கீழே உள்ளவர்கள், அனைவருக்கும் உணவுத்à ��ிட்டம், சிறுகுடில்களில் வசிப்போருக்கான குடும்ப அட்டை வைத்திருக்கும் டெல்லிவாழ் மக்கள் பயன் அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார். ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு மானிய விலையில் மேலும் 6 சமையல் கியாஸ் சிலிண்டர்களை வழங்க கோவா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில குடிமைப்பொருள் வழங்கல் மந்திரி தயானந்த் மந்த்ரேகர் கூறி யதாவது:- சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 6 ஆக குறைத்துள்ளது. கோவா மாநில அரசு அதே மானிய விலையில் மேலும் 6 சிலிண்டர்களை வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை பெறும் வாய்ப்பு சாதாரண மக் களுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger