காரைக்குடி அருகே தி.மு.க. பிரமுகர் குத்திக்கொலை காரைக்குடி அருகே தி.மு.க. பிரமுகர் குத்திக்கொலை
காரைக்குடி, செப். 18-
காரைக்குடி அருகே தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 37), என்ஜினீயர். இவர் சாக்கோட்டை ஒன்றிய தி.மு.க. முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்துள்ளார். நேற்று இரவு பாலசுப்பிரமணியன் காரில் காரைக்குடி சென்றார். பின்னர் இரவு 11 மணி அளவில் à ��ாரில் வேலங்குடி திரும்பினார். அங்குள்ள சாலையில் சென்றபோது ரோட்டில் படுத்து இருந்த நாய் மீது கார் மோதியது. இதில் நாய் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தது. நாய் இறந்ததை பார்த்து அதன் உரிமையாளர் பெரியண்ணன் ஓடிவந்தார். அவர் பாலசுப்பிரமணியனிடம் எப்படி காரை ஏற்றி நாயை கொல்லலாம் என்று கூறி வாக்குவாதம் செய்தார். இதில் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது à ��ெரியண்ணன் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து பாலசுப்பிரமணியன் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டார். பாலசுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் பாலசுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் பாலசுப்பி ரமணியன் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து பள்ளத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து வேலங்குடி அருகே பதுங்கி இருந்த தொழிலாளி பெரியண்ணனை கைது செய்தார். கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு உஷா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பாலசுப்பிரமணியன் உடல் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பர�® �சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் குவிந்துள்ளனர். தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
home
Home
Post a Comment