மூன்றெழுத்து மந்திரம் MBA
இளைஞர்களுக்கான புத்தம் புதிய பிராக்டிகல் தொடர்
பிஸினஸ் பிறக்கிறது!

கடையில் பன்னிரண்டு சோப் வாங்குகிறீர்கள். ஒரு சோப் விலை 18 ரூபாய். மொத்தமாக எவ்வளவு பணம் தரவேண்டும் என்பதற்கு ஐம்பது வயது தாண்டிய மனிதர் எனில் மனக்கணக்குப் போட்டு பார்ப்பார். முப்பதுக்குக் கீழே என்றால் கால்குலேட்டர் தேடுவார். இருபதுக்குக் கீழ் என்றால் செல்போனில் இருக்கும் கால்குலேட்டர்.
குழந்தைகளின் பொம்மைகளை எடுத்துக்கொள்ளுங்கள். சின்னச் சின்ன கிரà ��மக் கடைகளில்கூட சீனநாட்டுப் பொம்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. நீங்கள் கோயம்புத்தூரில் பிளாஸ்டிக் பொம்மைகள் தயாரிப்பவரா? உங்கள் போட்டிக்காரர் அடுத்த தெரு பழனிச்சாமி, மும்பை சவான், நாசிக் தேஷ்முக், பரோடா மேத்தா மட்டுமில்லை, சீனாவின் ஹூவா, லிங் ஆகியோரும்தான். சீனப் பொம்மைகள் அடிமாட்டு விலைக்குக் கிடைக்கிறதா? நீங்களும் குறைந்த விலையில் உங்கள் பொம்மையை எப்படி விற்ப�® �ு என்று வியூகம் வகுக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பிஸினஸ் காணாமல் போய்விடும்.

கற்காலம் முதல் இன்றைய கம்ப்யூட்டர் காலம் வரை வரலாற்றை வேகமாக ஒரு ஓட்டு ஓட்டிவிடுவோம்.
வரலாற்றின் ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தேவைக்குத்தானே விவசாயம் செய்தான். தன் ஆயுதங்களைத் தானே வடிவமைத்தான். தன் குடிசைகளை, வீடுகளை அவனே கட்டினான். காலப்போக்கில் அவன் தேவை விரிவடைà ��்தன. எல்லாத் தேவைகளையும் தானே பூர்த்தி செய்யமுடியாது. பக்கத்து வீட்டுக்காரனுடைய சில அவசியங்களை நிறைவேற்றினால், தன் சில தேவைகளை அவன் பூர்த்தி செய்வான் என உணர்கிறான்.

விவசாயிகள், கொத்தனார்கள், தச்சர்கள், கொல்லர்கள், ஆசிரியர்கள், போர்வீரர்கள் எனத் தனித்திறமைகளை வளர்த்துக்கொண்ட வல்லுநர்கள் உருவாகிறார்கள். கொத்தனார் விவசாயிக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார். விவசாயி, தான் பயிரிடும் அரிசியை, காய்கறியை அவருக்குக் கூலியாகத் தருகிறார். வியாபாரமà � பண்டமாற்று முறையாகத் தொடங்குகிறது.
மனிதனின் முயற்சியால் விவசாயத்தில் உற்பத்தித்திறன் பெருகுகிறது. மாடுகள், ஏர் ஆகியவை பயன்பட ஆரம்பிக்கின்றன. பத்து பேர் வேலை பார்த்த வயல்களில் ஐந்து பேரை வைத்து வேலையை வாங்குகிறான். முதலாளி, தொழிலாளி என்ற இரு மாறுபட்ட இனங்கள் உருவாகின்றன. நிலச் சொந்தக்காரன், தன் கீழ் வேலை பார்ப்பவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியைப�¯ பெறுகிறான். தொழிலாளிகளிடம் குறைந்த சம்பளத்தில் அதிக உழைப்பை எப்படிப் பெறுவது என்னும் ஊழியர் நிர்வாக மேனேஜ்மென்ட் தொடக்கம் இதுதான்.

மக்கள் தொகை பெருகுகிறது. பொருட்களுக்கான தேவை அதிகரிக்கிறது. தனி மனிதர்களால் இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த பற்றாக்குறைகளைச் சமாளிக்க, தனிமனித அல்லது குடும்ப முயற்சிகளாக மட்டுமே இருந்த நெசவு, பண்டபாத் திரங்கள் தயாரிப்பு ஆகியவை குடிசைத் தொழில்களாகப் பரிணாம வளர்ச்சி கண்டன. விவசாயத்தையும் தாண்டித் தொழில்கள் தொடங்கியது இப்போதுதான்.
குடிசைத் தொழில்கள் சிறுசிறு தொழில்களாக வளர்கின்றன. பதினேழாம் நூற்றாண்டு முடிவில் ஒரு மாபெரும் மாற்றம்... அது மனிதகுலத்தின் வருங்காலத்தையே நிரந்தரமாக மாற்றியது. வரலாற்றின் ஆரம்ப காலங்களில், மனிதன் உடல்சக்தியை மட்டுமே பயன்படுத்தி�® �ான். அடுத்ததாக, மாடுகளும், குதிரைகளும் புழக்கத்துக்கு வந்தன. ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போக எப்போதும் நடக்க முடியுமா? மாடுகளும் குதிரைகளும் இழுக்கும் வண்டிகள் வந்தன. 1755-ல் ஜேம்ஸ் வாட் நீராவி எந்திரம் கண்டுபிடித்தார். மனித சக்தியையோ, மற்ற மிருக சக்திகளையோ நம்பியிருக்காமல் இயந்திரங்களால் உற்பத்தி செய்யமுடியும்; உற்பத்தியை ஏராளமான மடங்கு அதிகமாக்க மு டியும் என்று உலகம் உணர்ந்தது.

நீராவி தயாரிக்க கரி தேவைப்பட்டது. இது சுரங்கத் தொழிலின் வளர்ச்சியில் வேகத்தைக் கொண்டுவந்தது. நிலக்கரி உற்பத்தி அதிகமானது. இத�¯ �வரை இரும்பு உற்பத்திக்குச் சாதாரண கரிதான் பயன்பட்டது. நிலக்கரி சாதாரண கரியைவிட வீரியம் கூடியது. தாராளமாகக் கிடைத்த நிலக்கரி இரும்புத் தொழிலின் உற்பத்தித்திறனை அதிகமாக்கியது. இரும்புத் தொழில் ஓஹோ என்று வளர்ந்தது.
நெசவு, கரி, இரும்பு ஆகிய தொழில்களில் அசுர வேக வளர்ச்சி தொடங்கியது. இது மாபெரும் புரட்சி. இந்த வளர்ச்சிக்குத் தொழில் புரட்சி என்று பெயரிட்டார்கள்.
இà ��ும்பால் செய்யப்பட்ட புதிய புதிய இயந்திரங்கள் 18, 19-ம் நூற்றாண்டுகளில் களத்துக்கு வர ஆரம்பித்தன. முதலாளிகள் தொழிலாளிகளைக் கசக்கிப் பிழியத் தொடங்கினார்கள். இயந்திரங்கள் பல தொழிலாளிகளின் வேலைகளைச் செய்யும் சக்தி கொண்டவையாக இருந்தன. முதலாளிகள் இயந்திரங்களை அதிகரித்து, தொழிலாளர்களை வேலைகளிலிருந்து நீக்கினார்கள். தனிப்பட்ட தொழிலாளியின் முக்கியத்துவம் குறையத் தொட ங்கியது. தொழிலாளிகளின் மனக்குறைகள் வெளிப்பட்டு, வெடிக்க ஆரம்பித்தன.
1901-ல் அமெரிக்க நேஷனல் கேஷ் ரிஜிஸ்டர் கம்பெனியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தொழிலாளர்களை அடக்கி ஆளலாம் என்ற சில முதலாளித்துவ சிந்தனைகள் இதனால் ஆட்டம் காண ஆரம்பித்தன. தொழிலாளிகளின் நலம் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்கள். உலகில் முதன் முதலாக ஊழியர் நிர்வாகத் துறை (Personnel Department) நேஷனல�¯ கேஷ் ரிஜிஸ்டர் கம்பெனியில் பிறந்தது.
1903. இன்னொரு அதிரடி மாற்றம். இதைக் கொண்டுவந்தவர் ஹென்றி ஃபோர்ட். ஜேம்ஸ் வாட்டுக்குப் பிறகு வந்த புரட்சித் தலைவர் இவர் என்று சொல்லலாம். எப்படி?
(கற்போம்)
படம்: ஜெ.வேங்கடராஜ்.
படம்: ஜெ.வேங்கடராஜ்.
Post a Comment