டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: உத்தரபிரதேசத்தில் 20 ந்தேதி பந்த் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: உத்தரபிரதேசத்தில் 20 ந்தேதி பந்த் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

லக்னோ, செப்.18- மத்திய அரசு சமீபத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகத்துக்கு கட்டுப்பாடு விதித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இந்த முடிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, ஆளும் கூட்டணி அà ��சில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வருகிற 20-ந்தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்த பாரதீய ஜனதா, இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. வேலை நிறுத்த போராட்டத்திற்கு சமாஜ்வாடி கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கையை கண்டித்து வருகிற 20-ந்தேதி உத்தரபிரதேசத்தி�® �் பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில முதல்- மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவரு மான அகிலேஷ் யாதவ் அறிவித்து உள்ளார். இதனை கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்திரி நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறும்போது, டீசல் விலையை உயர்த்தியது, மானிய விலையான சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கையை குறைத்தது போன்ற மத்திய அரசின் முடிவு சாதாரண மக்களின் வாழ்�® �்கை பரிதாபத்துக்குரியதாகிவிட்டது என்றார்.
Post a Comment