மும்பை மனிஷ் மார்க்கெட்டில் தீ: நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அணைப்பு

மும்பை,செப்.17-
மும்பையின் தென்பகுதியில் அமைந்துள்ள மனிஷ் மார்க்கெட்டில் இன்று மாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்து, நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் பெரிய அளவில் சேதங்கள் எதுவும் இல்லாமல் அணைக்கப்பட்டது. 10 தீயணைப்பு வண்டிகள் சுமார் மூன்று மணிநேரம் போராடி தீயை அணைத்தன. தீ விபத்து பற்றிய செய்தி அறிந்ததும், தீயணைப்பு வண்டிகளும், ஆம்புலன்சுகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. தீ பரவிய கட்டிடங்களை குளிர்விக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மொத்த விற்பனையாளர்களின் முக்கிய மையமான மனிஷ் மார்க்கெட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பரவிய தீயில் 300 கடைகள் எரிந்தன. அச்சம்பவம் பற்றிய விசாரணை தற்போதும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment