சுயநலத்துக்காக திராவிடக்கட்சிகள் தேசிய கட்சிகளிடம் மண்டியிட்டு கிடக்கிறது: சீமான் பேச்சு சுயநலத்துக்காக திராவிடக்கட்சிகள் தேசிய கட்சிகளிடம் மண்டியிட்டு கிடக்கிறது: சீமான் பேச்சு

ஈரோடு, செப். 18-
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் மற்றும் தமிழ்தேசிய இன எழுச்சி பொதுக்கூட்டம் ஈரோடு பெரியார் நகரில் நடந்தது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட தலைவர் செயராசு தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அமைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- என்னை வளர்த்தவர்கள், என்னை உருவாக்�® �ியவர்கள், நான் தலைவராக மதித்தவர்கள் இப்போது நான் பெரியாரை மறந்து விட்டதாக விமர்சிக்கிறார்கள். பெரியார் இல்லாமல் இந்த சமூகத்துக்கு எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது. பெரியார் செய்த சாதி ஒழிப்பு போராட்டம், சமூக நீதிபோர், பெண்ணிய விடுதலை, தீண்டாமை, பகுத்தறிவு கடவுள் மறுப்பு இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் நாங்கள். என்னை பற்றிய விமர்சனங்கள் என்னை சிதைக்கவி ல்லை. மாறாக என்னை செதுக்கி கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் தேசிய இனத்தின் வழிகாட்டியாக பெரியாரை ஏற்றுக் கொள்வோமே தவிர தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரை தாங்கள் சார்ந்திருக்கும் சாதிக்காகவும், மதத்துக்காகவும் சேர்ந்த மக்கள் கூட்டம் இப்போது முதல்முறையாக தமிழுக்காக சேர்ந்து இருக்கிறது. இன்று தமிழ் தேசிய இனம் வீழ்ந்து கிடக்கிறது. அதை எழுச்சி அடைய செய்ய வேண்டுமà � . எப்போது தமிழன் தன்னை இந்தியன் என்று கருதினானோ அப்போது தமிழ் இனம் வீழ்ச்சி அடைந்து விட்டது. தமிழர்கள் முதலில் இனப்பெருமை கொள்ள வேண்டும். திராவிட கட்சிகள் தங்கள் சுயநலத்துக்காக கொள்கைகளை அடகு வைத்து விட்டு தேசிய கட்சிகளிடம் மண்டியிட்டு கிடக்கிறது. தமிழ் மொழியின் மீட்சியே தமிழ் இனத்தின் எழுச்சியாக இருக்க முடியும். இவ்வாறு சீமான் பேசினார்.
Post a Comment