வாழப்பாடி அருகே நெற்றிக் கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி வாழப்பாடி அருகே நெற்றிக் கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

வாழப்பாடி, செப்.29-
வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட கிழக்குகாடு சமயபுரம் கோவில் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வெங்கடாஜலம். அவரது மனைவி வள்ளி (40). கடந்த பத்தாண்டுகளாக கருப்பு நிற வெள்ளாடு ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த ஆடு, மூன்று பெட்டை ஆட்டுக் குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு ஆட்டுக்குட்டிக்கு மட்டும் இரு கண்களுக்கு பதிலாக, நெற்றில் நடுவில் ஒரே ஒரு நெற்றிக்கண்ணுடன் பிறந்தது. முகத்தை விட்à ��ு சற்று வெளியே பிதுங்கியபடி இருக்கும் அந்த நெற்றிக்கண்ணில் இரு கரு விழிகள் இருந்தது. தாடை பகுதி வளைந்து காணப்பட்டதால் அந்த ஆட்டுக்குட்டியால் தாயின் மடியில் இருந்து பால் குடிக்க முடியவில்லை.
அந்த அதிசய ஆட்டுக்குட்டிக்கு பெண் விவசாயி வள்ளி இரு தினங்களாக மாட்டுப்பால் கொடுத்து வந்தார். நெற்றிக்கண்ணுடன் ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது குறித்து தகவல் வெளியானதால், அந்த அதிசய ஆட்டுக்குட்டையை ஏராளமானோர் பார்த்து சென்றனர். நெற்றிக்கண்ணுடன் பிறந்துள்ள ஆட்டுக்குட்டியை கடவுள் கொடுத்த பரிசாக கருதி, பால் மற்றும் மருந்து வாங்கி கொடுத்து வளர்த்தப் போவதாக பெண் விவச ாயி வள்ளி தெரிவித்தார்.
ஆனால், துரதிஷ்டவசமாக அந்த நெற்றிக்கண் ஆட்டுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. பெண் விவசாயி வள்ளி குடும்பத்தினர் மட்டுமின்றி அப்பகுதி மக்களே சோகமடைந்தனர்.
Post a Comment