ராணிப்பேட்டை அருகே லாரியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் கடத்தல்: 3 பேர் தப்பி ஓட்டம் ராணிப்பேட்டை அருகே லாரியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் கடத்தல்: 3 பேர் தப்பி ஓட்டம்

ராணிப்பேட்டை, செப்.29-
ராணிப்பேட்டை அருகே லாரியில் கடத்தப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த மேல்பாடி போலீசார் சேர்காட்டில் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் லாரி நிற்காமல் வேகமாக சென்றது.
இதை பார்த்ததும் போலீசார் இருசக்கர வாகனத்தில் லாரியை விரட்டி சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை பார்த்ததும் கடத்தல்காரர்கள் லாரியை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர். போலீசார் லாரியை சோதனை போட்ட போது அதில் 6 டன் செம்மரம் இருந்தது. கண்டு பிடிக்கபட்டது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். லாரியுடன் செம்மரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்கள் ராணிப்பேட்டை வனதுறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. செம்மரங்கள் சென்னைக்கு கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. தப்பி ஓடிய கடத்தல்காரர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment