திருமங்கலம் அருகே 20 பவுன் நகை கேட்டு இளம்பெண் சித்ரவதை கணவர் மாமியார் மீது புகார் திருமங்கலம் அருகே 20 பவுன் நகை கேட்டு இளம்பெண் சித்ரவதை கணவர் மாமியார் மீது புகார்

திருமங்கலம், செப். 29-
திருமங்கலம் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 31).இவருக்கும் பெரிய பூலாம்பட்டியை சேர்ந்த வசந்தி (29) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது 18 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது. திருமணம் முடிந்ததும் அவர்கள் கர்நாடகம் சென்று தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். பின்னர் அவர்கள் பேரையூர் வந்தனர். அப்போது மஞ்சுநாத் அவரது தந்தை வெள்ளைசாமி, தாயார் ராமுதாய் மற்றும் உறவினர் முத்துமாரி ஆகியோர் 20 பவுன் நகை கூடுதலாக வாங்கி வரும்படி வசந்தியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வசந்தி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கணவர் மஞ்சுநாத், மாமியார் ராமுதாய், மாமனார் வெள்ளைசாமி, மற்றும் முத்துமாரி ஆகியோர் கூடுதல் நகை வாங்கி வரும் படி சித்ரவதை செய்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Post a Comment