ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது: 19 தொழிலாளர்கள் காயம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது: 19 தொழிலாளர்கள் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர், செப். 29-
சிவகாசியில் பட்டாசு ஆலை ஒன்றில் சொக்கம்பட்டி, மூவரை வென்றான், கிருஷ்ணாபுரம், சுரக்காபட்டியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தினமும் வேனில் சென்று வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை வேனில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சிவகாசிக்கு புறப்பட்டது. வேனை அக்னாபுரத்தை சேர்ந்த முனியாண்டி ஓட்டி சென்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சொக்கம்பட்டி விலக்கில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த தொழிலாளர்கள் செல்வி, காமாட்சி, வெள்ளத்தாய், ஜோதி, டிரைவர் முனியாண்டி உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Post a Comment