பரமக்குடியில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ. 15 லட்சம் மோசடி வருவாய் உதவியாளர் ரேசன் கடை ஊழியர் கைது பரமக்குடியில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ. 15 லட்சம் மோசடி வருவாய் உதவியாளர் ரேசன் கடை ஊழியர் கைது

ராமநாதபுரம், செப். 29-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக தனி தாசில்தாரராக இருப்பவர் அனுசுயா. இவருக்கு கீழ் வருவாய் உதவியாளராக கார்த்திகேயன் என்பவர் பணியாற்றி வருகிறார். உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கியதில் ரூ. 15 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் தணிக்கை செய்தபோது இந்த மோசடியை தனி தாசில்தார் அனுசுயா, வருவாய் உதவியாளர் கார்த்திகேயன் மற்றும் பாண்டியூர் ரேசன் கடை விற்பனையாளர் முருகநாதன் ஆகியோர் செய்தது தெரியவந்தது. இவர்கள் போலியாக 8 உறுப்பினர்களை சேர்த்து ரூ. 15 லட்சம் மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அறிக்கையை தணிக்கைத்துறையினர் மாவட்ட கலெக்டரிடம் சமர்பித்தனர். கலெக்டரின் உத்தரவின்பேரில் பரமக்குடி தாசில்தார் செல்லப்பா, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், நாகேஸ்வரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன், முருகநாதன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட தனி தாசில்தாà ��் அனுசுயாவை தேடி வருகின்றனர்.
Post a Comment